பாஷா
கல்லூரி இறுதி நாளான
இன்று கூட நான்
சொல்லிவிடப்போவதில்லை
நான்காண்டுகளாக செதுக்கி
நட்பு சாயம் பூசிய
என் காதலை!
மரங்களின் இடுக்குகளின்
உள் நுழைந்து வரும்
எனக்கான உன் தேடலில்
ஒருபொருளை இன்றும்
நான் உணரப்போவதில்லை!
நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் அமர்ந்து நாட்டியாமாடும்
வார்த்தைகள் அடங்கிய உன்
வாழ்த்து அட்டைகளின் ஒரு
விளக்கத்தை இன்றும்
நான் கேட்டுவிடப்போவதில்லை!
என்
துன்பம் பகிர்ந்து
கண்களில் குளம்கட்டி
கரையேற விடாமல் செய்யும்
உன் முயற்சிகளில்
இன்றும் நான்
மீண்டுவிடப்போவதில்லை!
இன்று விடைபெறாமலேயே
விலகி போய்கொண்டிருக்கிறேன்
விலகிய பாதைகளின் நீட்சியில்
என் காதலை
தூவிக்கொண்டே!
Sikkandar.Nawabjan@ustri.com
- எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 1
- பாரத-ரஷ்யக் கூட்டுறவில் பிரம்மாசுர ஏவுகணைப் படைப்பு -4
- இலை போட்டாச்சு ! 27 – மசால் வடை
- கல்லூரி இறுதி நாள்
- காதல் நாற்பது (19) உன்னிழலுடன் பின்னிக் கொள்வேன்
- வல்லினம் மலேசியாவிலிருந்து புதிய காலாண்டிதழ்
- வரலாறும் புனைவும்
- முன்விலைத்திட்டத்தில் அரிய தமிழ் நூல்கள்
- அந்த நாள் ஞாபகம் – என்னைத் தெரியுமா!
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 17
- மந்தைவெளி மன்னர்கள் – சென்னை 600028
- தமிழரைத் தேடி – 3
- சுந்தர ராமசாமி / கனவும் வாழ்வும்
- வறுமை என்னும் அணையாநெருப்பு : சுயம்புலிங்கத்தின் கவிதைகள்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 8
- எனது கவிதைகளுக்காக ஓர் இருப்பிடம் தேடி…
- தவம்
- மனுஷி
- பெரியபுராணம்- 131- 59. கழற்சிங்க நாயனார் புராணம்
- மடியில் நெருப்பு – 36 (முடிந்தது)
- நாவல்: அமெரிக்கா II அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:10)
- கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 5
- ஒற்றை மரம்