சிவகாசி திலகபாமா
இது
கலியுகமன்று,
கணிணியுகம்.
முகங்களைத்
தொலைத்து விட்டு
முகவாியோடு
சம்பாச ணை.
இதயங்களைத்
தொலைத்துவிட்டு
இயந்திரங்களிடம்
இதயத்தைத் தேடி
இணையம் வழி
இயந்திரப்போர்.
இது
கலியுகமன்று
கணிணியுகம்
காலத்தை வென்றோம்
காலனையும் வென்றோம்
காதலைவெல்ல முடியாது
கணிணியோடு தினமொரு
காதல் போர்.
இது
கலியுகமன்று
கணிணியுகம்
இதழ்களைப்
புரட்டவும்
இயலாதென
இணையம் வழிச்
செய்திகள்.
தூரங்களைத்
துரத்துவதும்
துயரமென
வணிகங்கள் கூட
வலைப்பின்னலின்
வலையில்
இது
கலியுகமன்று
கணிணியுகம்
Thinnai 2000 June 11
திண்ணை
|