ஒரு மலைக்கால மாலைப்பொழுதில்…

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

தி. கோபாலகிருஷ்ணன்


மூட மனமில்லாமல்
மழைக்காற்றில்
படபடக்கும் என் கதவு

ஈரத்தில் இறுகி
திறக்க இடம் கொடாது
எதிர் வீட்டு சன்னல்

குளிாில் கிட்டித்துப்
பல் நடு நடுங்கப்
பாடும் ஒரு நா

கதகதப்பு வேண்டி
கம்பளி போர்த்தும்
இரு செவி மடல்கள்

மழலை கட்டிய
மணல் வீடு
மழையில் கரையும்

காகிதக் கப்பல்
சேர்வதற்குக் கரையில்லாது
நெடும்பயணம் மேற்கொண்டு

மாடிவீட்டு குழாயின்
மழை நீர்ச் சுழலில்
சிக்கி மூழ்கும்

என் வாசல்
ஈரமாய்க்
கலங்கி நிற்கும்

ஈரம் உதற விாித்த சாக்கு
இரு மெல்லிய பாதம் படத்
தவமிருக்கும்

ஹ்ம்
விழா நாளின்
கம்பளத்திற்குக்
கிடைக்காத வரம்

மழை நாளின்
இந்தக் கந்தலுக்கா
கிடைக்கப் போகிறது ?

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி