சி. ஜெயபாரதன், கனடா.
உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயக் கோட்டையை
ஈசலாய்ச் சுற்றிவரும்
ஈர்ப்புவிசைத் துணைக்கோள்
உந்தன் ஆத்மக் காதலன் !
உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும்
உடமைப் பண்டமாய்,
பம்பரமாய் ஆட்டு விப்போன்
பொம்மைக் கணவன் !
கலைஞன், காதலன், கணவன் என்னும்
முத்தலைகளும்
ஓருடல் மீது நிற்கலாம் !
ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைஞன் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிலை எடுக்கும் காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
விலை கொடுக்கும் கணவனுக்கு !
வீணையாய் உன்னை மீட்டுபவன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுபவன்,
கலைஞன் !
மாங்குயிலாய் உன்னைக் காட்டுபவன்,
கலைஞன் !
நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுப்பவன் கலைஞன் !
ஊதியம் அளித்து
நாடக மாடும் கலைஞன் உனக்கு
வாடகை வர்த்தகன் !
கள்வெறிக் கவிதையில் உன்னைக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை அடிப்பவன்
உன்னிச்சைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுபவன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி உன்னைத்
தேவ மாதாக்கித்
தினமும் பூஜிப்பவன் உன் காதலன் !
உன் காதலன் கணவ னில்லை !
உன் கணவன் காதல னில்லை !
உன் காதலன் கலைஞ னில்லை !
உன் கலைஞன் கணவ னில்லை !
உன் கணவன் கலைஞ னில்லை !
உன் கலைஞன் காதல னில்லை !
காதலன் கணவ னாகின்
காதல் மறைந்து போகுது !
கலைஞன் கணவ னாகின்
கலை வெளியே ஓடுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத் தாண்டுது !
கணவன் கலைஞ னாகின்
காதல் வெளியே தேடுது !
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 23, 2006]
- இலை போட்டாச்சு 3. எரிசேரி
- கடித இலக்கியம் – 33
- இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12
- பொன்னாடையும் பெண்களும்
- வல்லிக்கண்ணன் நினைவாக
- எனது பார்வையில் அண்ணா
- கலைஞன் ! காதலன் ! கணவன் !
- நடைபாதை செருப்பு
- கீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை
- கொக்கரக்கோ கொக்கரக்கோ
- இனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்
- ஏ ஜே கனகரட்னாவின் நினைவுகளோடு விம்பம் குறும்பட விழா
- கவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’
- இடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்
- புதிய மாதவியின் “நிழல்களைத் தேடி!!!”
- அன்பைத் தேடி
- திருக்குரானில் மனுதர்மமா…
- “தமிழுக்கும் தமிழென்று பேர்.”
- பெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தெய்வம்
- இப்படியுமா
- எங்கும் அழகே!
- எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி!
- ஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்
- திசை அணங்கு
- மடியில் நெருப்பு – 13
- வட்டங்கள் சதுரங்கள்
- கருதி நின் சேவடி…