கடிதங்கள் – மே 6,2004

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

தேவேந்திர பூபதி – காவ்யா – பொறையாறு நந்தன் – மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி – கோச்சா (எ) கோவிந்த்


நண்பர் சிவகுமாரின் சிவவாக்கியரின் திருவாக்கியங்கள் படித்தேன். கட்டுரை

நன்றாக வந்துள்ளது இருந்த போதிலும் சில ஐயப்பாடுகளை தெளிவாக்குவது

கட்டுரை சிரியரின் கடமை என்று அறிகின்றேன் . சிவவாக்கியரை சுஜாதா

மூலம் தான் அறிந்தேன் என்று கூறுவது சுஜாதாவிற்கு வேண்டுமானால் பெருமை

சேர்ப்பதாக இருக்கலாம் . சித்தர்களுக்கு அல்ல. சித்தர்களின் காலம் குறித்து

ஒரு முரணான கருத்தை கூறியுள்ளீர்கள். மேலும் இந்த கட்டுரைக்கு உதவிய நூலாக

ஜெயமோகனின் று தரிசனங்களை பற்றி கூறியுள்ளீர்கள். இக்கட்டுரைக்கும் று

தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. று தரிசனம் என்ன ?

மற்றும் இந்திய தத்துவ ஞானத்தை பற்றி ஒரு தெளிவான குறிப்பு

பெறவேண்டுமாயின் நீங்கள் மேற்கூறிய சியர்களெல்லாம் காப்பியடிக்கும் மூல

நூலான .பேராசிரியர் இலட்சுமணன் அவர்கள் எழுதிய இந்திய தத்துவ ஞானம்,

(பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது ) என்ற

நூலை படிக்கவும். சனாதான தர்மம் என்று தற்போது வழங்கப் படுவது வேறு.

சட்தரிசனம் என்று கூறப்படுவது வேறு. சிவவாக்கியரில், சாங்கியத்தையோ

யோகத்தையோ, மீமாம்சத்தையோ , வைசேடிகத்தையோ, உத்தர

மீமாம்சத்தையோ அல்லது வேதாந்தத்தையோ எவ்வாறு கண்டார்கள் என்பது பற்றி

விளக்கம் இல்லாமல் ஒரு புத்தகத்தை பார்வை நூலாக கூறியிருப்பது

தேவையில்லாத சிலவற்றை தூக்கி நிறுத்த முயற்சி செய்வதாக உள்ளது.

குறைந்த பட்சம் நடைபாதை வெளீகளிலே விரித்து கிடக்கின்ற புத்தகக்

கடைகளிலேயே கிடைக்கின்றன அருமையான சித்தர் தொகுப்புகள். மேலும்

உண்மையிலேயே சித்தரை பற்ரி அறிய விரும்பினீர்களானால் பெரிய ஞானக்

கோவை என்ற நூலை வாங்கி படிக்கவும். சனாதான தர்மம் என்று பின்னாளில்

கூறப்பட்ட விசயங்கள் வேதாந்தத்தில் உள்ளடங்கிய அத்வைத துவைத

விசிஷ்டாத்வைதங்களைப் போலவே , சைவம் , வைணவம், சாக்தம், செளரம்,

கெளமாரம், கணாபத்யம் என்று அறியப் படுகின்றது. இவையாயும் தமிழில்

விரிந்து கிடக்கின்ற, யாவரும் படித்து அறியப் பட வேண்டிய விசயங்கள் .

தேவேந்திர பூபதி

kousick2002@yahoo.com


அன்புள்ள சிரியருக்கு,

எனக்குத் தெரிந்தவரை நாராயண குருவைப் பற்றி தமிழில் வந்த நூல்களில் சிறந்தது ஜோசஃப் இடமருகுவின் மலையாள நூலை த. அமலா மொழிபெயர்த்தது தான். நாராயண குரு பற்றி ஜெயமோகன் திண்ணையில் எழுதியுள்ள கட்டுரையின் அடியில் உள்ள நூல் பட்டியலில் இந்த நூலைக் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது.

காவ்யா

சென்னை

kavya1980@indiatimes.com


ஜோதிர்லதா கிரிஜாவின் கட்டுரைக்கான பிறைநதிபுரத்தானின் பதில் மிகவும் சிந்திக்க தூண்டியது. சமீப காலங்களில் தின்னையில் வெளிவரும் முஸ்லிம் எதிர்ப்புவாத கட்டுரைகளுக்கு உடனடியாக RSS பாணியிலேயே முஸ்லிம் வாசகர்கள் பதிலளிப்பது வரவேற்கதக்கதாக உள்ளது.

P.S. ராஜேஷ் போன்றவர்கள் RSS ன் தேசபக்திக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஆதாரங்கள் இல்லாமல் விடும் ‘புருடாக்கள் ‘ எவ்வளவு முயற்சித்தாலும் நம்பத்தகுந்ததாக இல்லை..(இந்த புருடாக்களையெல்லாம் புதிதாக எழுதப்படும் வரலாற்று புத்தகத்தில் இடம்பெறச்செய்து மானவர்களை நம்பச்சொல்லலாம்.) ஏனென்றால் அவர்களின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் அப்படி. உதாரனமாக இந்தியாவை வாட்டி வதைக்கும் சாதிய பிரச்சினையில் அவர்களின் நிலைப்பாடு உயர்சாதியினருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. தேசபக்தி, நாட்டுப்பற்று என்பதெல்லாம் அது மக்களை குழப்பி அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அணியும் முகமூடிகள் வால்கள் நாயை ஆட்டுவிக்கிற உதாரணம் இந்தியாவை பொறுத்தவரை ‘அவாள்கள் ‘தான், வால்களாக இருந்து இந்திய நாயை ஆட்டுவிக்கிறார்கள்

அன்று இமாம் புகாரியின் இந்திய எதிர்ப்புவாதத்தை தான் கொண்ட ‘போலி மற்றும் டாம்பீக தேசப்பற்றின் (!) ‘ காரணமாக எதிர்த்த பா.ஜ.க. தான், இன்று புகாரியின் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி, அவரின் தாடியை வருடி முஸ்லிம்களின் வாக்குகளை பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ‘ஃபத்வா ‘ அளிக்க சொல்லியது..அதற்கு கைமாறாக இமாம் புகாரிக்கு ‘தேச பக்தர் ‘ என்ற சான்றிதழ் வேண்டுமானலும் பா.ஜ.க வழங்கலாம். (அது சரி..பொது சிவில் சட்டம், குஜராத் படுகொலை மற்றும் பாப்ரி மஸ்ஜித் பற்றிய புகாரியின் கருத்து என்ன ?..இதுவரை இமாம் புகாரி கக்கிய இந்திய எதிர்ப்பு வாத பேச்சு பற்றிய பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் கருத்து என்ன ?)

மூஸ்லிம்கள் பா.ஜ.க.வில் இருப்பதால் அது மதசார்பற்ற கட்சியாம். பாப்ரி மஸ்ஜிதை இடித்தபோது பா.ஜ.க வில் இருந்த சிக்கந்தர் பத்கள் வாயையும் மற்றதையும் மூடிக்கொண்டுதான் இருந்தார் (பா.ஜ.க திறக்கவிடவில்லை!) பா.ஜ.க வுக்கு சிக்கந்தர் பக்த், ஷா நவாஸ் கான் போன்ற ‘முஸ்லீம்கள் ‘ தேவை – தேர்தல் சமயத்தில் இதுபோல் சொல்லிக்கொள்வதற்காக.

நடிகர், நடிகைகளிடம் கால்ஷீட் வாங்கி தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவேண்டிய நிலையில் பா.ஜ.க. தள்ளப்பட்டிருப்பதை சங் பரிவார் ஏன் கண்டுக்கொள்ளவில்லை ? எப்படியாவது ஆட்சியை பிடித்தால் போதும் ன்ற பதவி வெறிதான் இதற்கு காரணம்.

RSS/BJP காரர்கள் இந்திய முஸ்லிம்களுக்கு இந்தியா அளிக்கும் சலுகைகளாக பட்டியல் இடும்போது ஹஜ் பயன கட்டன சலுகை பற்றி சுட்டிக்காட்டத்தவறுவதில்லை. இந்தியா முழுவதும், லட்சக்கனக்கான கோவில்களில் கும்பாபிஷேகம், தேர்த்திருவிழா, மகாமகம் என்று ஆண்டுமுழுவதும் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்து, விஷேச விழாப்பேருந்து விட்டு கூத்தும் கும்மாளமும் அடிக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்யலாமாம் ஆனால் ஆண்டுக்கொருமுறை முஸ்லிம்கள் ஹஜ் செல்வதற்கு மட்டும் கட்டன சலுகை அளிப்பது மட்டும் தவறாம். இந்திய.முஸ்லிம்கள் மட்டும் இளிச்சவாயன்களாக இருக்கவேண்டுமாம்.

அன்புடன்

பொறையாறு நந்தன்

ananthakumaran@hotmail.com


கோடங்கிளின் கனவுப் பற்றி….மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி….

திரு கோச்சா அவர்களுக்கு

வணக்கம். கடந்த திண்ணை இதழில் ரஜினிப் பற்றி ஒர் கட்டுரை எழதி இருந்தீர்கள். மனபூர்வமான

வாழ்த்துக்கள். ஆனால் அதே இதழில் ‘சோ ‘ பற்றியும் மிக மிக பாராட்டி எழதி உள்ளீர்கள், அது பற்றி

சில விவாதங்களை முன் வைக்க ஆசைப் படுகிறோம்….

1. கோட், சூட் போடுவதும் டை கட்டுவதும் தமிழர் பண்பாடு அல்ல. ஆனால் பூணூல் போடுவதும், பஞ்சகச்சம்

கட்டுவதும் தான் தமிழ்ர் பண்பாடா ? இது தமிழ் சமுதாயத்திற்கு மற்றும் வரலாற்றுக்கு செய்யும் துரோகம் அல்லாவா ?

2. துக்ளக் தென்னிந்தியாவின் முதல் அரசியல் & புலனாய்வு பத்திரிக்கை என்பது தவறான தகவல். துக்ளக் ஒர்

அரசியில் சார்பான பத்திரிக்கை. (not an investigative journal). தமிழகத்தில் மறைந்த கலைவாணர் திரு என்.எஸ்

கிருட்டிணின் வழக்குகளை தாங்கி ஓர் பத்திரிக்கை வந்துள்ளது.

3. சோ இந்து மத பற்றாளாராக இருப்பது அவரின் தனிப்பட்ட விசயம். ஆனால் இந்து மத வெறியாளராக இருந்துக் கொண்டு நெஞ்சில் நஞ்சுடன் நடிப்பதுதான் ஊர் அறிந்த உண்மை. அது மட்டும் அல்ல, ‘வர்ணா ஆசிரம ‘ தர்மத்தை போற்றுகிற ‘பகவத் கீதையை ‘ பற்றி துக்ளகில் தொடர் எழதுவது தங்களுக்கு தெரியுமா ?

4. உங்களை பொறுத்தவரை நம் தமிழ் நாட்டு அரசியில் தலைவர்களில் சிலர் முட்டாளாக இருக்கலாம், ஆனால்

சோவின் தயவை தேடி பொகும் அளவிற்கு படு முட்டாள்கள் அல்ல. சோ மக்களின் பிரதிநிதி என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், மன்னிக்கவும் கோச்சா அவர்களே! எங்களை பொறுத்தவரை சோ ‘இந்து மத ‘ ‘உயர்தர ‘ நீங்கள் குறிப்பிட்டதை போல ‘பூணூல் ‘ வர்க்கத்தின் பிரதிநிதியாக வேண்டுமானல் அவர் இருக்கலாம்.

5. நம் தமிழக மதவெறிப் பற்றி பேசும் பொழது, நமது கலாச்சார பண்பாட்டிற்கு உட்பட்டு பேசுவதுதான் தர்க்க

ரீதியாக சரியானது. தமிழ்ர்களுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன சம்மந்தம் ? அதுமட்டுமல்ல, தமிழகம் / ஆந்திரம் /கேரளம் / கர்நாடகம் இந்த மாநிலங்களில் குறிப்பிட்டு செல்லும்படி பெரிய அளவில் ‘இந்து-முஸ்லிம் ‘ கலவரம் வந்தது என கோச்சா சொல்ல முடியுமா ? அதே சமயத்தில் இந்து மத வெறியாளர்கள் ‘நரேந்திர மோடி ‘ ‘பீரவிண் தாகாடியா ‘ ‘இராம கோபலன் ‘ இவர்களைப் பற்றி கொச்சா என்ன நினைகிறார் என தெரிந்துக் கொள்ள ஆசை…

6. தனியார்த்துறை இட ஒதுக்கீட்டை சோ ஏன் எதிர்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அவருடைய மேல்தட்டு வர்கத்தை சார்ந்த மக்களுக்கு வாய்ப்பு குறைந்து விடும் என்ற ஓரே காரணத்திற்காக…

7. ‘பெருவாரியான பூணூல் கூட்டத்தால்தான் இந்தியத் திறமை உலக அளவில் உச்சம் கண்டது ‘ இதைவிட ஒரு

மாபெரும் பொய் என்ன இருக்க முடியும் ? மத்திய அரசாங்கத்தில் (மண்டல் கமிசனுக்கு முன்பு) கிட்டதட்ட 96% பேர்கள் மேல் சாதியின அதிகாரிகள் அதிகாரத்தில் இருந்த போதிலும், சுதந்திரம் பெற்று கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40 கோடி பேர்கள் ஒரு வேளை கூட உண்ண உணவில்லையே ? அது ஏன் ? குடிக்க சுத்தமான நீர் இல்லேயே அது ஏன் ? உலக அளவில் எந்தெந்த துறைகளில் உச்சம் கொண்டது என கோச்சா விளக்கமாக சொன்னால் எங்களுக்கு புரிந்த கொள்ள வசதியாக இருக்கும்.

8. கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளாக ‘H1-B ‘ அமெரிக்க விசாவில் வந்த பெருவாரியான தமிழர்களில் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்த பட்ட மக்கள் ஏராளமாக வந்து உள்ளார்கள் என்பது தெரியுமா ? சரிசமான விளையாடு களத்தில் யாரால் அதிகமாக சாதிக்க முடிந்தது என்பதை தகவல் தொழில் நுட்பத்துறையை வைத்து தீர்மானிக்கலாம். வாய்ப்புகள் சரிசமமாக கொடுக்கப் பட்டால் தமிழன் மற்றவர்களுக்கு சளைத்தவன் அல்ல என்பது நிருப்பிக்கப்பட்ட ஒன்று. Thanks to IT and Thanks to H1-B (American Visa).

9. கடைசியாக ‘ஏதோ சொல்வதற்கு சோ உயிருடன் உள்ளது ‘நம் ‘ பாக்கியம் ‘ என்று சொல்லி உள்ளீர்கள்…

ஆம் உங்கள் பாக்கியம்தான், பெருவாரியான மக்களின் பாக்கியம் அல்ல…

10. சமூக விடுதலைக்கு போரடிய தந்தை பெரியார், திராவிட ச்ிந்தனைகளை மக்களுக்கு எடுத்து உரைத்த அறிஞர் அண்ணா, இன்றைய கால கட்டத்தில் கலைஞர், வைகோ, தலித் மக்களுக்கு போராடும் கிருஷ்ணசாமி, திருமா இவர்களது போராட்டமே சராசரி தமிழனின், பெருமான்மை தமிழனின் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம்….

நன்றி !!! வணக்கம்!!! மீண்டும் திண்ணை மூலம் சந்திப்போம்….

என்றும் அன்புடன்

மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி…

mpsiva23@yahoo.com


ரஜினியின் தண்ணிக் குழப்பம்:

—-

சென்றவார என் ரஜினி தொடர்பான எழுத்துக்கு , ரஜினி ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து ஈ-மெயில் அனுப்பியிருந்தனர்.

அவர்களுக்கு ஒர் வார்த்தை. நான் ரஜினியின் செயற்கைச் சினிமாவை விரும்பி பார்ப்பவன். அண்ணாமலை 5முறை, பாட்ஷா, படையப்பா 3-4 முறை எனப் பார்த்தவன். ஓடாத பாபா படத்தில் கூட சில காட்சிகளை விரும்பிப் பார்த்தவன்.

ஆனால், நிழல் ஆட்டத்தின் கிளுகிளுப்புக்கும் நிஜ வாழ்க்கையில் அவரின் தடுமாற்றமான நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் தெரிந்தவன்.

சரி,

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ரஜினிக்கு காவிரிப் பிரச்சனையில் ஏன் நாட்டம்.. ?

தன்னை வாழ வைத்த தமிழ் மக்கள் எலிக்கறி தின்றதாலா.. ?

நீரின்றி தவித்ததாலா.. ?

தெரியவில்லை..! சரி நிலைப்பாட்டையாவது தெளிவாக எடுத்தாரா… ?

தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களுக்கும், கர்நாடாகாவில் வாழும் தமிழர்களுக்குமான பிரதிநிதி என்று அறிவித்து அவர்கள் சார்பாக, காவிரிப் பிரச்சனை எப்படி அத்தகைய மனிதர்களைப் பாதிக்கிறது என்று விளக்கி அவர்களின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்தியிருந்தால் தவறில்லை.

– அதை விடுத்து, ஏதோ ஒரு சரியான தீர்வு என்று தனக்குத் தோன்றிய ஒன்றை ஆராயாமல் சொல்வதே பிரச்சனை.

-காவிரிப் பிரச்சனை, நதி நீர் பங்கீட்டு முறைகள், நதி நீருக்கான உரிமை ஞாயங்கள், – நதி தோன்றிய இடத்திற்கும் , அது பாயும் இடத்திற்கும் உண்டான மக்களுக்கு – , காவிரி தோன்றிய இடத்திலிருந்து அது கடற்சேரும் இடையேயான அணைகள், அதற்கும் மேலாக, கர்நாடகா வரம்புமீறி கட்டிய அணைகள் பற்றி இவர் அறிவார்ந்து பின் குரல் கொடுத்தால் சமூக அக்கறை என்றால் பாராட்டலாம்.

– மேலும், காவிரி என்பது இரு மாநில பிரச்சனையே அல்ல,

ஒரு வேளை, மொழி வாறாக இல்லாமல், வெறுமனே மேலிருந்து கட்டம் கட்டமாக கோடு போட்டு மாநிலம் பிரித்திருந்தால் காவிரி மையமாக கொண்டு ஒரு நீண்ட செவ்வகமாக ஒரு மாநிலம் வந்திருக்கும்.

அப்போது தஞ்சைக்கு தண்ணீர் வந்திருக்குமல்லவா.. ? ( நீண்ட செவ்வகத்திற்குள் மைசூர். தர்மபுரி, திருச்சி, தஞ்சை அடங்கியிருக்கு எனக் கொண்டால் ).

அதானால் காவிரிப் பிரச்சனையை இரு மாநில பிரச்சனையாகக் கொள்ளாமல், அந்த நதி பிறந்த இடம் முதல், கடலில் கலக்கும் இடம் வரை , எப்படி நீரை அக்கரையோர மக்கள் மிகச் சரியாக உபயோகிப்பது , என்பது பற்றிய பிரச்சனை.

அது விட்டு தலைக்காவிரியிலிருந்து 50கி.மீ தூரத்தில் இருப்பவனுக்கு, கடைக்கோடியில் இருக்கும் தஞ்சை விவசாயியை விட உரிமை அதிகம் என்பது போல், புதிதாய் வாய்க்கால்கள் தொடர்ந்து வெட்டுவது பற்றி ஞாயம் பேசுவது மடமை.

– ரஜினி காவிரி பற்றி சும்மா, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் ஒரு பிரச்சனை வந்தவுடன் எடுத்தேன் கவுத்தேன் என்று செயல்பட்டது, செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இவர், நதி நீர் பற்றி கூறியவுடன் , உண்ணாவிரதத்தில் கூடிய பிரபலங்கள் கூட்டம் என்ன விளையாட்டா என்று கேட்டால்,

அது அரசியல்.

என் வீட்டு கல்யாணம் , கருமாதிக்கு நீ வா, உன் வீட்டுக்கு நான் வாரேன், நாமெல்லாம் கூட்டமுள்ள தலைவர்கள் என மக்கள் நினைக்கட்டும். என்ற அரசியல் பம்மாத்து.

அதும் போக, ரஜினியின் நதி நீர் கருத்தை விட அண்ணாவின், ரூபாய்க்கு முன்று படி அரிசி கோஷம் ஏற்படுத்திய தாக்கம் நாம் அறியாததல்ல…!!!

கவர்ச்சியும், மக்கள் உணர்ச்சியையும் தூண்டும் கோஷங்கள் இவை.

அதைத் தான் ரஜினியும், தன்னை முன்னிலைப்படுத்த கண்ட நதி நீர் கோஷம்.

சரி, அவர் ஒரு கோடி தருகிறேன் என்று சொல்வது ஏன் என்று கேட்கலாம்.

நீங்கள் ஒரு மஞ்சள் தடவிய நோட்டை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் லோக்கல் தலைகளுடன் தி.நகர் கடைகளில் ஏறி இறங்குங்கள், மதியமே, பல ஆயிரம் டொனேஷன் தேறும்.

அது மாதிரி தான் இந்த ஒரு கோடி.

ஒரு பாதுகாப்புக்கான கப்பம்.

அப்படியெனில் ரஜினி நல்லதே செய்யக் கூடாதா.. ? எனக் கேட்கலாம்.

செய்யலாம்.

பல விஷயங்களை செய்து முடிக்க தேவையான மக்களைத் திரட்டக் கூடிய ஆற்றல் உள்ள ஒரு சக்தி ரஜினிக்கும் உண்டு. அந்த சக்தியை சரியாக உபயோகித்தாலே ரஜினி காவிரிப் பிரச்சனைக்கு செய்யும் நல்லது.

என்ன செய்யலாம்,

1. காவிரிப் பிரச்சனை:

– காவிரி பற்றி அறிய அது சம்பந்தமான அறிவுவுள்ள, பொறியியளார்கள், காவிரியின் முடி முதல் அடி வரை பயணப்பட்டு அதன் நிலை அறிந்தவர்கள், காவிரி ஒட்டிய அனைத்து மக்களின் வாழ்ககை முறை அறிந்த இலக்கியவாதிகள் என பல்தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி காவிரிக்கான முழு அறிவு பெறலாம்.

– காவிரியில் கடந்த பல வருடங்களாக கர்நாடகா செய்து வரும் அணை அத்து மீறல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இதில் விசேஷம் காவிரியின் பாசனம் சதவிகதம் 55.5% தமிழகத்தில். ( மொத்தம் 81115 சதுர கி.மீ ).

ஆனால், கர்நாடகா தொடர்ந்து வரம்பு மீறி தன்னிச்சையாக அணைகளை உயர்த்துவதும் , புதிதாய் கட்டுவதுமாக இருக்கிறது.

இதைக் கண்டு கொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருந்தால், பல மாநிலங்களுடன் இணைந்து ஒரு நாடாக நாம் இருத்தல் ஏன்.. ? என்று தமிழக விவசாயி நினைக்க மாட்டானா.. ? இப்படி எண்ணங்களைத் தூண்டும் அரசுகளும் பொடா சட்டத்தில் தண்டிக்கலாம்.

அதனால், ரஜினி இந்த உரிமை கிடைக்க அகிம்சா வழியில் மக்களை திரட்டி போராடி நமது காவிரி நதி பங்கீட்டை கர்நாடாக செயல்படுத்த குரல் கொடுக்கலாம்.

2. நதி நீர் பிரச்சனை:

– நதி நீர் இணைப்பு பற்றி ஏறகனவே பல ஆராய்ச்சிகள் உலகம் முழுதும் செய்யப்பட்டுள்ளது.

அது பற்றி தெரிய, மேதாபடேகரைச் சந்திக்கலாம்.

– சுற்றுச்சூழல் என்று ஒன்று முக்கியமாக உலகம் முழுதும் இருக்கிறது. ஒரு படத்தின் ஹீரோவை அறிமுகப்படுத்தும் போது, விதவிதமாக சிகரெட் குடிப்பதில் காட்டும் சினிமாக்காரரிடம் சுற்றுச் சூழல் பற்றிக் கேட்பது தவறாக இருக்கலாம்.

ஆனால், அது பற்றி ரஜினி தெரிந்து கொள்வது நலம்.

ரஜினி ஒரு சிலேட்டும், பல்பமும் எடுத்துக் கொண்டு, நதிநீரி இணைப்பால் பயன்படப் போவது எத்தனை சதுர கிலோமீட்டர் என்பதையும், அதனால் அழியப்போகும் காடுகள் எத்தனை சதுர கிலோமீட்டர் என்பதையும் எழுதிப் பார்க்கட்டும்.

உடனே, எச்சிலை வைத்து பரபரவென்று சிலேட்டில் எழுதியதை அழித்து தலையைக் கோதி விட்டுக் கொண்டே , ‘இது எப்படி இருக்கு ‘ என்று அவரை அவரே கேட்டுக்கொண்டு, ‘ரொம்பக் கேவலாமா இருக்கு ‘ என்று அவரே சொல்வார். அவ்வளவு தெளிவான விஷயம்.

அப்படியானால், நதி நீர் இணைப்புக்கு மாற்றே கிடையாதா… ?

உண்டே,

அது தான், ‘மழை நீர் அறுவடை ‘ ( Rain water harvesting ) , ‘மழை நீர் சேகரிப்பு ‘ மற்றும் சோழர்காலத்தில் தெளிவாக இருந்த, நதி > கண்மாய் > ஏரி > குளம் > குட்டை > ஓடை முறைகள்.

அணைகள் கட்டுவது கூட , நதி நீர் வேகமாக ஓடி உடன் கடலில் வீணாகக் கடந்து விடக் கூடாது என்பதற்காக மட்டுமே. மற்றபடி வெள்ளம் தடுக்கவோ தண்ணீரை புறப்படும் இடத்திலேயே உபயோகிக்கவோ அல்ல.

மேலும், நதிகளில் வெள்ளம் வந்து கடலில் கலப்பது தவறல்ல.

வெள்ளம் நதி தன்னைச் சுத்தப்படுத்தும் முறை.

Dr.Weil தனது இயற்கை மருத்துவ அவசியம் பற்றி சொல்லும் போது , நதிகளின் இந்தத் தன்மையைத் தான் உடலுடன் ஒப்பிடுகிறார்.

கரை புரண்டு ஓடும் நதி, தனது பாதையை சரி செய்யும் முறை அது.

மேலும், நதி ஒட்டி வெள்ளத்தால் வரும் அழிவுகள், மனிதனின் கட்டிட அமைப்பு முறையின் தவறுகளே தான் தவிர, நதியின் தவறல்ல. அதனால், அந்த அழிவுகளை பொருட்படுத்தி செவிமடுக்க வேண்டியதில்லை.

மனிதனின் வாழும் முறை தவறுகளை, இயற்கையுடன் இணைத்து பார்க்க வேண்டியதில்ல.

மழை நீர் அறுவடை பற்றி எல்லா நீர் வளம் பற்றி படிப்பவர்கள் அறிந்ததே. திண்டுக்கல்லில் அதை செயல்படுத்திப் பார்க்க, தமிழக கம்பெனி ஒன்று அதற்காக மலை ஒட்டி 400 ஏக்கர் வாங்கி முயற்சி செய்தது. அதற்காக, இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆலோசகர்கள் வந்துள்ளார்கள்.அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

– மழை நீர் சேகரிப்பு இப்போழுது தமிழகத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

– மூப்பனார் தலைமையில், அமெரிக்க நாறாயணன் என்பவர், சத்தியமூர்த்தி பவனில் 3 வருடங்கள் முன்பே, மாதிரி மழை நீர் சேகரிப்பு மையம் அமைத்துள்ளார். எனக்கு தெரிந்து ஒரு கட்சி அலுவலகத்தில் அக்கறையுடன் செய்யப்பட்டுள்ள ஆச்சரிய விஷயம் இது.அவரிடம் கேட்டால் அதிக விவரங்கள் தருவார் இது பற்றி.

இதற்கும் மேலாக, ரஜினி, எப்படி நீரை சேமிப்பது, குளம் குட்டையைப் பாதுகாப்பது என்று தெரிந்து மக்களுக்கு சொல்லலாம்.

நம்ம ஊரைப் பார்த்தவுடன் குளம் குட்டை என்பது, துணி துவைப்பது, குண்டி கழுவுவது தான் ஞாபகம் வரும்

இதற்கு ரஜினி அடிக்கடி போகும் பெங்களூர் சாலையில் உள்ள போரூர் குடி நீர் குளமும் விதிவிலக்கல்ல.

அரசியல்வாதிகளால், கண்மாய் பொறம்போக்கு, மேய்க்கால் பொறம்போக்கும் ஆக்கிரமிக்கப்பட்டால் பின் எங்கு தண்ணீர் ஓட்டம் நடக்கும்… ?

அதனால், அழிந்து போன ஓடைகள் தான் எத்தனை எத்தனை.. ?

உடம்பில் உள்ள இரத்த நாளங்களை எல்லாம் சிதைத்து விட்டு இரத்த ஓட்டமே இல்லை என்பது போல் விஷயம் இது.

அதனால், ரஜினி ஒரு கோடி விட்டு விட்டு இந்த மாதிரி விஷயங்களை மக்களுக்கு சொல்லட்டும்,

அதுவரை நதிநீர் கோஷம் ஒரு மூன்று படி அரிசி போல் வாக்கு வாங்கி வாக்காளனுக்கு வாய்க்கரிசி போடும் விஷயமே அன்றி, நீர் நிலைகளுக்கும், வளத்திற்குமான விஷயம் இல்லை என்பது மக்கள் அறிவார்களாக.

3. அதனால், ரஜினி முதலில் நதி நீர் இணைப்பு, காவிரி விஷயங்கள் பற்றி முழு அறிவு பெற்று பின் பேசுதல் நலம் – அவருக்கும்

அதனால், யாராவது நதி இணைப்பை முன் வைத்து கோஷமிட்டால் தயை தாட்சண்யமின்றி புறக்கணியுங்கள்.

மக்களும் நதி நீர், இயற்கை வளம் பற்றி விஷய ஞானம் பெருதல் அவசியம்.

காவிரி நீர் பகுதி வாழ் மக்கள், கட்சி சார்பற்று ‘காவிரி மன்றங்கள் ‘ அமைத்து செயல்பட ரஜினி முயற்சித்தல் நலம்.

பெரியார், காமராஜர்,அண்ணா, மூப்பனார்,கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, ஜி.கே.வாசன், நல்லக்கண்ணு, பாரதிராஜா, எல்லோரும் தமிழகம் தழுவி சுற்றுப்பயணம் செய்து பொது கூட்டங்களில் பேசி, மக்களிடம் உரையாடி பின் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள். சொல்கிறார்கள்.

அந்தக் கருத்துகள் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அது வேறு –

ஆனால்,

ரஜினியால் எப்படித்தான் போயஸ்கார்டனில் நாலு சுவத்திற்குள் உட்கார்ந்து கொண்டு காவிரிப் பிரச்சனையின் தீவிரம் பற்றியும் தீர்வு பற்றியும் தீர்மானிக்க முடிகிறதோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தயவு செய்து ரஜினிகாந்த் காவிரிப் படுகையில் ஒரு பயணம் செல்லட்டும்.

பின், தனது கருத்தைத் தெரிவிக்கட்டும்

அது தான் அவரின், ‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன் ‘ என்ற வரிக்கு அர்த்தமாகும்..!!!

செய்வாரா…. ?

கோச்சா (எ) கோவிந்த்

gocha2004@yahoo.com

—-

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா