பாபு
—-
காரணமே இல்லாமல் (அல்லது காரணம் தெரியாமல்) மனம் உற்சாகமடைவதும் பிறிதொரு சமயம் வறண்டு வடிந்து போவதும் எனக்கு அடிக்கடி நிகழ்வது. சிறுவயதில் சிலோன் ரேடியாவில் கேட்ட ஒரு நல்ல பாடல் போதும் என்னை உற்சாகப்படுத்த. மனம் லேசாகி அந்தரத்தில் மிதக்கும். மேகம் திரண்டு இருட்டிக்கொண்டுவரும் மாலை நேரம் போதும், மனம் பாரமாகிப் போக. இவற்றுக்கெல்லாம் இதுவரை காரணம் புரிந்ததில்லை.
கோவையில் இருந்தபோது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் இரவு பகலாக வேலை செய்வோம். ஆனால் மாலை நேரத்தில் ஒரு மணி நேரமாவது ஓய்வு கொள்வோம். அச்சமயம் அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு (விருப்பி உபயோகிக்கும் சோப்பின் மணம் கூட சில சமயம் என்னை உற்சாகப்படுத்தப் போதுமானது- இப்படி ஒரு மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய) தேநீர் அருந்த போவோம்.
அன்றைய தினம் வேறு நண்பர்களைக் காணமுடியாததால் நான் தனியாக தேநீர் அருந்தப் போனேன். தேநீர் அருந்துவது பத்து நிமிடம் தான் என்றாலும் அது தரும் தெம்பும் உத்வேகமும் அலாதியானது. தேநீர் அருந்தச் சென்ற போது, ஆர்டர் செய்த போது, அருந்திய போது மனம் லேசாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என்னுடைய கெட்ட பழக்கம், என்னைச் சுற்றிலும் நடப்பவற்றை அங்குலம் அங்குலமாக கவனிப்பது. தேநீர் குடித்து முடித்து கிளம்பும்போது மனம் வற்றிப் போயிருந்தது. காரணமே அறிய முடியாமல் உற்சாகம் வடிந்து போயிருந்தது. காத்திருக்கும் ஆராய்ச்சிக்கூடப் பணி காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆராய்ச்சிக்கூடத்திற்கு திருப்பியபோது யோசித்ததுதான் கிழ்க்காணும் கவிதை.
—-
சிதைவு
—-
ஐஸ்கிரீம் கேட்ட
குழந்தையின் விருப்பம்
அந்த அப்பன்காரனால்
அலட்சியம் செய்யப்படாமல் இருந்திருந்தால்
மோதலைத் தவிர்த்துவிட்ட போதிலும்
எதிரெதிர் சைக்கிள்காரர்கள்
முறைத்துக் கொள்ளாமல்
விலகியிருந்தால்
தேநீர் தயாரிப்பின் கழிவுகளை
அழுக்கு பனியன் சிப்பந்தி
வாசலில் விசிறாமல் இருந்திருந்தால்
நழுவிவிட்ட மல்லிகைச்சரத்தை
அந்த நீள்கூந்தல் பெண்
சரியாகச் சூடிக்கொண்டிருந்தால்
கூட்டத்தில் முன்னேபோகும்
எவனையோ மற்றொருவன்
அருவருப்பான வார்த்தைகளால்
அழைக்காமல் இருந்திருந்தால்
ரம்மியமானதாக இருந்திருக்கக்கூடும்
இந்த மாலைநேரத் தெரு.
—-எஸ். பாபு
agribabu@rediffmail.com
Babu Subramanian
Postdoc
Department of Agriculture, Food and Nutritional Science,
410, Agriculture / Forestry Centre,
University of Alberta,
Edmonton T6G 2P5
Alberta, CANADA.
Office phone: 780-492-1778
Home phone: 780-432-6530
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- வசந்தம் காணா வாலிபங்கள்
- வாழ முற்ப்படுதல்….
- ரம்…ரம்மி…ரம்யா
- வெள்ளைக் குதிரை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- பெண்கள் சொத்துரிமை
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- அணிந்துரைகள்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- கவிதை உருவான கதை-3
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- ஹலீம்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- தாயே
- நீயும்…
- இரு கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 4
- எல்லை!
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- இறுதி சில நொடிகளில்
- உன் நினைவுகள்
- அறைகூவல்!
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- காடுகளால் ஆன இனம்
- விட்டில் என்றொரு பொய்
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- பிசாசின் தன் வரலாறு-2
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- எழில் எது ?
- அவரே சொல்லி விட்டார்
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- தொழில்நுட்பச் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16
- இழப்பு