கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

இப்னு பஷீர்


சூரியா என்று ஒருவர் புதிதாக ஆட்டத்தில் களமிறங்கியிருக்கிறார். ஆட்டம் என்னவோ பழசுதான். இ ?லாத்தை குறிவைத்து அம்பு எய்ய வேண்டும். அம்புகளும் பழசு கண்ணா பழசுதான். ஏற்கனவே பல முறை இஸ்லாத்தை நோக்கி எய்து முனை மழுங்கிப் போனவை. சில அம்புகள் எய்தவரையே திரும்ப தாக்கும் திறன் படைத்தவை. சிலர் ஒளிந்து நின்று கல்லெறிவார்கள். காரணம், அவர்கள் ?இருக்குமிடம் ? தெரிந்து போனால் அதை குறித்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதே என்ற அச்சமாக இருக்கலாம்.

இவர்கள் அதிகம் பயன் படுத்தும் வார்த்தைகள்: இஸ்லாமிய அடிப்படை வாதம், மதவாதம், இனவாதம், மதவெறி, இனவெறி ஆகியவைகளாகும். இவற்றில் ‘இஸ்லாமிய ‘ என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டால், மற்ற வார்த்தைகள் இவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும் என்பதை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். அல்லது கவனமாக ‘மறந்து ‘ விடுவார்கள். இஸ்லாம் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் இவர்களுக்கு அலர்ஜி தான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ‘இஸ்லாமோஃபோபியா ‘வால் பாதிக்கப் பட்டவர்கள் இவர்கள். (பார்க்க: http://www.fairuk.org/intro.htm )

இனி சூரியாவின் கட்டுரைக்கு வருவோம்.

சூரியா ரூமியின் புத்தகத்தை படித்தாரா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில், அதற்கு ‘சீனி பூசிய தாலிபானிசம் ‘ என்று அவர் பெயர் சூட்டி இருப்பது அவரது இஸ்லாமோஃபோபியா மனப்போக்கை தெளிவாக காட்டுகிறது. கட்டுரை நெடுக தன்னை ஒரு ‘சராசரி இந்து ‘வாக காட்டிக் கொள்ள அவர் எடுத்துள்ள முயற்சிகள் வீணானவையே.

பிற மதங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தவறானவை. இஸ்லாம் மட்டும் எதுவுமே தவறாக இல்லாத முற்றிலும் முழுமையான மார்க்கம் என்பது அடிப்படைவாத மத நம்பிக்கை அல்லவா ? என்று கேட்கிறார் சூரியா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு அறிந்த முஸ்லிம்கள் இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். விவாதம் என்று வரும்போது, தனது நிலைப்பாட்டை விளக்கவும் இவர்கள் தயார். இது சூரியாவின் பாஷையில் அடிப்படைவாத மத நம்பிக்கை என்றால் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே!

இந்த நம்பிக்கை, பிற மதத்தினருடன் கலந்து பழக நிச்சயமாக ஒரு தடையாக இருக்க போவதில்லை. பிற மதத்தினரை இழிவாக / தரக்குறைவாக பேசுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. ‘உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் ‘ என்று சொல்லும்படி குர்ஆன் (அத்தியாயம் 109 வசனம் 6) முஸ்லிம்களுக்கு சொல்லித்தருகிறது.

இஸ்லாம் சகிப்புத்தன்மை இல்லாதது, பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்குகிறது, பிற மதங்களை அழிக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளெல்லாம், நான் முன்பு குறிப்பிட்டது போன்று, இஸ்லாத்தின் மீது பல முறை எய்யப்பட்டு முனை மழுங்கிப்போன ஈட்டிகள். இதற்கெல்லாம் பல அறிஞர்கள் பலமுறை பதில் அளித்திருக்கிறார்கள்.

பரிணாமக் கொள்கையை முஸ்லிம்கள் ஏற்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு. உண்மைதான். அதற்கான ஆதாரபூர்வமான பதில், நீங்கள் கேட்டது போல் போதுமான அறிவியல் கோட்பாடுகளுடன், இதோ இந்த இணையத்தளத்தில் இருக்கிறது.

http://www.islam-australia.com.au/harunyahya/tellmeaboutthecreation01.html

இறுதியாக, நீங்கள் சொன்ன ‘வரலாற்றை தங்கள் இனவாத நோக்கத்துக்கு ஏற்ப எப்படியும் திரிக்கும் இயல்பும் அதில் தயக்கமே இல்லாத தன்மையும் ‘ யாருக்கு இருந்தது / இருக்கிறது என்பதை அறிய கடந்த சில மாதங்களின் செய்தித்தாட்களை பார்த்தாலே போதும். உங்கள் வசதிக்காக ஒரு இணைய சுட்டியும் கொடுத்துள்ளேன்.

http://www.guardian.co.uk/india/story/0,12559,1247694,00.html

முஸ்லிம்களிடையே இல்லாத, தேவையும் படாத தன்மை இது.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்