கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மெமிட்டிக் க்ளோன்கள் என்பது ஒன்றும் இழிவான பழிச்சொல் அல்லவே. மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது. பரிணாம அறிவியலாகட்டும், ஆர்.எஸ்.எஸ் குறித்த புரிதலாகட்டும் அல்லது நீங்கள் திருமறை என நம்பும் நூலை குறித்த நம்பிக்கையாகட்டும் இப்னுவுக்கும் தமாமுக்கும் மனமண்டலத்தில் என்ன வேறுபாடுகள் உள்ளன ? எனவே மரபணு நகலியை ஒத்ததோர் மனத்திய நகலிகளாக இருக்கும் இருவரை அவ்வாறு விளித்தமைக்கு இப்னுவுக்கும் தமாமுக்கும் இத்தனை வருத்தம்/ஆத்திரம் வருவானேன் ? சரி இனி விஷயத்திற்கு வரலாம். இப்னு குரானிலிருப்பதாக ஏதோ ஒரு மேற்கோளை வைத்து உங்களுக்குள் நீங்கள் இழிவாக பெயரிட்டு அழைத்து கொள்ளவேண்டாம் என்கிறார். இந்த இழிவான பெயர்கள்தாம் என்ன ? லோகஸ்ட்கள், மெமிட்டிக் க்ளோன்கள் முதல் க்ளவுன்கள் ஊடாக விசிலடிச்சான் குஞ்சுகள் வரை. இந்நிலையில் அ.முஹம்மது இஸ்மாயில் என்னும் சகோதரர் எழுதுகிறார், ‘திருக்குரான் வசனம் 5:60 குரங்குகளாக, பன்றிகளாக இருக்கிறார்கள் என்றும் வசனம் 9:97ல் நயவஞ்சகர்கள் குரானை அறியக் கூடாது என்று வருவதற்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. ‘ என்கிறார். (இரண்டு முரண்பட்ட மேற்கோள்களை பக்கத்தில் வைத்துக் காட்டிய குசும்பு.) அரவிந்தன் நீலகண்டனோ அல்லது அவனது மெமிட்டிக் க்ளோன்கள் எனக் கருதப்படுபவர்களோ (அல்லது அரவிந்தன் நீலகண்டன் யாருடைய மெமிட்டிக் க்ளோனாக கருதப்படுகிறானோ – அவர்களோ) எப்பொழுதாவது இப்னுவையோ அல்லது தமாமையோ மேற்கூறியது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி பேசியதுண்டா ?(அல்லது திருமறை என நம்பப்படும் நூலிலிருந்து அந்த நம்பிக்கை உள்ள இருவரே இரு வேறுவிதமான மேற்கோள்களைக் காட்டியதன் பின்னணியிலுள்ளது இதயத்தின் மொழியின் முரண்-நகை தனித்தன்மை கொண்ட நகைச்சுவையுணர்வு ).

இனி தமாமின் மோசடிகளுக்கு மீண்டும்:

மேற்கோள் மோசடி-1:

முதலில் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும் என்னும் தலைப்பில் தம்மாம் பைசல் எழுதிய கட்டுரையில் தமாம் பைசல் கூறியதாவது: ‘ஆர்.எஸ்.எஸ் காரர்களின் வேத புத்தகம் என்று அவர்கள் கூறுவது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. மறுக்கவும் மாட்டார்கள். அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறார். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம் ? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா ? இதோ படியுங்கள்.“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண ‘ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை ? ‘ என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”(குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139) இது ஒரு மோசடி மேற்கோள் என்பதைக் காட்டியவுடன் அவர் செய்தது என்ன ? ‘இந்து தர்மம் என்று எழுதியதில் மோசடி ஒன்றும் இல்லை. வேறு ஒரு மேற்கோளின் வார்த்தைகள் இடம் மாறிவிட்டது அவ்வளவுதான் ‘. என்றார் (அக்டோபர் 7, 2004, திண்ணையில் ‘சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள் ‘ என ஃபைசல் எழுதிய பதில்.

Bunch of Thoughts நூலை இம்மனிதர் கண்ணால் கண்டிருப்பாரா என்பதே கேள்விக் குறியான விஷயம். முழுமையாக அவரது இந்த மோசடி எனக்கு தெரிந்திருந்தும் கூட அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்றே நான் ‘முன்பே படித்த ஞாபகம் ‘ என்றெல்லாம் கூறினேன். அவராகவே இது ‘நான் இந்த பிரச்சார பிரசுத்திலிருந்து எடுத்து எழுதுகிறேன். நானாக படித்ததில்லை ‘ எனக் கூறியிருக்கலாம். ஆனால் ஏனோ அவருக்கு அவ்வாறு ஒத்துக் கொள்ளும் பக்குவமோ அல்லது நேர்மையோ வரவில்லை. மாறாக மனிதர் மேலும் மோசடி மேற்கோள்களை (இந்த முறை பக்கம்-எண் கூட இல்லாமல்.) அடுக்குகிறார். மிகத்தெளிவாக பக்கம் மற்றும் அத்தியாயம் சகிதம் சாதிய ஏற்ற தாழ்வுகளை குருஜி வக்கிரம் என்று கண்டிப்பதையே காட்டியாயிற்று. ஆனால் அவையெல்லாம் மனிதரின் கண்ணுக்குள் ஏறுவதாக காணோம். லாலா ஹர்தயாள் கூறுவதன் ஒரு நிகழ்ச்சி – சீர்கெட்ட சாதிய சமுதாயத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி எந்த இடத்தில் பிரிட்டிஷ் காரன் ஏறமுயன்றான் என்பதை காட்டுவதுதானே தவிர மாறாக அந்த ஏற்ற தாழ்வினை நியாயப்படுத்துவதல்ல. உதாரணமாக ‘பிராம்மணனை சூத்திரன் வணங்கும் அந்த பழையநிலையை நாம் கொணர வேண்டும் ‘ என குருஜி எங்காவது கூறியிருந்தால் தமாம் கூறுவதை ஏற்கலாம். தமாம் கூறுகிற அளவுக்கு வெளிப்படையாக மனுஸ்மிருதிக்கு குருஜி வக்காலத்து வாங்குபவராக இருந்தால் அவ்வாறு அல்லவா கூறியிருக்க வேண்டும். ? இன்னமும் சொன்னால் மிகமுக்கியமான மார்க்சியவாதி ஒருவர் கூட குருஜி குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஒப்பான ஒரு இயல்பினைக் கூறி வர்ண அமைப்பின் அந்த இயல்பினைப் பாராட்டியுள்ளார் என வைத்துக்கொள்வோம் (பாராட்டியுள்ளார்) எனவே அவர் மனுஸ்மிருதியை ஆதரிக்கிறார் என்றாகிவிடுமா ? ஒரு பிரிட்டிஷ் ஆவணத்தில் உள்ளதாக – பிரிட்டிஷாரின் நோக்கம் என்ன என்பதை எடுத்துக்காட்டும்- ஒரு நிகழ்ச்சியே தவிர அது குருஜி விரும்பும் இலட்சிய சமுதாயத்தைக் குறித்ததல்ல அந்த மேற்கோள். இன்னமும் சொன்னால், குருஜி தாம் காண விரும்பும் இலட்சிய பாரத சமுதாயத்தை விவரிக்கையில் எவ்விடத்திலும் வர்ணாஸ்ரமத்தைக் குறித்து பேசவில்லை. இந்நிலையில் இதுதான் குருஜி கூறிய ஹிந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்றும் அவர் இதைதான் ஹிந்து தர்மம் என்றார் என்றும் கூறுவது எத்தகைய மோசடி. அதைவிட மோசடித்தனம் அந்த வாக்கியம் வேறொரு இடத்திலிருந்து இங்கே வந்து விட்டது எனக் கூறுவது. ஏனெனில் மேற்கோளை தொட்டடுத்து (அடுத்த பாராவில் கூட இல்லை.) வரும் வாசகங்கள்: ‘Letters are available, written by that Englishman to the India Office in England, relating all this and saying that unless the Englishman ousted the Brahmin from that position and occupied it himself, i.e., became as respectable or even more, his empire could not last long. With that end in view, the Englishman began training us systematically in various ways. The first thing he taught was that this was one great ‘continent ‘ and not a country ‘ இவற்றை ஏன் தமாம் விட்டுவிட்டார் ? சரி இவை தேவையில்லை என அவர் கருதியிருந்தால் கூட ஏன் வேறொரு வாக்கியத்தை மேற்படி மேற்கோளின் தொடர்ச்சியாக காட்சியளிக்கும் ஒரு வாசகத்தை- ஏன் இடைச்செருகல் செய்யவேண்டும் ? இதைத்தான் மோசடி மட்டுமல்ல பொய் என்கிறேன்.ஏனென்றால், தமாம் மேற்கோள் காட்டிய அதே வரிகளை (இடம் மாறிய வாசகம் உட்பட இடம் பெற்றிருக்கும்படியாக) வேறொரு பிரச்சார பிரசுரத்திலிருந்து காட்டுகிறேன். இப்போதாவது வாக்கியம் மாறவில்லை தாம் மற்றொரு பிரச்சார பிரசுரத்தைப் பார்த்து காப்பியடித்து எழுதியதுதான் உண்மை என்பதை ஒத்துக்கொள்வாரா ?

இதே மோசடி மேற்கோள் தமாம் இந்த பிரசுரத்திலிருந்துதான் எடுத்தார் என்று நான் கூறவில்லை. ஏறத்தாழ ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு பிரச்சார நூல்கள் பலவற்றிலும் இந்த மோசடி மேற்கோள் கிடைக்கிறது. தமாமின் மோசடி எனவே நூலைப் படிக்காமலேயே படித்ததாக புளுகியதிலும், அந்த புளுகு சுட்டிக்காட்டப்பட்டபோது மேலும் புளுகலாக ஏதோ ஒரு வாக்கியம் ஒரு மேற்கோளிலிருந்து மற்றொரு மேற்கோளுக்கு போனதாக உளறியதிலும் உள்ளது. ஆனால் தமாமின் மோசடி இதோடு நிற்கவில்லை. மேற்கோளின் மொழிபெயர்ப்பிலும், அதன் இடையே இருக்கும் தமக்கு பாதகமான வாசகங்களை விழுங்கி ஏப்பம் விடுவதிலும் உள்ளது.

மேற்கோள் மோசடி-2:

1. தமாமின் மேற்கோள்: ‘வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே – நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும் – அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம். ‘பிராமணர்கள் ‘ தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். ‘

குருஜியின் மேற்கோள்: ‘If a Brahaman became great by imparting knowledge, a Kshatriya was hailed as equally great by for destroying the enemy. No less important was the Vaishya who fed and sustained society through agriculture and trade or the Shudra who served society through his art and craft. Together and by their mutual interdependence in a spirit of identity, they constituted the social order. ‘ உண்மையான மொழி பெயர்ப்பு எவ்வாறு இருந்திருக்க வேண்டும் ? ‘ஒரு பிராமணன் கல்வி கற்பிப்பதால் பெரியவனான் என்றால் ஷத்திரியன் எதிரிகளை அழிப்பதால் அதே அளவு பெரியவனாவான். விவசாயத்தாலும் வணிகத்தாலும் சமுதாயத்திற்கு உணவளித்து வாழவைக்கும் வணிகர்களும் கலையாலும் தொழில் வல்லமைகளாலும் சமுதாயத்திற்கு சேவை செய்யும் சூத்திரரும் சிறிதளவும் குறைந்தவரல்ல. ‘

தமாமின் திருகு வேலை:ஏதோ குருஜி பிராமணர்கள் தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களையெல்லாம் அவர்கள் தொழில்களை செய்பவர்கள் மட்டுமே என்றும் குறிப்பிடுவதாகக் காட்டும்படி மொழிபெயர்த்துள்ளமையை காணலாம். ஆனால் அவ்வாறு குருஜி கூறவில்லை. மாறாக அந்தணன் கல்வி கற்று தருவதால் பெரியவன் என்று கருதப்பட்டால் கலையும் தொழில் நுட்பமும் அறிந்த சூத்திரனும் எவ்விதத்திலும் பிராமணனுக்கு முக்கியத்துவம் குறைந்தவனல்ல என்கிறார். ‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் ‘ எனும் குறளின் ஒளியே குருஜியின் வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது.

மேலும் சாதியம் குறித்த குருஜியின் நிலைபாடு பின்வருமாறு:

1. வர்ண அமைப்பில் ஏற்ற தாழ்வுகள் உருவானது வக்கிரமானது.

2. இந்த வக்கிரமே பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வசதியாக போனது.

இந்நிலையில் தமாமுக்கு குருஜி சாதிய பாகுபாடுகளை கண்டிப்பது அவர் கண்ணில் படவில்லையாம். பிரச்சனை குருஜியின் எழுத்துக்களில் அல்ல. மாறாக தமாமின் கண்ணில்.

மேற்கோள் மோசடி-3:

“வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே – நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும் – அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம். ‘பிராமணர்கள் ‘ தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்” என்கிறார் கோல்வாக்கர். (Bunch of Thoughts 8-வது அத்தியாயம் பக் – 107-108) சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்துஎடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம்.”( செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும் தம்மாம் பைசல்)

மோசடிகள்:

மேற்கூறிய தவறான மொழிபெயர்ப்பு மேற்கோள் மனுஸ்மிருதியை குறித்தது என்கிறார். இதுவே தவறானது. ஏனெனில் வர்ண வியவஸ்தா என்றால் அதற்கான ஒரே சட்ட நூல் மனுஸ்மிருதி அல்ல. வர்ண அமைப்பு என்பது ஒரு சமுதாய ஏற்பாடு அவ்வளவே அது காலம் தோறும் மாற்றங்களை கொண்டு பரிணமித்தும், கீழ்மைப்பட்டும் வந்துள்ளது. அதற்கான ஒரு காலத்திய சட்ட நூல்தான் மனுஸ்மிருதி. எனவே வர்ண வியவஸ்தா என்றாலே மனுஸ்மிருதி என்று பொருள் கொள்வது அறியாமை மட்டுமே. அறியாமை மோசடி ஆகிவிடாது. ஆனால் இந்த மேற்கோளில் தமாம் வெட்டியெறிந்துள்ள பகுதிகளை காண்போம்:அவை <<>> என்னும் அடைகுறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘ Our people have come to feel that the mere mention of Varna-vyavastha is something derogatory. They often mistake the social order implied in it for social discrimination. The feeling of inequality, of high and low, which has crept into the Varna system, is comparatively of recent origin. The perversion was given a further fillip by the scheming Britisher in line with his ‘divide and rule ‘ policy. But in its original form, the distinctions in that social order did not imply any discrimination such as big and small, high and low, among its constituents. On the other hand, the Gita tells us that the individual who does his assigned duties in life in a spirit of selfless service only worships God through such performance. Society was conceived of as the fourfold manifestation of the Almighty to be worshipped by all, each in his own way and according to his capacity.>> If a Brahaman became great by imparting knowledge, a Kshatriya was hailed as equally great by for destroying the enemy. No less important was the Vaishya who fed and sustained society through agriculture and trade or the Shudra who served society through his art and craft. Together and by their mutual interdependence in a spirit of identity, they constituted the social order. Looking at its present decadent and perverted form and mistaking it for its original form,there are some who never tire of propagating that it was the Varna-vyavastha that brought about our downfall down these centuries”

ஆக, இரு பாராக்களாக ஓடும் ஒரு மேற்கோளில் வர்ண அமைப்பில் ஏற்றதாழ்வுகளை குருஜி வக்கிரம் என்றும் இன்றைய சாதிய அமைப்பினை குருஜி decadent and perverted form என்றும் வர்ணிக்கும் வாசகங்களை நீக்கிவிட்டு முதல் இரண்டு கடைசி இரண்டு வாசகங்களை அதுவும் தவறாக மொழிபெயர்த்து அதையே முழுமேற்கோளாக காட்டும் கீழ்த்தர முறைமைக்கு பெயர் என்ன ? அதை சுட்டிக்காட்டினால் மூன்று புள்ளியை விட்டதற்காக டைப்பிங் க்ளாஸ் எடுக்கிறாயா என்று கேட்பது அதைவிட கீழ்த்தர நேர்மைக்கேட்டுடனான அகம்பாவத்திற்கு பெயர் என்ன ? தமாம் அளித்த மேற்கோள்களில் அவர் பக்க எண் கொடுத்த மேற்கோள்களுக்கு மட்டுமே ‘மரியாதை ‘ செய்திருக்கிறேன். அவர் பக்க எண் கூட தராமல் கொடுத்த குருஜியின் மேற்கோளாக கூறுவதற்கு, தமாம் போன்ற மோசடிவாதிக்கு பதிலளிக்க வேண்டிய எவ்வித moral responsibility யும் எனக்கு கிடையாது.

ஆக-

அ) மேற்கோளை ஒட்டியும் வெட்டியும் மோசடியாக உருவாக்குவது

ஆ) மேற்கோளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கூட திருகல் வேலை செய்வது

இ) ஒரு மேற்கோளில் தமக்கு பாதகமான வரிகளை விட்டுவிட்டு அதற்கு புள்ளிகள் வைக்கவேண்டும் என்னும் அடிப்படை நேர்மை உணர்வு கூட இல்லாமல் அது ஏதோ தட்டச்சு தவறு போல வியாக்கியானம் கொடுப்பது.

இத்தனையும் செய்துவிட்டு அதற்கு பின்னரும் வெட்கமில்லாமல் ஒரு மேற்கோளை பக்கம் அல்லது அத்தியாயம் அல்லது வெளியீட்டு எண் ஆகியவை இல்லாமல் கொடுத்து அதற்கு நான் பதில் கூற வேண்டுமென எதிர்ப்பார்ப்பது கீழ்த்தரமான மோசடித்தனமும் நேர்மையற்றதன்மையும் ஆகும். உங்களது நேர்மையின்மைக்கு பதிலளித்து அந்த மோசடிக்கு ஒரு அங்கீகாரத்தை நான் அளிக்க விரும்பவில்லை. என்றாலும் தமாம் அல்லது அவரது மெமிடிக் க்ளோன்களுக்கு அவர்களது மார்க்க நம்பிக்கை ஏதேனும் சிறுதுளி அளவாவது நேர்மை எனும் மதிப்பீட்டை அளித்திருக்கும் பட்சத்தில் Bunch of Thoughts-இலிருந்து ஒரு மேற்கோளை அத்தியாயம் அல்லது பக்கம் சகிதம் அளித்து (ஆங்கிலத்திலேயே அல்லது மோசடித்தனமற்ற தமிழ் மொழிபெயர்ப்பில்) இதில் விவாதிக்க அழைப்பு விடுக்கிறேன். அல்லது நீங்கள் ஏதாவது பிரச்சார பிரசுரத்திலிருந்து குருஜியை மேற்கோள் கொடுத்தால் அப்பிரசுரத்தை குறிப்பிடுங்கள். அதுவே நேர்மையாக இருக்கும். தமாம் போல தாம் படிக்காத ஒரு நூலிலிருந்து ஒரு மோசடி மேற்கோளைக் காட்டிவிட்டு பின்னர் ஒரு வாசகத்தை ஏதோ கவனக்குறைவாக இடம் மாறிவிட்டது என்பது போலெல்லாம் பொய் புளுகாதீர்கள்.

Bunch of Thoughts-இல் நான் எதை ஏற்கவில்லை:

குருஜி வர்ணாஸ்ரம முறை குறித்து Bunch of Thoughts-இல் கூறியுள்ளவற்றை நான் அப்படியே ஏற்கிறேன். ஆனால் அந்நூலில் கூறியுள்ள வேறுசில விஷயங்களுடன் நான் உடன்பட முடியாது (நான் கூறுவதெல்லாம் ‘Bunch of Thoughts ‘ உடன் நான் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன் எனக் கூறமுடியாது. இதுதான் நான் எழுதிய வாசகம்.) நான் உடன்படமுடியாத விஷயம் வர்ணாஸ்ரமம் குறித்து குருஜி கூறியவற்றுடன் அல்ல. நபி என நம்பப்படும் முகமதுவையும் இயேசுவையும் ‘Bunch of Thoughts ‘ இல் சிறிது சிலாகித்து அவர்கள் ஒரு பெரிய மகான்கள் என்கிற மாதிரி கூறியுள்ளார். அவற்றுடன் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அவ்வாறே லோகமான்ய திலகர் கூறிய வேதங்கள் துருவப் பிரதேசத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கு குருஜி துருவப்பிரதேச சூழல் ஒருகாலத்தில் பாரதத்தில் இருந்திருக்கலாம் என்பதாக ஓரிடத்தில் கூறியுள்ளார். இது பிழையான நிலவியல் கருதுகோள் ஒன்றின் அடிப்படையில் அவர் கூறியது. எனவே எனக்கு இதிலும் உடன்பாடில்லை. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர Bunch of Thoughts நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நூல்.

தலித்-பிற்பட்டோர் நலன் குறித்து நீலிக்கண்ணீர் விடுவோருக்கு:

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக திரு தமாம் எனது சாதி குறித்தோ அல்லது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதி குறித்தோ கவலைப்படவேண்டிய தேவையில்லை. இந்தியா ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும் இல்லாத அளவு வனவாசிகளும் தலித்துகளும் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டு நிலமிழந்து, வீடிழந்து அகதிகளாக வாழும் இஸ்லாமிய வெறி பிடித்த பங்களாதேஷில் உங்களது மார்க்க வெறியர்கள் தலித்துகளுக்கு எவ்வித உரிமைகளை கொடுத்துள்ளார்கள் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். அதை குறித்து ஒரு முனகல் கூட வெளியிடமுடியாத இஸ்லாமியர்கள் ஆனால் ஈராக்கிற்காகவும் ஆப்கானிஸ்தானுக்காகவும் ஆகாயத்திற்கும் மண்ணுக்குமாக குதிக்கிற இஸ்லாமியர்கள் தலித் அல்லது பிற்படுத்த பட்டவர்களுக்காக வடிக்கும் நீலிக்கண்ணீருக்கான கிளிசரின் மதிப்பு என்ன என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே உங்கள் முதலைக்கண்ணீரை வேறு ஏதாவது ஏமாந்த சோணகிரிகளுக்காக ஒதுக்கீடு செய்து கொள்ளுங்கள்.

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்