கண்ணிலென்ன கார்காலம் ?

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

வசீகர் நாகராஜன்


கால்கள் புதைந்திட்ட
வெண்பனிக் குவியல்களும்
கம்பளிக்குள் புகுந்திட்ட
கவின்மிகு கன்னியர்களும்
வெண்ணெய் தடவிட்ட
அவசரயுக ரொட்டிகளும்
தொலைக்காட்சி வழங்கிட்ட
புத்தாண்டுக் கொண்டாட்டங்களும்

ஒப்பிடத்தான் துணெ¢டுகிறது

பூசணிப்பூ மகுடமிட்ட
மார்கழிக் கோலங்களையும்
மருதாணி சிவந்திட்ட
கொலுசணிந்த பாதங்களையும்
நெய் மிணுக்க மிளகிட்ட
வெண்பொங்கல் காலைகளையும்
நெஞ்சினில் கலந்திட்ட
ஆண்டாள் பாசுரங்களையும் ….
***

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)