கசக்கிறதா உண்மை….?

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

கோவிந்தராஜன்


மலர்மன்னன், தனது உண்மை சிலருக்கு கசக்கலாம் என்ன செய்வது என்று விசனப்பட்டுக்கொள்கிறார்…..

பிறர் எப்படியோ….
உண்மையென்றால் எனக்கு கசந்ததில்லை…
அதற்கு எனக்கு உண்டான அனுபவமே சாட்சி…
போன வருடம் சில சம்பவங்களால் கசப்பாக உணர்ந்த நான்… முடியாது என்று என்னைச் சுற்றி எல்லோரும் சொன்னபோதும் ஒரு புது துறையில் காலடி வைத்து, இதோ… கடல் கடக்கிறேன்…..
அது தான் மீண்டும் திண்ணையில் எழுதும் மனநிலை தந்தது….

இதோ அவர் எனக்குக் கசந்ததாக சொல்லும் சொற்றொடர் அவர் எழுதுவதற்கு காரணமான அவரது அடிப்படை தகவலின் உண்மை….

“…காமராஜர் மறைந்த தருணத்தில் மூப்பனார் தான் ஸ்தாபன காங்கிரசின் தமிழ்நாடு காரியக் கமிட்டித் தலைவராக இருந்தார் என நினைக்கிறேன். அதான தான் ஸ்தாபன காங்கிரசை இந்திரா காங்கிரசுடன் இணைக்கும் பொறுப்பு அவர் தலையில் விழுந்தது…….” – என்று எழுதுகிறார்.

உண்மையென்ன..?

அச் சமயம், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் , திரு.K.V.மகாதேவன் பிள்ளை ஆவார். தென் தமிழகம் சேர்ந்தவர்.
ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பாக அடுத்தவரை தாழ்த்தி கருத்துச் சொல்லும் மலர்மன்னன் அது பற்றிய மிக முக்கிய அடித்தள தகவலை அக்கறையின்றி “… நான் நினைக்கிறேன் ” என்ற ரீதியில் எழுதுகிறார்.
என்ன ஒரு அக்கறை….

மூப்பானார் பற்றிய ஒரு “கமெண்ட்” அடிப்பதற்கான ஒரு அடிப்படை தகவலாக, மூப்பனார் அப்போது தமிழக தலைவராக இருந்தார்..” என்றூ சொல்கிறார்.
ஆனால் அந்த தகவலோ பொய் என்பது உண்மை. அவர் உண்மை என்பது பொய்.

“…. நிஜத்தோற்றங்களை பிரதிபலிக்க முற்படுகிறவன்..? ,,,,” என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் மலர்மன்னன் கண்ணாடியில் ரசம் போச்சு போலும்..

தமிகத்தில் சில பத்திரிக்கைகள், நிருபவர்கள் பக்கங்களை நிரப்பும் விதம் கேட்டால் உங்களுக்கு பகீர் என்று இருக்கும். அந்த மாதிரி ஒரு நிருவராக இருந்தவரோ மலர்மன்னன் என்று நினைப்பு வருகிறது.

காமராஜர் மறைவிற்குப் பின் கட்சியில் இரு கருத்துக்கள் இருந்தன.

அதற்கான ஒரு கருந்துக் கொண்டவரின் கூட்டமாக, மதுரை திலகர் திடல் முதற்கொண்டு பல நகரங்களில் இணைப்பு நினைப்புக்கான காரண விளக்கக கூட்டங்கள் நடந்தன.
இதில் முன் நின்று பேசிய சில தலைவர்களின் ஒருவராக தஞ்சை மாவட்டத்தின் மூப்பனாரும் இருந்தார்.

இப்படி பல மாவட்டத் தலைவர்கள் ஊர் ஊராக வந்து பேசிய இணைப்புக்கு நாள் குறித்து, சென்னையில் கூடிய போது, நெடுமாறன் தமிழகத் தலைவராக அறிவிக்கப்படலாம் என்று நினைத்த போது, மூப்பனார் பெயர் அறிவிக்கப்பட்டது அனைவருக்குமே புதிது…
ஆனால், அது தொடர்ந்து காங்கிரஸை கொண்டு சென்ற விதம் , தொடர்ந்த சட்ட சபை தேர்தலில் தனித்து நின்று பெற்ற தொகுதிகள் காங்கிரஸில் மூப்பனாரின் ஆளுமைத்திறனுக்கு வித்திட்டது.

>என் வீட்டைப் பொறுத்தவரை முகப்பில் என் தந்தை மூப்பனார் படத்தையும் , நான் காமராஜ் படத்தில் பா.ரா ( சனதா தலைவராக மாறிய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் ) வையும் வைத்திருந்தோம்.
அந்த அனுபவம் தான் சனதாவில் ஒரு ஜாதி கோலோச்சியது புரியும் விஷயமானது.
காமராஜ் ஜாதியுணர்வாளரா என்று எனக்கு முழுதாகத் தெரியாது . ஆனால் அப்படியான சில சம்பவங்கள் தெரியும்.

—-
என் தந்தையுடன் திலகர்திடல் பொதுக்கூட்டத்தில் போய் அவருக்கு மாலை போட்டபோது , வேண்டாம் வேண்டாம் என்றதும்…. சிறிய கைத்தட்டொலியே எழுந்ததும் ஞாபகம் வருகிறது எனக்கு.

அது தாண்டி முக்கியமானது, பொதுக்கூட்டம் நடக்கும் போது, கூட்ட மேடையின் பின் நின்று புகைத்தவாறே என் தந்தையுடன் அவர் பேசிக் கொண்டிருந்தது அப்படியே ஞாபகம் உள்ளது.

மூப்பனார், பல மேடைகளில் இந்திரா, ராஜீவ் இருந்த போது, மேடையின் பின்னே ரிலாக்ஸ்டாக புகைத்தவாரே பலருடனும் பேசுவார்.
அது அவரது இயல்பு.
அதனால், ராஜீவ் மரணத்தின் போது அவர் மேடையின் பின் இருந்து ஓடி வந்த போது உறுத்தவில்லை காங்கிரஸ்காரர்களுக்கு..
அதே சமயம் ராஜீவ்வுடன் ஒட்டியவாரே போட்டோ எடுக்கும் தலைவர்கள் அப்போது இல்லாதது தான் உறுத்தியது.

ஆனால் இந்தச் சம்பவம் பற்றிய மலர்மன்னனின் கருத்து வன்மையாகக் கண்டிக்கப்படக் கூடியது.
அவர் எழுதுகிறார், … “….21ம் தேதி மட்டும் ராஜீவ்வை அம்போ என்று தனியாக தவிக்க விட்டது ஏன் என்று யோசிக்கத் தெரியாதவரா மூப்பனார்……..”

இது விஷமமான பேச்சு,

அதற்கு முந்தைய சில நாட்களாக மூப்பனார் அந்த இடத்தில் மேடை போட தனது மறுப்பைத் தெரிவித்ததும்,,,,, அது தொடர்ந்த வாதங்கள்,
( அப்போது வாழப்பாடி தலைவர்..
பொதுகூட்ட முயற்சி மரகதம் சந்திரசேகர்…. )
மூப்பனாரை பொறாமைக் குணக்காரர் என்றும், தாழ்த்தப்பட்ட மரகதம் சந்திரசேகரின் முயற்சி புடிக்காதவர் என்றும் விமர்சனம் எழுந்தது.
இருந்தும் கடைசி நிமிடம் வரை எதிர்த்தார்.
ஏனென்றால், எல்லோருக்கும் ராஜீவ் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற பயம் இருந்தது.
அந்த கவிதை வாசித்தப் பெண்கூட மரகதம் அறிமுகப்படுத்தியவர்.

எனது நண்பர்கள், ராஜீவ் காந்தி சம்பவம் தழுவிய “குற்றப்பத்திரிக்கை” படம் எடுத்த போது, அது தொடர்பாக அவர்கள் சேகரித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டவன் நான்.
அதில் ஒரு குறிப்பிட்ட -மூப்பனாரை எதிர்த்து விமர்சித்து வளர்ந்த தலைவரை- கிண்டலடிக்கும் விதமாம,
:…” போலீஸ்காரன் செத்திருக்கான், காங்கிர்ஸ் தலைவர் யாருமே சாகலையே..’ என்ற வரிகளை முக்தா சீனுவாசன் ஆட்சேபம் செய்தார்.
இது விஷயமாக மூப்பாருக்கும் , தயாரிப்பாருக்கும் இடையே நான் சந்திப்பு ஏற்படுத்திய போது, மூப்பனார் சொன்னார், ” நல்லா தான் எடுத்திருக்கீங்க…அது உங்க கருத்து…. ஆனால் அவர் மீது குற்றம் சாட்டும்படி எடுத்தது தவறு… ” என்றார்.

இது தெரிந்த அந்த தலைவர் மூப்பானரைப் பற்றி வியந்த அவருடன் கூடவே இருந்த என் நண்பரிடம் சொல்லியுள்ளார்…

அதனால் தான் சோனியா காந்தி மூப்பனாரின் மேல் கோபம் கொள்ளவில்லை…
காங்கிரஸ் விட்டு தூர இருங்கள் என்று த,மா.கா நாட்களில் அவரிடம் சொன்ன போது, ராஜீவ் இழப்பின் வலி புரியுதா இல்லையா…
சரியோ தவறோ கடைசி வரை மத்தியின் சோனியா காந்தியின் ஆதரவு நிலைதான் தமாகா எடுக்கும் என்று சொன்னதை ஆழ்வார்பேட்டை அலுவலக்தில் சொன்னதை கேட்டவன் நான்.

—————————–
அடுத்து, குமரி அனந்தன் பற்றி மலர்மன்னன் எழுதும் விதம் சற்றே சிரிப்பாக இருக்கிறது…
தனிப்பட்ட நட்பு வேறு.. அரசியல் கருத்து வேறு.
… அடாது மழை பெய்தாலும், விடாது இந்த மாநாடு நடக்கும்… என்று அடை மழையில் குமரிஅனந்தன் 70களின் ஆரம்பத்தில் என் தந்தையின் கைபிடித்து நனைந்தவாறு கேட்டது காதில் உள்ளது.
அந்த குமரி அனந்தனை இரு முறை அமெரிக்க வருகையில் சந்திக்க நேரிட்டது.
அவரை ஒரு நாள் கலி·போர்னியாவில் சுற்றிக் காண்பிக்க கூட்டிச் சென்றதும் அப்போது அவரிடம் சோனியா பற்றிய கருத்து பரிமாற்றிக் கொண்டதும் நல் சம்பவமே….
ஆனால் அதே குமரிஅனந்தன் முதல் நாள் வரை இருந்து விட்டு அடுத்த நாள் காலையில் நரசிம்மராவுடன் சென்றது தொடர்பான கருத்து வேறு….

தமிழிசை பற்றியது உங்களின் தனிப்பட்ட இனிய, மரியாதைக்குறிய நட்பு சம்பவங்கள்… இதையும் அதையும் ஏன் கலக்கிறீர்கள்…?
அமெரிக்காவில் இருந்து வரும் தமிழர்களை குமரிஅனந்தன் அளவிற்கு மதித்து நடக்கும் இன்னொருவர் உண்டோ என்பதே ஒரு கேள்விதான்.. அற்புதமான அப்பா, மகள் அந்த விஷயத்தில்..
அதுவும் போக , தமிழைசையின் கணவர் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ராமசந்திரா ஆஸ்பத்திரியில் இருக்கும் அவர், தமிழ் சார்ந்த எவரும் அணுகினால் தரும் மரியாதையும் அன்பும் இருக்கிறதே …… அருமை…. அந்த குடும்பத்திற்கு வந்தனம்…

மலர்மன்னன், கருத்து பரிமாற்றத்தின் போது தனிமனித உறவு மனநிலை சம்பவங்களை உள்ளிழுத்து மனஸ்தாபம் ஏற்படுத்தும் வகையில் வரிப் பிண்ணல் , பிரயோகம் செய்கிறார்,,,,,, தயவு செய்து சல நிருபர்கள் போல் தமிழக சிண்டு முடியும் “ரிப்போர்டர்” பாணியைத் தவிர்த்தல் நலம்.
நான் தெளிவாக ” … சில நிருபர்கள்……” என்று சொல்லியுள்ளேன்…… இதையும் மலர்மன்னன் திரித்து விட வேண்டாம்.

அண்ணா காமராஜர் பற்றிய என் அனுபவம்.
காராஜரை என் தந்தை விழி வழியாக பார்த்து அவர் கருத்தே என் கருத்து என்றிருந்தேன்.
ஆனால், அண்ணா பற்றி பின் நான் நல்லதாகவும் கெட்டதாகவும் பல கேட்டு அவர் மீது ஏதொ ஒரு பற்றுக் கொண்டுள்ளேன்…

என்னைபோல் பலர் உள்ளனர்,,,
திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜா.க என்று பல கட்சிகளிலும் உள்ள நல் விஷயங்கள் புடிக்கும்.
மாறி மாறி ஓட்டுப் போடுவோம்…
அதனால், எங்களுக்கு உண்மையாய் இருந்தால் கசக்காது , சுடாது….
எங்கள் நிலை மாற்றிக் கொள்ள உதவும்….
மாறி மாறி நிலை எடுக்கும் பொது ஜன வாசிகள் நாங்கள்.
மலர்மன்னன் நினைப்புகளை அசை போடட்டும்…. ஆனால், பொய்யான தகவல் பதிவு செய்தால் ஆட்சேபம் வரும் என்பது தெரிந்து கொள்ளட்டும்.

அது சரி, சாதாரணமாக ஆட்சேபித்ததிற்கு இப்படி தனிமனித ரீதியில் தாக்குகிறாரே மலர்மன்னன், இது தான் அடுத்தலைமுறைக்கு அவர் சொல்லும் அணுகுமுறையோ…..?

கோவிந்தராஜன்…


kgovindarajan@gmail.com

Series Navigation

கோவிந்த ராஜன்

கோவிந்த ராஜன்