கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

ஆசாரகீனன்


கனடாவில் வாழும் முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜி. இவருடைய நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப்படைவாத முஸ்லிம்களால் மரண தண்டனை ஃபட்வா விதிக்கப்பட்டது. தற்போது இர்ஷத் பலத்த பாதுகாப்புடன் நடமாடி வருகிறார்.

இந்தப் புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அரபி மொழிப் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டால் தமிழக இடதுசாரிகள் அதை எப்படி எதிர்கொள்வர் என்பது பற்றிய கற்பனை ஒன்றையும் ‘நகைச்சுவையும் வித்தியாசமானவையும் ‘ பகுதியில் எழுதியிருந்தேன்.

பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் வாழும், இன்னமும் அரபி மொழியைக் கற்றுக் கொள்ளாத உருது மொழி மட்டும் தெரிந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் இடதுசாரி பல-பண்பாட்டியப் போராளிகளின் வசதிக்காக இந்தப் புத்தகம் உருது மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வசதி உள்ள அன்பர்கள் இந்த உருது மொழிப் பதிப்பை இலவசமாகப் படித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழி மலிவு விலைப் பதிப்பும் (Paperback edition) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் HOW I BECAME A MUSLIM REFUSENIK என்ற தலைப்பிலான முதல் அத்தியாயத்தைப் படிக்க பார்ன்ஸ் & நோபிள் புத்தக விற்பனையாளரின் இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிப்புக்கு பேராசிரியர் இமாம் கலீல் முஹம்மத் (Khaleel Mohammed) ஒரு நல்ல முன்னுரையை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தை தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் இர்ஷத் மஞ்ஜியைத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: irshad@muslim-refusenik.com

aacharakeen@yaoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்