மோனிகா
A successful work of art is not one which resolves contradictions in a spurious harmony, but one which expresses the idea of harmony negatively by embodying the contradictions, pure and uncompromised, in its innermost structure.
– Theodore Adorno
“வருடங்கள் பல கழிய, நான் சிகையிழந்து, மூப்படைந்த பின்னும்
நீ எனக்கு காதலர் தின, பிறந்தநாள் வாழ்த்துக்களும், மது புட்டியையும் அனுப்புவாயா ?
நான் வெளியில் சென்று விடிகாலை மூன்றடிக்க கால்மணி நேரம் இருக்கையில் வீடு திரும்பினால் நீ கதவடைப்பாயா ?
உனக்கு நான் தேவைப்படுவேனா, எனக்கு நீ உணவளிப்பாயா,
எனக்கு அறுப்பத்தினாலு வயதாகும்போது ?
உனக்கும் கூட வயதாகிப்போகும். இதை நீ ஒப்புக் கொண்டால் நான் உன்னுடன் தங்குகிறேன்.
உன் விளக்குகள் அணைகையில் அதை சரி செய்ய நான் உன்னருகில் இருப்பேன்.
ஒரு ஞாயிறு மதியம் நீ குளிரங்கி பின்னிய பின் உன்னை சவாரிக்கு இட்டுச் செல்லுவேன்,
தோட்டமிடுவேன், களை எடுப்பேன், இதைவிட அதிகம் யார் கேட்க முடியும் ?
உனக்கு நான் தேவைப்படுவேனா, எனக்கு நீ உணவளிப்பாயா,
எனக்கு அறுப்பத்தினாலு வயதாகும்போது ?”
இந்த பாடலை எப்பொழுதாவது கேட்டதாக நினைவிலிருக்கிறதா ? எழுபதுகளில் பலருக்கு இது மிகவும் பரிச்சயமான பாடலாகும். அப்போது ராக் இசையில் உலகைக் கலக்கி வந்த பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஜான் லென்னனும் பால் மெக்கார்ட்னியும் எழுதிய பாடல்தான் இது. ஜான் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு இப்போது அறுபத்தினாலு வயதாகியிருக்கும். 1960ம் ஆண்டு ரிச்சார்ட் ஸ்டார்க்கி, ஜார்ஜ் ஹாரிஸன் என்ற இருவருடன் சேர்த்து இந்த நால்வரின் இசைக்குழு ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரத்தின் இந்திரா க்ளப்பில் தனது முதல் மூன்று மாத ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
1940ம் வருடம் பிறந்த ஜான் வின்ஸ்டன் ஓனோ லென்னன் மற்ற எந்த இசைப் பிரபலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மூலம் அறியப்பட்டவர். உலகின் மிகவும் வெற்றிகரமான குழுவின் உறுப்பினராக இருந்த அவர் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்வதற்க்கு தனது பாடல்களில் முயற்சி செய்தவர். ஒவியம் ஒன்று பீட்டில்ஸின் மறைவிற்குப் பிறகு அவர் பன்மடங்கு பலசாலியாகவும் உலகின் அநீதிகளின் மேல் கோபம் கொண்டவராகவும் குழுவைவிட்டு வெளியேறினார். தங்கள் இருபதுகளில் பெரும் பணமும் புகழும் அடைந்த உறுப்பினர்களைக் கொண்ட அந்த இசைக்குழு அந்தப் போதையிலேயே பிளவுண்டுப்போனது. தனது மனைவி யோகோவுடன் சேர்ந்துகொண்டு ஜான் இசை மற்றும் இசையைத்தவிர்த்த பல்வேறு முகாந்திரங்களிலும் உலகை மாற்றுவதற்கான முயற்சியில் இயங்கினார். பலரின் கண்களுக்கு அவர்கள் கோமாளிக் கூத்தர்களாகத் தெரிந்தார்கள். போருக்கெதிரான இயக்கங்களுடன் தீவிர வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜான் போதைப் பொருள்கள் மீது கொண்ட ஈடுபாடும் அவற்றை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் பத்திரிக்கைகளில் கூறியதும் அந்நாளைய அரசாங்கத்திற்கு அவரைப் பழிவாங்குவதற்கான ஒரு கருவியாக அமைந்ததனால் அவரது அமெரிக்கக் குடியுரிமை மறுக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெறுவதற்கு அவர் மிகவும் பிரயத்தனப்பட வேண்டி நேர்ந்தது. யோகோ பத்திரிக்கைகளின் பல அவதூறுகளுக்கு ஆளானார். பீட்டில்ஸ் பிரிவதற்கு யோகோதான் காரணம் என்ற எண்ணத்தினால் அமெரிக்க வட்டார வழக்குகளில் “யோகோ நடந்துவிட்டது” என்பது பிரிவு நிகழ்ந்தது என்பதாகப் பேசப்பட்டது.
1969ல் அமைதிக்கான கட்டிலிருப்புப் போராட்டம் என்று கூறிக்கொண்டு மாண்ட்ரியல் நகரில் தங்களது அந்தரங்க வாழ்க்கையை பொதுவாழ்க்கையுடன் சேர்த்து விளம்பரப்படுத்தினதாகக் குற்றம் சாட்டப்பட்டனர் லென்னன் தம்பதியர். “அன்பின் கோடை” என்ற இவர்களது பாடல் வந்து இரண்டு ஆண்டுகளான அந்த நேரத்தில் மக்கள் தம் நம்பிக்கையை அறவே இழந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அமெரிக்க மற்றும் கன்னடா நாட்டின் இளையதலைமுறையினர் உலகத்தின் எதிர்காலம் தங்களது கைகளில் உள்ளது என்று எண்ணினார்கள். வியட்நாம் போர் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கான மக்கள் தெருக்களில் போருக்கெதிராக ஊர்வலம் மேற்கொண்டனர். மாலை நேரத்துச் செய்திகளில் மக்களின் இறப்புக் கணக்கெடுப்பைக் காட்டி அதன் மூலம் தனது வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது பெண்டகன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஜிப்பிடப்பட்ட ரப்பர் பைகளில் இறந்துபோன இளம் போர் வீரர்களின் சடலங்களை கொண்டுவந்து இறக்கியவாறிருந்தன விமானங்கள். அதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற மக்கள் தாம் அரசாங்கத்தால் ஏமாற்றப்படுகிறோமென்றுணர்ந்து ஆத்திரத்தில் இருந்தனர். அமெரிக்கா பிளவுபட்டுப் போனது. மக்கள் குழப்பமடைந்தனர். கோபம் ஆக்கிரமித்திருந்தது. அரசாங்கத்தின் திடார்ப் போருக்கெதிராக வட அமெரிக்காவின் சிறுபாண்மையினரின் போராட்டத்துக்கு அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை அராஜகமாக இருந்தது. இவர்களின் ‘அமைதி நோக்கிய கட்டிலிருப்புப் போராட்டத்தை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் கெர்ரி டெயிட்டர் “ இதற்கு நடுவே (மேற்கண்ட நாட்டின் நிலைக்கு), வந்த இந்த “பாப் நட்சத்திரம்” ஜான் லென்னன், இளைஞர்களின் உள்ளம் கவர்ந்தவர், ஆனால் உலகத்தாரால் போருக்கு நிகரான சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் அணுகப்பட்டவர்.. … தன்னுடைய ஓவியங்கள் புதிய முயற்சியாகவும், உண்மையாகவும் இருந்தபோதிலும் பிரபஞ்சத்தினாலும் கலை உலகினாலும் பெருமளவில் நிராகரிக்கப்படும் ஒரு “விசித்திரமான” கீழை தேசத்து மனைவியுடன் வாழ்கின்ற மனிதன். இவர்கள் போர் முடிந்துவிட்டதென்று நமக்கெல்லாம் சொல்ல வருகிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதை நம்புவது மட்டுமே. என்ன ஒரு எளிமையான செய்தி! இப்படியாக இவர்கள் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் தங்களுடைய அமைதி, நியாயம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்காக இந்த உலகத்தாரை மாண்ட்ரியல் ஓட்டலில் உள்ள படுக்கையறைக்கு அழைத்துச் சென்றனர்” என்று ஏளனமாகப் பேசுகிறார்.
1991ல் நடந்த வளைகுடாப் போரை எதிர்த்த நாடுகளில் “அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்ற லென்னனின் வாக்கியம் போராட்டத்தின் அங்கமாகிப்போனது. ஓவியம் இரண்டு இதில் வேடிக்கை என்னவென்றால் ‘பிளாஸ்டிக் ஓனோ ‘ இசைக்குழுவினர் லா ரெயின் ஹோட்டலின் தரையினில் அமர்ந்து முழுவதும் கஞ்சா அடித்த நிலையில் அப்பாடலை பதிவுசெய்திருந்தனர்.
சமீபத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று நியூயார்க் மன்ஹாட்டனின் கீழ்பகுதியில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் பளபளப்பான வஸ்திரக் காட்சியகங்களிலும், உயர் ரக காலணிக் கடைகளுக்கும் இடையே பொதுமக்கள் திரள் ஜான் லென்னனின் ஓவியக்கண்காட்சியை பார்ப்பதற்காக முட்டி மோதிக்கொண்டிருந்தது. அவரது அறுபத்தி நாலாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது மனைவி யோகோவினால் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. ஓவியம் நான்கு தனது வாழ்க்கையை ஒரு ஓவியராகத் தொடங்கிய ஜான் பிறகு இசையின் மீது ஆர்வம் கொண்டு தனது துறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய பயணம் முழுவதிலும் ஓவியம் வரைந்து கொண்டிருந்திருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு இசைத்தட்டும் வெளியிடும்போது அதற்கான உணர்வுகளை கோட்டோவியமாக தீட்டி இருக்கிறார். ஜான் என்ற ஒரு பிரபல இசைக்கலைஞனின் ஓவியங்கள் என்பது தவிர இவை தன்னளவில் ஒரு தரமான கலாரசனைக்குறிய படைப்புகளா என்பது கேள்விக்குறியது.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள பாடலின் இச்சை, இசை உள்ளங்களை உருகச் செய்யுமாறான நிகழ்ச்சி 1980 வருடம் ஜான் லென்னன் தனது பாடல்களை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியபோது நடந்தது. மாலையில் தனது இசைத்தட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்ற தனது ரசிகராலேயே இரவு வீடு திரும்பும்போது ஜான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்ன ஒரு அசாதாரண வாழ்க்கை ? இப்படி அன்பினால் அசுரத்தனமாக உலகை அணைத்துத் தழுவிய கலைஞனை இப்படி சுட்டுக் கொன்றது யாரென்ற கேள்வி எழுமாயின்.. … .. மார்க் சேப்மேன் என்ற இருபத்திஐந்து வயது இளைஞர்தான் அவர். ஓவியம் மூன்று.
சிறு வயதில் தனது தாய் விளையாடக் கொடுத்த பொம்மைகளிடம் தன்னை கடவுளாக பாவித்துக் கொண்டு தனக்குள் ஒரு கடவுளுக்கான பாவனையை கற்பனை செய்து கொண்டிருந்த மார்க்கின் வழிகாட்டியாக ஜான் பல வருடங்கள் இருந்திருக்கிறார். வியட்நாம் போரின் சமயத்தில் அதற்கு எதிரான கருத்தை முன் வைப்பதற்காக “கிருஸ்துவம் இனி வாழாது” என்று ஜான் கூறியதைப் படித்திருந்த மார்க் மிகவும் ஆத்திரம் அடைந்ததுடன் கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நியூயார்க்கை நோக்கிச் சென்றார். தான் பிரசித்தி பெற வேண்டும், உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மனிதனாக வேண்டும் என்ற எண்ணங்கள் இந்த அடையாளம் தேடித் திரிந்த ஏழை இளைஞனின் உள்ளத்தில் எழுந்தது. மற்றொரு பிரபலத்தை கொன்றால்தான் தனக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்ற எண்ணம் அவரிடம் வலுத்தது. வீட்டை விட்டு வெளியேற்ிய ஜானிடம் ஒரு நாள் அவரது இசைத்தட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பிறகு அவர் வீடு திரும்பியபோது அவரை சுட்டுக்கொன்றார் மார்க். இன்று மார்க்கிற்கு வயது 49. இருபது வருடம் முதல் ஆயுள் முடியும் வரை சிறையடைப்பு செய்யப்படலாம் என்ற நிலையில் மார்க்கின் நடத்தையும், மற்றவர்களிடம் அவர் பழகும் தன்மையும் வைத்து அவரை வெளியில் விட பல முயற்சிகள் நடந்தன. மூன்றாவது முறையாக அவரை வெளியேற அனுமதி அளித்தபோது யோகோ தனக்கும் தனது மகன்களுக்கும் அது பாதுகாப்பு இல்லை எனக்கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் விடுதலை மறுக்கப்பட்டது. தான் சுட்டுக் கொன்ற நபர் ஒரு பிரபலமாக இல்லாமல் போயிருந்தால் மனநிலை தேறிய இந்த மனிதனுக்கு எப்பொழுதோ விடுதலை கிடைத்திருக்கும். இன்னமும் தாகம் தீராமல் அமெரிக்கா தனது போர்ப் பசியில் மக்களை விழுங்கிக் கொண்டுதானிருக்கிறது. இன்னும் பல நூறு ஜான்கள் வந்தாலும் அதன் ஆதிக்க வெறி தனியப் போவதில்லை. ஆனால் தனது வாழ்க்கையை சிறைகம்பிகளுக்குள் கழிக்கும் இவரை ஜானின் அன்பு குறித்த அடைமொழிகள் எங்கே இட்டுச் செல்லப் போகின்றன ? ஏன் ஜானின் ஓவியங்கள் எந்த அருங்காட்சியகத்தாலும் அங்கீகரிக்கப்படவில்லை ? ஓரு சாதாரண மனிதனின் ஓவியத்திற்கு இத்தனை வரவேற்பு இருந்திருக்குமா ? இப்படி பல கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் தனது சிந்தனை வடிவத்தை வெளிக்கொணர குறிப்பிட்ட ஊடகத்தை கையில் எடுத்துக் கொள்கிறான். பற்பல சமயங்களில் கலை, கலைஞன் என்ற வார்த்தைகள் ஒரு அகவயப்பட்ட கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும் கலைஞன் சமூகத்தின் ஒரு அங்கம். சமூகத்தையும் அதன் தாக்கங்களையும் உள்வாங்குதலும் அதை தன் படிமங்களின் மூலம் வெளிக்கொணர்வதும் ஒரு கலைஞனின் சமூக பங்களிப்பாகிவிடுகிறது. கலை கலைக்காகவே என்று பார்த்தாலும்கூட யதார்த்தத்திற்கும் யதார்த்தத்தின் உள்ளர்த்தங்களுக்கும் புறம்பான ஒரு வடிவத்தையோ, கருத்தையோ உணரச்செய்வது சாத்தியமில்லாததால் கலை சமூகம் சார்ந்ததாகிவிடுகிறது. மனித நேயமும், யதார்த்தமும் தவிர்த்த எந்த ஒரு வடிவமும் ஒரு உருப்பெறாத மண் பாண்டத்தைப் போன்று புலன்களுக்கப்பாற்பட்டதாகி தேவையற்றதாகிப் போகிறது.
1. இது மக்கள் சக்தி
2. இது ராக் & ரோல் மட்டுமே
3. ஜானின் சுய உருவப்படம்
4. சிரி
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு
- உரத்த சிந்தனைகள்- 3
- ஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்
- கிஷன் பட்நாயக் – 1930 – 2004
- காற்றினிலே வந்த கீதங்கள்
- சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -4
- மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை
- ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘
- கடிதம் 14,2004
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)
- அக்டோபர் 14,2004
- ஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004
- விளையாட ஒரு பொம்மை
- பெரியபுராணம் — 13
- குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)
- கவிதைகள்
- என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை
- பூரணம்
- மெய்மையின் மயக்கம்-21
- பெரிய பாடம்
- பருவக்கோளாறு
- கடல் தாண்டிய உறவுகள்
- நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41
- வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு
- ஆதித்தனார் 100: அஞ்சலி
- டைரி
- விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
- ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்
- முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்
- யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)
- தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )
- ஊனம் உள்ளத்தினுள்ளா ?
- கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு
- தவிக்கிறேன்
- ‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)
- என் நிழல்
- குகன் ஓர் வேடனா ? ?..
- கவிதை
- சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)
- மறுபிறவி மர்மம்
- கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்