கடிதம் டிசம்பர் 16,2004

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

எஸ்.கே


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

ஒரு சிறு விளக்கம்.

திரு.சலாஹுதீன் அவர்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதைப் பற்றிய தன் கடிதத்தில், திண்ணையில் நான் எழுதிய ‘மக்கள் மெய் தீண்டல் ‘ கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். அவர் பர்தா முறையை ஆதரித்து எழுதுவதால் நானும் அதை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இக்கடிதத்தை எழுத முற்பட்டேன்.

நான் முக்கியமாக அறிவுறுத்த விரும்பியது என்னவென்றால், ஆண்களின்பால் பதுங்கியிருக்கும் காம இச்சையை, சிறு பெண்கள் தன் விழிப்புணர்ச்சியின்மையால் எழுச்சியுறச் செய்யக் கூடாது என்பதுதான்.

தூங்கும்போது ஆடை விலகும். அது தானாக நிகழ்வது. அவர்களே அவ்வாறு விலகுவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பெற்றோர்கள் எப்பொதும் அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்து எப்பொது ஆடை சிறிது விலகினாலும் தன்னிச்சையாக அதை சரி செய்ய மூளை கட்டளையிடும் அளவுக்கு மனப்பக்குவம் கொள்ளப் பழக்க வேண்டும் (conditioned reflexes) என்பதை உணர்த்த எண்ணினேன். சாதாரணமாக மூடியிருக்கும் உடற்பாகங்கள், திறந்திருக்கும் பகுதியை விட சிறிது வெளுத்திருக்கும் – No suntan due to prolonged non-exposure. அந்த நிலையில் மார்பகமோ, இடுப்புப் பிரதேசமோ (சாண்டில்யனுக்கு நன்றி!), கணுக்காலுக்கு மேற்பட்ட பகுதியோ, ஒரு ஆண்மகனின் கண்களில் படுமானால் அவன் மன எழுச்சி கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அவ்வளவே! அதற்காக தாலிபான்கள் செய்தது போல் பெண்களை சாக்கு படுதா போட்டு மூடி, மூக்குக்கும் கண்ணுக்கும் மட்டும் போனால் போகிறதென்று ஒரு ஓட்டை போட்டு அவர்களை எவ்வகை உணர்ச்சியோ, விருப்பு வெறுப்புகளோ கொள்ளமுடியாத ஜடங்களைப் போல் நடத்துவதை நான் ஆதரிக்கவில்லை. அதே போல் கருப்புத் துணியால் அவர்கள் முழுதும் மூடப்பட்டு (சில ஊர்களில் வெள்ளை) இருப்பதைப் பார்த்து அவர்கள்மேல் பரிதாபம் கொள்கிறேன்.

அதனால் திரு. சலாஹுடான் போன்றவர்கள் முன்வந்து, தப்பு என்று தன் உள்மனம் எண்ணுவதை தைரியமாக எடுத்துறைத்து, பெண்ணினம் மேன்மையுற ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்!

எஸ்.கே

http://kichu.cyberbrahma.com/

Series Navigation

எஸ்.கே

எஸ்.கே