ஆல்பா
25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்கி வருபவர் கவிஞர் மதுபாலிகா. இவரது இயற்பெயர் வள்ளிநாயகம்.
தொழிற்சங்கவாதியான இவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் அக்கறை கொண்டவர். எழுத்து என்பது சமூக வாழ்க்கையோடு இயைந்தது என்பதை நம்புகிறவர். எனவேதான் இவரின் கவிதைகள் சமூக அக்கறை கொண்ட விசயங்களாக அமைந்து விடுகிறது. ஒரு புறம் தொழிலாளர் நலன் குறித்து பேசும்போதும், மறுபுறம் தொழிலாளி இன்றைய சமூக சூழலில் என்னவாக இருக்கிறான் என்பதை அறிந்து அவனை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் இயங்குகிறார்.
உலகமயமாக்கல் தொழிலாளியை நவீன கொத்தடிமையாக்கி வருகிறது. தொழிலாளி என்பவன் சாதாரண தினசரி கூலி வாங்கும் இயந்திரம். ஆணைகளை உள்வாங்கிக் கொண்டு வேலை செய்கிறவன். கார்பரேட் சமூக பொறுப்புணர்வு , மற்றும் நியாய வணிகம் பேசும் இன்றைய கார்பரேட், முதலாளித்துவ சூழலில் அவன் தன்னை இயந்திரமாக பொருத்திக்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறான். தினக்கூலியோடு எல்லாம் முடிந்தது. ஈபிஎப், இன்சுரன்சு ,மற்றும் பல சலுகைகள் எல்லாம் உனக்குத் தேவையில்லை என்று கார்பரேட் சமூகம் நியாயம் பேசும் சூழல் இன்று. இந்த நிலையில் தொழிலாளிக்கு சமூக பாதுகாப்பு என்பது தர தேவையில்லை. அவனுக்கான சலுகைகள் பிச்சையாகத் தரப்படவேண்டியது என்று பன்னாட்டு நிறுவனங்களும், கர்ர்ப்பரேட் அமைப்புகளும் நினைத்து செயல்படுகின்றன. அதே சமயம் படிப்பு அறிவு கொண்டவர்களை அதிக சலுகைகள் என்ற பெயரில் முழு சக்தியையும் உறிஞ்சி சக்கையாக்கி தூரத்தள்ளி விடுகின்றன. கார்ப்பரேட் தொழிலாளர்கள் தங்களை
தொழிலாளர்கள் என்று சொல்ல வெட்கப் படுகிறார்கள். தங்களின் நிறுவனங்களுக்கு விசுவாசமானவர்களாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
லாபம் தரும் தொழில் என்றால் தனியாருக்கு தாரை வார்ப்பது, நஸ்டமடையும் தொழில் என்றால் இழுத்து மூடி விடுவது என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் தொழில் கொள்கை ஆக இருக்கிறது.இந்த நிலையில் தொழிற்சங்கவாதியின் கடமை தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமை பற்றி தொடந்து சொல்லிக்கொண்டிருப்பதும், தொழிற்சங்க உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ள தந்திரோபாயங்களை கைக்கொள்வதும் மிக முக்கியமாக இருக்கிறது.இதை தோழர் வள்ளி நாயகம் அவர்கள் தனது தொழிற்சங்க பணிகளின் ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருபவர். தேசிய அளவிலான் தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியாவார்.
அவரின் இலக்கிய ஈடுபாட்டை1982ல் பாரதி நூற்றாண்டுப்பதிப்பாக வெளிவந்த
” புதிய கீதை ” தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து வந்ததுதான் ” அஸ்வமேதயாகம் ” தொகுப்பாகும். இதில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அவரின் தொழிற்சங்கப் பணியிலிருந்து மாறுபட்டதல்ல. அவரின் குரல் மேடையில் கருத்து முழக்கங்களாக இடம் பெறும். இலக்கிய நிகழ்வுகளில் வெளிப்படையான முழக்கம் என்றில்லாமல் பூடகமான செய்தியாகவும், கலைவடிவமாகவும் வெளிப்படும் . அந்தக் கவிதைகளை பல்வேறு மேடைகளில் பல தோழர்கள் தங்களின் பேச்சினூடே வெளிப்படுத்துவார்கள். அதுவே அக்கவிதைகளின் வெற்றியாகவும் இருக்கும். ஒரு தொழிற்சங்க வாதியின் பார்வையிலிருந்து வேறுபட்ட பார்வை கொண்டதாக அது அமைந்து விட்டிருக்கும்.ஒரு சாதாரண மனிதனின் எழுச்சிக் குரலாகவும் அமைந்திருக்கும்.அந்தத் தளத்திலும், அமைப்பிலும் அதுவே தனித்தன்மையானதாக அமைந்து விடும். இதுவே அவரின் கவிதையின் வெற்றியாகும்.
இதோ அவரின் வார்த்தைகள்: ” இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான கவிதைகளில் பல இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக உள்ளதில் ஆச்சர்யமில்லை . ஏனெனில் அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் முன்பை விட தற்போது மேலும் மோசமடிந்துள்ளன.பெரும்பாலான வளரும் நாடுகளில் இதுதான் நிலை. நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளதால் கூர்மையான விமர்சனப் பார்வை மூலம் தவறுதல்களை உரித்துக் காட்டவும் சரி செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அங்கதக் கவிதைகள் மூலம் ஆழமாக சிலவற்றையும் நகைச்சுவையோடு சிலவற்றையும் தொட்டுக்காட்டி சமகால நிகழ்வுகளை படம் பிடிக்கும் புதிய கவிதைகளும் என்னுள் முகிழ்த்தன. ச்மூக விமர்சனம் என்பது மக்களாட்சியில் ஒரு வகையில் சுய விமர்சனமே. சமூகத்தின் நாலு பேரில் நாமும் ஒருவர். நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த அரசுதான். நம்து நண்பர்கள் பலரும் நாம் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே. எதிரிகள் யாரும் வானத்திலிருந்து குதித்து விடவில்லை. நம்முடைய சம்பந்தமுடையவர்கள்தான் ”
இந்தப் புரிதலோடு எழுதப்பட்டவை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.இக்கவிதைகள் நணபர் ஆர். சிரிதர் நினைவாக சமர்பிக்கப்பட்டிருக்கின்றன.
இவரின் ஆன்மீக அனுபங்கள் வித்தியாசமானவை. ஜக்கி வாசுதேவின் அருட்கடாட்ச வளையத்திற்குள் வந்த பிறகு நிகழும் அற்புத அனுபவங்களை
” சிந்துபூந்துறை ” என்ற தலைப்பில் பாடல்களாக்கி ஒரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
( வாழ்க்கையின் கவிதைகள்= மதுபாலிகா , சுந்தரா பதிப்பகம், சென்னை )
nan7@gmail.com
- மெல்லிசையழிந்த காலம்
- தரிசன மாயை.
- `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ
- கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”
- காலர் (கழுத்துப்பட்டி)
- தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி
- தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்
- கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “
- நூலெனப்படுவது…!
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
- அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் (1473-1543)
- தீக்குச்சிகள்.
- வேத வனம் விருட்சம்- 57
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>
- முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)
- தனிமை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>
- மழை பொதுவுடமையின் கருவி
- விமான நிலைய வரவேற்பொன்றில்…
- இன்னா செய்தாரை ஒறுத்தல்
- காங்கிரஸ் போடும் கணக்கு
- பொறியில் சிக்கும் எலிகள்
- இரண்டு நல்ல ஆரம்பங்கள்
- இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……
- வீடு – மனித நகர்வின் அடையாளம்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- மிஸ்டர் மாறார்
- மீண்டும் புதியகந்தபுராணம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5