கறாம்புறாம் சித்திரங்களினூடே…

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

சூபிமுகமது


இஸ்லாமியப் பெண்ணியவாதிகளின் கருத்துக்கோட்பாட்டினை புறந்தள்ளிவிட்டு அவர்கள்மீதான தனிப்பட்ட அவதூறுப்பிரச்சாரத்தை மேற்கொண்டபோதுதான் அன்னைமர்யம் குறித்தும் ஈசாநபியின் பிறப்புபற்றியுமான விவாதம் முன்வந்தது.திருக்குரான் கூறும் அன்னைமர்யமின் கற்பு,ஈசாநபியின் பிறப்பு குறித்த விசயத்தை விஞ்ஞானரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் எப்படி புரிந்துக் கொள்வது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இதற்கான நேர்மையான பதில் வகாபியிடமும் மகமுத் அல்ஹசனிடமும் இல்லை.மாறாக அல்லாவின் மறையுடன் மோதி அதைத் தம் உயிரினும் மேலாகக் கருதி வா௯ழும் உண்மை முஸ்லிம்களை வம்பிழுக்க வேண்டாம் என்பதான உணர்ச்சிவசப்பட்ட நிலையிலான வார்த்தைகளே அதில் இருந்தன.இது உண்மையிலேயே திருக்குரானை புரிந்து கொள்ள இயலாமையினால் தோன்றும் கோபமாகும்.திருக்குரானின் யதார்த்த மொழி மற்றும் புனைவுமொழி சார்ந்த பார்வையை உள்வாங்காததின் காரணமுமாகும்.

சமகால முஸ்லிம் சிந்தனையாளர்களான எலிஜாமுகமது மிர்சாகுலாம் ரசாத்கலிபா உள்ளிட்டோர் தங்களை நபியென்று அறிவிக்க காரணமென்னஎன்பதை பரிசீலிக்க சொன்னபோது மிக நக்கலாக மிர்சாகுலாம் கக்கூஸில் இறந்து போனதாக கூறியுள்ளார். மிகத் தீவிரமாக விவாதித்துக் கோண்டிருக்கும் போது அதை நீர்த்துப்போகச் செய்யுமாறு திசை திருப்பிவிடுவதான நழுவல்வாதமே அதில் தொனித்தது.

இஸ்லாமிய வரலாற்றிலும் கக்கூஸ் பிரச்சினை (இனி கழிவறை என்று சொல்வோம்.)மிக முக்கியமான ஒன்றாகும்.நபிமுகமதுவின் துணைவி அன்னை ஆயிசாவுக்கு நிகழ்ந்த சம்பவம் இதில் முக்கியமானது. எனவே கழிவறைப் பிரச்சினையை கீழான ஒன்றாக பார்க்கவேணடியதில்லை. கழிவறையை கீழானதாகப்பார்க்கும் பார்வை அந்த கழிவுகளை சுமக்கும் மக்களை கீழானவர்களாக பார்க்கும் மேலாதிக்க சாதீய ஒடுக்குமுறை சார்ந்த ஒரு பார்வையாகும். இந்த சாதீயமே வகாபிகளிடம் மிஞ்சிப்போய் இருக்கிறது.

சரி ஆயிசாநாயகி பிரச்சினைக்கு வருவோம்.

பனுமுஸ்தலிக் கூட்டத்தை கட்டுப்படுத்திவிட்டு நபிமுகமது தன் படையணிகளோடு மதினா சென்று கொண்டிருந்தபோது பொழுதுசாய்ந்த நேரம் பாளையமிறங்கினார்கள். அக்கூட்டத்தில் மூடுபல்லக்கில் ஒட்டகையின் மீது பயணம் செய்து வந்த புர்கா அணிந்த ஆயிசாநாயகி ஒதுக்குப்புறம் தேடிச்சென்றூ விட்டு திரும்புவதற்குள் அனைவரும் கிளம்பிவிட்டன்ர்.ஒட்டகப்பாகன் ஆயிசாநாயகி இல்லாததை கவனிக்கவில்லை.தன்னந்தனியாக நின்றிருந்த ஆயிசாநயகி படையினர் தவற விட்ட பொருட்களை கண்டெடுத்துவர நியமிக்கப்பட்ட ச்ப்வான் முஅத்தல் அல்சுலமிஎன்ற முஜாகிர் இளைஞர் இரவில் அவ்விடம் வந்துசேர்ந்தபோது ஆயிசாநாயகியைக் கண்டு தனது ஒட்டகத்தில் அவரை அழைத்து மதீனா வந்தடைந்தார்.

இச்சம்பவம் ஆயிசாநாயகி மீது களங்கத்தை உருவாக்க நபிமுகமதுவும் சந்தேகப்பட்ட காரணத்தால் தனது தந்தை வீட்டில் ஒரு மாதம் சென்று தங்கிவிட்டார். செய்த தவறுக்கு அன்னை ஆயிசாவிடம் இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டியபோது ஆயிசாநாயகி மறுத்து விடுகிறார்.பிறகே திருமறை வசனம் ஆயிசாநாயகி களங்கமற்றவர் என்பதை அறிவிக்கும் விதமாக இறங்கியது.
எனவே கழிவறைக்கு பிரச்சினை குறித்து வகாபி ஒன்றும் குறைத்து மதிப்பிடவேண்டாம்.வஹி (உள்மனத்தூண்டல் )அங்கு கூட இறங்க வாய்ப்பிருக்கிறது.

——————————————

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது