கடிதம் – ஏப்ரல் 15, 2004

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சென்ற வாரத்தில் வந்திருந்த முரளி ஆனந்த் கடிதத்திற்கு..

நண்பருக்கு,

வழக்கம்போவொரு வக்காலத்து அல்லது சுயவக்காலத்துக் கடிதம். இதுபோன்ற கடிதங்களைத் திண்ணையில் ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. நான் சொல்லவருவது ஏற்கவே ?தரன், மற்றும் சிலரால் சொல்லபட்டதுதான். அதாவது விமர்சனம் செய்வதற்கு வாசகன் என்கிற தகுதிபோதும். எழுத்தாளன் என்கிற தகுதிவேண்டாம். ெ ?யமோகனுக்கு, வைரமுத்துவையும், சு ?ாதாவையும் விமர்சனங்கள் என்ற போர்வையில் காழ்ப்புகளைத் திண்ணை இதழில் பொதுவில் வைக்கும்போது அதுகுறித்து ஒட்டியும் வெட்டியும் வருகின்ற கருத்துக்களை ஏற்கின்ற மனப் பக்குவம்வேண்டும். வாசகர்கள் அனைவருமே பூசாரிகளாக இருக்கமாட்டார்களென்பது படைப்புலகின் பாலபாடம்.

என் எழுத்துக்களை எட்டாங்கிளாே ?ாடு எப்படி ஓப்பீடு செய்யலாம் ? என்று சண்டைக்கு வரப்போவதில்லை. ஆனால், இந்த ‘எட்டாங்கிளா ? ‘ வார்த்தைப் பிரயோகத்தை சு ?ாதாவின் அறிவியல் புனைகதைகளை விமர்சனம் செய்விக்கும்போதுகூட, ஏற்கனவே ெ ?யமோகன் உபயோகபடுத்தியிருந்தார். அதாவது அதில் எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்த அறிவியல் உண்மை, சு ?ாதாவுக்குத் தெரியவில்லை என்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். ஆக இரண்டாவ்து முறையாக எட்டாங்கிளா ? அளவுகோல்.

இதனை படிக்கும்போது, எங்கள் கிராமத்து மாட்டு தரகர் வெங்கட்டு என்பவர் ஞாபகத்திற்கு வருகிறார். சந்தையில் அவரது மாட்டு வியாபாராம், துண்டால் மூடப்பட்ட கைவிரல்களில் நடக்கும். அனேகமாக அவரது வியாபாரம் ஒன்பது நூறுக்குள் முடிந்திருக்கும். என் கிராமத்து நண்பனிடம் இதற்குக் காரணம் கேட்டபோது, ‘அவரது கைகளை கவனித்ததுண்டல்லவா ‘, என்றான். ‘ஏன் ? அதற்கென்ன ? ‘, என்றேன். அவரது இடது கையில் சுண்டுவிரல் மொக்கையாகவிருக்கும். சொல்லப்போனால் இடதுகையில் நான்குவிரல்கள் என்றே கொள்ளவேண்டும். ‘அவருக்கிருப்பது. இருகைகளிலும் சேர்த்து ஒன்பது விரல்கள், அதனாலேயே அவரது மாட்டுவியாபாரமனைத்தும் ஒன்பது நூறுக்குள் பெரும்பாலும் அடங்குகிறது ‘, என்றென்னை ஆச்சரியப்படுத்தினான். இதனைத்தான் உங்கள் எட்டாங்கிளா ? எள்ளலுக்கும் பொருத்திப்பார்க்கிறேன்.

உங்களைப் போன்றவர்கள் ஒருபக்கம், படைப்பின் வெற்றி வாசகர்களின் எண்ணிக்கையில்லை என்று எழுதுகிறீர்கள். இன்னொரு பக்கம், ஆரம்பக்கட்ட எழுத்தாளனை பார்த்து என்ன கிழித்துவிட்டாய் ? என்ற கேள்வி. சரி படைப்பின் வெற்றியென்பது அதற்குக் கிடைக்கின்ற பரிசுகளைப் பொறுத்ததாவென்றால், அதற்கு உங்கள் பதில், பரிசு யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதைனைப் பொறுத்தது என்கிறீர்கள்..

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் எழுத்தாளனாக இல்லையென்றாலும் பொதுப்படுத்தப்படும் கருத்துக்கு, நியாயமாக எதிராட வாசகனான எனக்கு உரிைமையிருக்கிறது. அசலான படைப்பாளிகள் இதனை அறிவார்கள். என் தரப்பு நியாயத்தையே திண்ணையிற் பலர் ஏற்கனவே தங்கள் கடிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே சாதனை கண்ட எழுத்தாளர்களுக்குக் குறைவில்லை. ெ ?யகாந்தன், புதுமைப்பித்தன், கலைஞர், விந்தன், வைரமுத்து, சு ?ாதா, நா.பா..,சு.ரா. மு.வா. இரா.மு. லாசா.ரா. எ ?. இராமகிரு ?ணன், எ ?.பொ., இமயம், புலிநகக்கொன்றை கிரு ?ணன் என, பட்டியல் மனதில் நீளுகிறது. இங்கே நான் சொல்லமறந்தவர்கள் பலரிருக்கலாம். தவிரவும் கவிஞர்களையும் குறிப்பிட மறந்துவிட்டேன். அச்சுப் பிழைகள் பார்ப்பவர்கள் கூட ஏதோவொரு வகையிற் இலக்கியத்திற்குத் தொண்டாற்றுகிறார்கள்.

பிரான்நாட்டு இலக்கியவட்டத்தில் தமிழ்நாட்டு பாமாவையும், கேரள முகுந்தனையும், கர்நாடக அனந்ததமூர்த்தியையும் இன்றைக்குப் புகழ்வதைக் கேட்கின்ற அளவுகோலை வைத்து, இந்தியாவிலுள்ள மற்றவர்களை எழுத்தாளர்களல்ல என்று நான் தீர்மானிப்பது அபத்தமாகவே முடியும்.. இது தவிர எழுத்தையே வேள்வியாகக் கொண்டு, விளம்பர உத்திகளின்றி, குழுவினைச் சாராமல் அடையாளமின்றி வாழ்ந்து முடிந்தவர்கள், வாழ்பவர்கள் ஏராளம். கணையாழியின் வாசகர்வட்டத்தில் ஒருமுறை கடலூர் பக்கமிருந்துவந்திருந்த ஒரு இளைஞரின் எழுத்துக்களைப் படித்து, தூக்கமிழந்திருக்கிறேன்…எழுத்தாற்றல், படைப்புகுணம் எங்கேயுமிருக்கிறது. என்னசெய்வது வரலாறு பெரும்பாலும் வெற்றிபெற்றவர்களைக் குறித்து எழுதப் படுவது..படுகிறது.

நான் எழுதுவதுதான் எழுத்து என்கின்ற அசுர குணம் அரசியல்வாதிகளுக்கிருக்கலாம். எழுத்தாளனுக்குக் கூடாது என்பதே என் கருத்து. என் கருத்து வைரமுத்துவைக் குறித்து எழுதப்பட்டதற்கான அபிப்ராயமேயன்றி, ெ ?யமோகனின் எழுத்துக்கள் குறித்தானதல்ல என்பதையும் நண்பர் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

இறுதியாக, என் எட்டாங்கிளா ? எழுத்து குறித்து சிலவார்த்தைகள்:

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதிவருகிறேன். வணிக இதழ்களில் எழுதியிருந்தபோதிலும், என்னைப் பெரிதும் அடையாளப்படுத்தியுள்ளது இன்றைக்குத் திண்ணை இதழே. திண்ணையில் எழுதத் தொடங்கி, என் முகமறியாது, என் எழுத்தின்வழி தொடர்பு கொண்டுள்ள வாசகர்கள், எழுத்தாள நண்பர்களின் எண்ணிக்கை, என் நான்காண்டுகால எழுத்துக்கு அதிகம். காழ்ப்பற்றவர்கள் பாராட்டுகிறார்கள். திண்ணையில் வெளிவரும் எனது ‘ நீலக்கடல் ‘ நாவல் வித்தியாசமான படைப்பென்று, பிரெஞ்சு எழுத்தாள நண்பரால், ஒரு பிரெஞ்சு பதிப்பகத்திற்குச் சிபாரிசு செய்யபட்டுள்ளது என்பதை தயைகூர்ந்து அறியவும். இதற்காக, திண்ணை இதழுக்கு நான் பெரிதும் கடன்பட்டுள்ளேன்.

திண்ணையைத் தவிர, பதிவுகள், திசைகள் போன்ற இணைய இதழ்களே, எனது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவை என்பதை நான் மறப்பதில்லை. பெரிதாய் எதனையும் செய்துவிடவில்லை என்பதும் உண்மை. இன்றைய தேதியில் நான் ஒரு வாசகன் மட்டுமே.

இன்னொன்று சொல்லவேண்டும், எண்ணிக்கையைவைத்தோ, பெயர்களைவைத்தோ படைப்புக்களைத் தீர்மானிக்காதீர்கள். நாைளை தமிழகத்தின் இலக்கிய படைப்பாளிகளின் வரிசை வேறாகக் கூட இருக்கலாம். ‘எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ ? ‘ என்று கிணறுவெட்டும் கேள்விகள் வேண்டாம். சிலநேரங்களில் விறகுவெட்டியின் தோற்றங்களில் பூதங்கள் புறப்பட வாய்ப்புண்டு.

ஒரு படைப்பின்வெற்றியே படைப்பாளியின்வெற்றி. அவ்வெற்றியின் பின்னால் எழுகின்ற விமர்சனம், வாசகன், காலமென பங்குதாரர்கள் உண்டு. இவர்களின் தயவில்லாமல் எதுவும் நடவாது.

நாகரத்தினம் கிரு ?ணா

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா