ஒரு மகாராணியின் அலுவலகவழி (அல்லது) தமிழ்ப் பெண்ணியத்தின் எதிர்காலம்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

முனைவர் மு. பழனியப்பன்



ஓர் இயக்கத்தின் எதிர்கால நிலையை அந்த இயக்கத்தின் நிகழ்கால வெற்றி உணர்த்திவிடும்¢. எதிர்கால கனியின் வளர்ச்சிக்கு நிகழ்கால விதை முக்கியமான காரணி. இவ்வகையில் தமிழ்¢ப் பெண்ணியம் என்பதன் நிகழ்காலப் போக்கு அதன் எதி¢ர்கால மலர்ச்சியைக் காண வழிவகுக்கிறது.

தற்காலத்தில் பெண்ணியம் உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. உணவு சமைப்பவளாக, பிள்ளை பெற்றுப் போடும் இயந்திரமாக மட்டும் இருந்த பெண்களின் நி¢லை உலகு தழுவிய அளவில் பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாகி மேம்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களாக, நீதிபதிகளாக, மருத்துவர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பேராசிரியர்களாக, இராணுவ அதிகாரிகளாக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் முதலான ஆசிய நாடுகளில் ஆட்சியாளர்களாக விளங்கிய பெண்கள் ஐரோப்ப நாடுகளில் பேருக்கு ஆட்சி அரசப்பணிகளில் பங்காற்றும் பெண்களைவிட மேலான அதிகாரம், ஆட்சிப் பண்பு பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். உலக வல்லரசு நாடுகளில் பெண்கள் வாக்களிக்கவே பலகாலம் போராட வேண்டியவர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மூன்றாம் உலகநாடுகளில் கூட மாற்றம் பெற்றுவிட்டன என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.

இத்தகைய உலகச் சூழலில் தமிழகப் பெண்கள் அல்லது தமிழ்ப் பெண்ணியம் என்பதன் நிகழ்கால நிலை கல்வியாலும் தொழிலாலும் பொருளாலும் மேம்பட்ட எண்ணிக்கை உடையதாகவே உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

பழைய தமிழகத்தின் பெண்களுக்கான பள்¢ளிக்கூடம் என்ற புதுமை தற்போது பெண்களுக்கான பல்கலைக்கழகம் என்பதாக விரிவு பெற்றுள்ளது. பெண்களுக்கு மகப்பேறு பார்த்த ஆண்மருத்துவ தலைமுறை கழிந்து பெண்கள் ஆண்களுக்கு மகப்பேறு மருத்தவத்துறையில் குறை களையும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விட்டது. பெண்களுக்கான தையல்காரர்கள் மறைந்து பெண் ஆடை வடிவமைப்பாளர்கள் இடம் பெற்றுவிட்டனர். பெண்களுக்கு ஆண் ஓட்டுநர்கள் பயிற்சி தந்த காலம் மலையேறி பெண்களுக்குப் பெண்கள் கற்றுத் தரும் காலம் வந்தாகிவிட்டது. நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் மாற்றி மாற்றி உழைக்க தமிழகப் பெண்கள் தயாரகி விட்டனர்.

”இதுவரை இக்கட்டுரையில் பார்த்த ஆண் / பெண் தொடர்பான அனைத்துக் கருத்தாங்களையும் அனைத்து வகையிலும் எதிர்கொண்டு, பெண்ணியல் பார்வையில் மறு உருவாக்கம் செய்ய வேண்டிய மாபெரும் பணி பெண்ணியல் கல்வி முன் குவிந்து கிடக்கிறது. தமிழ்ச் சூழலில் இத்தகைய பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை எனலாம். தமிழ் இலக்கியம், மதம், குடும்பம், கல்வி, பண்பாடு, அரசியல் ஆகிய அனைத்தையும் இத்தகைய அலசலுக்கு உட்படுத்த வேண்டும்” (1994) ( க. பஞ்சாங்கம், பெண்ணெனும் படைப்பு, ப,93) என்ற கருத்¢து ஏறக்குறைய பத்தாண்டுகளில் மாற்றம் அடைந்து தமிழ்ப் பெண்ணியம் கொள்கை அளவிலும், செயல் அளவிலும், ஆய்வு அளவிலும் கிளைத்து விட்டது என்பதை தற்போதைய சூழல் உறுதிப்படுத்தும்.

வாழ்வாலும், சூழலாலும், அணுகுமுறையாலும் மேம்பாடு அடைந்துள்ள தமிழ்ப் பெண்கள் எதிர்காலம் என்ற கால அளவில் கைப்பற்ற வேண்டிய வசதிகளும், வாய்ப்புகளும், உரிமைகளும் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதன் ஒரு தொடக்கப் புள்ளியாக இந்நிகழ்காலம் அமைந்¢துள்ளது.

பெண்களுக்கான வாழ்க்கை முறை
பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு அடிப்படை காரணங்கள் இரண்டு என்பர் (1998) (1. கோவிந்தசாமி , நட்ராஜ் (மொ), மார்க்சியம் – பெண்ணியம் உறவும் முரணும், ப, 130). அவை 1. பெண்களின் பலவீனம் 2. பெண்களின் மறு உற்பத்திப் பங்கு. இக்கருத்தில் முதல் கருத்து ஆண்களால் புனைவிக்கப் பட்ட கருத்து. இரண்டாம் கருத்து ஏற்கத்தக்கது. இரண்டாம் கருத்தைப் பெண்களுக்கான வாழ்க்கை முறை என்றுகூட அமைத்துக் கொண்டால் இச்சிக்கலைத் தீர்க்க எளிதாக வழி கி¨ட்த்துவிடும்.

தற்காலத்தில் பெண்ணிய வாதிகள் முன்வைக்கும் பெண்களுக்கான வாழ்க்கைமுறை என்பது மிகக் குழப்பம் தரும் ஒரு செய்தியாக உள்ளது. தமிழ்ப் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான விடுதலைமிக்க வாழ்க்கைமுறை என்பதாக எதனை முன் வைக்கிறார்கள் அல்லது எதனை முன்வைக்கப் போகிறார்கள் (போகிறோம்) என்பது குறித்த தெளிவான சிந்தனை இன்னும் பிறக்கவில்¢லை.

இச்சிக்கல் குறித்து உலகப் பெண்ணியத்தின் எதிர்கால நிலை என்ன? அதனோடு தமிழ்ப் பெண்ணியவாதிகள் ஒத்துப் போகப் போகிறார்களா (போகிறோமா) அல்லது மாறுபடப்போகிறார்களா? (போகிறோமா) என்னும் கேள்விகள் சிந்திக்கப்பட வேண்டிய கேள்விகள் ஆகும்.

உலகப் பெண்ணிய வாழ்¢க்கைமுறைமையை ஏற்பதால் இந்திய , தமிழ்நாட்டு அளவில் இந்திய , தமிழ்நாட்டுப் பெண்கள் சந்திக்க வேண்டிய சவால்கள், தனித்த தீவாகத் தங்களை அமைத்துக் கொள்வதால் ஏற்படப்போகும் நன்¢மை தீமைகள் இவைகளின் அடிப்படையில் இந்தக் குழப்பத்தை அணுகவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது எதிர்கால விடியலும்¢கூட.

இதனை வி¢ரிவாகவே இன்றைய தமிழ்ப் பெண்ணியவாதிகளின்¢ கண்ணோட்டத்தில் அறிய இயலும். ” பாலியல் சுதந்திரம், திருமண பந்தத்திலிருந்துவிடுதலை, ஓரினச் சேர்க்கை, தி¢ருமண நிறுவனத்தில் நுழையாமல் இணைந்¢து வாழ்தல் என்பவையெல்லாம் ஒரு சிலருக்கு வாழ்வு முறையாகலாம். அவர்களுக்கான தடைகளை நீக்கிக் கொள்ள அவர்கள் செய்யும் முடிவாகவும் இருக்கலாம். அப்படி அவர்கள் வாழ்வதில் எவ்விதத் தடையும் யாருக்கும் இருக்கப் போவதில்லை. அந்த நிலை நிச்சயம் உருவாகலாம். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கான மதிப்பு, மரியாதை, சுதந்திர உணர்வு, அனைத்தையும் சமூகம் புரிந்து கொள்ளும் மாற்றமும் ஏற்படலாம்.”(2005)¢ ( முனைவர் தேவதத்தா, மெளனத்தின் அதிர்வுகளும் மொழியும் -பெண், ப 100) என்று உலகப் பெண்ணியவாதிகள் முன்வைக்கும் விடுதலை மிக்க பெண் வாழ்க்கைமுறையைச் சுட்டிக்காட்டி அதேநேரத்தில் தமிழ்ப் பெண்களில் சிலரும்¢ இத்தகைய வாழ்வை வாழ்வதாகவும் தொட்டுக்காட்டி பெண்களுக்கான எதிர்கால வாழ்க்கைமுறை குறித்து ஒரு சில கருத்துக்களை ஒரு பெண்ணியவாதி முன்வைக்கிறார்.

ஆனால் அவரே தொடர்ந்துவரும் அடுத்த பத்தியில் ” இது விலக்காக இருக்கும் நெறி. இதனைப் பொதுவான வாழ்¢க்கை நெறியாக ஆக்க காலம் பிடிக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை, குழந்தைகள் நம் மூலமாகப் பிறக்கின்றனர் ஆனால் அவர்கள் நம் சொத்தல்ல என்பதைப் புரிந்து கொண்டால் ஆண், பெண்ணைச் சொத்தாகவும் உடமையாகவும் கொண்டு அடிமைப்படுத்தியது போன்றே குழந்தைகளையும் அடிமைப்படுத்தும் நிலை உருவாகாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யலாம். . . அவரவர் உயிர்¢ வாழ்தலுக்கு சுவாசிப்பது, எப்படி இயல்பாகிறதோ அதைப்போன்றே சமூகத்தின் ஆரோக்கியமான உயிர்வாழ்தலுக்கு ஆண் பெண் சமத்துவம் இயல்பாக உருவாக வேண்டும்.”(மேலது ப. 100 -101) என்று சொல்லி தான் சொல்ல வந்த முன் கருத்தில் இருந்து சற்றுத் தளர்வடைகிறார்.

இவ்வகைப்பட்ட குழப்பமான போக்கு தமிழ்ப் பெண்ணியத்தின் தற்கால சிக்கல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்ப் பெண்ணியவாதிகள் குடும்பம் என்ற கட்டமைப்பை உடைக்கப் போகிறார்களா இல்லை அப்படியே வைத்துக் கொண்டு குடும்பத் தலைவரின் மனைவியாக வாழப்போகிறார்களா என்ற தெளிவைப் பெற இவர்கள் இன்னமும் இழுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த இழுபறி தவறு – சரி என்று கூறுவதற்கு முன் தந்தைப் பெரியார் கூறும் ஒரு கருத்தைக் காண்போம். ”அன்றியும் பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுங்கும் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகிறது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும்…. தவிர பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்ட விடக்கூடும்-? அல்லது இந்தத் தர்மநியாயம் (அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை.”(1942) ( பெரியார் , பெண் ஏன் அடிமையானாள், ப,100 ) என்ற பெரியாரின் கருத்து மிக முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.

தேவதத்தா கூறும் குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஆண் பெண் சரிசம வாழ்க்கைமுறை தற்கால தமி¢ழ்ப்பெண்களுக்கு ஏற்றதாகத்¢ (சபிக்கப்பட்டதாகத் ) தோன்றினாலும் அது சென்றடையக் கூடிய பாதை பெரியார் கூறிய தனித்த பாதைதான்., அந்தப் பாதையை அடைதற்கு நாட்கள், வாரங்கள் , மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் ஆகலாம். இதன் பாதிப்பை இதன் இழப்பை இதன் உயர்வை, இதன் ஏற்றத்தை எதிர்காலப் பெண்ணியம் தக்கவகையில் எதிர்கொள்ளும் என்பதில் மட்டும் ஐயமி¢ல்¢லை.

பெரியார் கூறிய அளவிலான நிலைப்பாட்டைத் தமிழ்¢ப் பெண்ணியவாதிகள் செயலாக்குவதில், பரப்புவதில், கடைபிடிப்பதில் உள்ள கால இடைவெளிதான் இந்த எதிர்கால நிகழ்வின் வரவை விரைவு படுத்தும் அல்லது தாமதப்படுத்தும்.

பெண்மொழி
பெண்களுக்கான மொழி என்பது அடுத்து நிகழ்காலத்தில் இனிது ஊன்றப் பெற்றிருக்கும் சத்தான விதை ஆகும். நிகழ்காலப் போக்கில் தமிழில் பெண்மொழிக்கான உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பெண் எழுத்து, பெண் வார்த்தை, பெண் தொடர் உருவாகவி¢ல்லை. அதாவது ஆண் சொற்களில் பெண்கள் தம் உள்ளத்தை எழுதி வருகின்றனர். ஆண்சொல் பெண்உள்ளம் என்ற நிலைக்கு ஒரு பெண்கவிதையைச் சோதனை செய்துபார்த்தால் உண்மை தெரியவரும்.

அடங்காப் பிடாரி யென
ஆசைதீரக் கத்தட்டும்
அதற்குமேல் என்னவுண்டோ
எல்லாமே சொல்லட்டும்
நான் நிஜமாகத்தானிருப்பேன் (இளம்பிறை, மெளனக் கூடு)
( மேற்கோள், முனைவர் தேவதத்தா, மெளனத்தின் அதிர்வுகளும் மொழியும் -பெண், ப 74)
என்ற இந்த ஆறுவரிக் கவிதையில் முதல்வரியில் இடம்பெறும் ‘அடங்காப்பிடாரி’ என்ற பட்டப்பெயர் ஏதோ ஒரு காரணத்திற்காக இக்கவிதையில் குறிப்பிடப்படும் பெண்ணுக்கு ஆணுலகத்தால் தரப்பட்ட பட்டபெயராக விளங்குகிறது. எனவே அது பெண்மொழி அல்ல- ஆணைக் குறிக்கும் மொழி என்பது தெளிவு. அதனை விட்டுவிடலாம்.

அடுத்தவரியில் இடம்பெறும் ‘ஆசைதீரக் கத்தட்டும்’ என்ற அடியில் உள்ள கத்தட்டும் என்ற வினைச்சொல் பிறவினையாகும். பிற என்பதாலேயே அதுவும் ஆணைக் குறிக்கும் மொழியாகிவிடுகிறது. ”அதற்குமேல் என்னவுண்டோ எல்லாமே சொல்லட்டும் ” என்பதுவும் மேல் உள்ள அடி போன்றதே. அதனால் அதுவும் ஆணைக் குறிக்கும் மொழி என்பது தெளிவு. இவற்றையும் விட்டுவிடலாம்.

எஞ்சியுள்ள ” நான் நிஜமாகத்தான் இருப்பேன் ” என்ற வரியைச் சற்று ஆராய்வோம். ‘நான்’ என்பதும் ‘நிஜமாகத்தானிருப்பேன்’ என்பதும் தன்மை இடம்¢ சார்ந்தவை. தன்மையிடத்தில் அ·றிணை உயிர்கள் பேசாது என்பதால் அவற்றிற்கு இலக்கண ஆசிரியர்கள் தன்மை முடிவுகளைத் தரவில்¢லை. உயர்திணைக்கு மட்டுமே ‘என், ஏன’¢ (ஒருமை) என்ற விகுதிகளை இலக்கண ஆசிரியர்கள் தந்துள்ளனர். அ·றிணைகள் தன்னைப் பற்றித் தானே சொல்லும் இயல்பிலாதன. தற்காலத்தில் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அ·றிணைகள் பேசுகின்றன என்பது காலத்தின் வளர்ச்சி.

மற்றொரு இலக்கண நெறி ஆண்பால் இறுதிவிகுதி ‘ன்’ என்று கூறுகிறது. அவ்வகையில் ‘என’¢, ‘ஏன்’ ஆகியவற்றில் உள்ள ‘ன்’ ஈற்றை ஆண்பால் விகுதி என்பதாகக் கணக்கில் கொண்டால் பெண்களும் அ·றிணை போல விகுதியற்றவர்களாகிவிடுவார்கள். இந்நோக்கில் பார்க்கும்போது ‘நான்’ என்ற சொல்லிலும் ‘நிஜமாகத்தானிருப்பேன் ‘ என்ற சொல்லிலும் பெண்மொழிக் கூறு இல்லை என்பது தெளிவாகிவிடும்.

ஆனால் பாடலின் பொருண்மை பெண்ணுக்கானது. எனவேதான் பெண்மொழியின் பொருண்மை உருவாகிவிட்டது. அதன் உள்ளடக்கம் தமி¢ழில் தயாரகிவிட்டது. எழுத்துக் குறியீடோ அல்லது சொல்லோ அல்லது தொடரோ உருவாகவில்லை என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது. இச்சூழலில் பெண் வார்த்தைகள் இல்லாமல் பெண்ணுக்கான எழுத்துக் குறியீடுகள் இல்லாமல் எவ்வாறு உண்மையான பெண்ணிலக்கியம் தோன்றிட முடியும்.

இந்தக் கேள்வியின் பின்னணியில் ஆண் மொழிகளை விட்டு வேறு ஒரு புதுமொழியை உருவாக்கப் பெண்ணுலகம் முயற்சி செய்தாலும் தமிழ்ப் பெண்ணியம் அல்லது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்கள் தமிழ் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு புதுமொழியில் எழுதத் தொடங்குவதை தமிழ்ப் பெண்ணியம் என்று சொல்ல முடியாது. இவ்வகையில் சிக்கல் எழுகிறது.

எனவே தம் மொழியான தமிழில் சில பெண் மொழி அடையாளங்களை அமைத்துக் கொள்ள தமிழ்ப் பெண்ணியவாதிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்¢டும்.

தமிழோடு கூடிய பெண் எழுத்தி¢ல் பெண் சொல்லில் பெண் தொடரில் பெண் உள்ளம் விரிகிறபோது அதை பெண் எழுத்தி¢ல் பெண் சொல்லில் பெண் தொடரில் உண்மையான பெண் படித்து உணருகிறபோது உண்மைப் பெண்ணிலக்கியம் தோற்றம் பெற்றுவிடும். இந்தப் பெண்மொழிக்கு நூற்றாண்டு அளவு காத்திருக்கத் தேவையில்லை என்பது மட்டும் உறுதி. இந்தப் பாதையை நோக்கிப்போகும் ஒரு மகாராணியின் அலுவலகவழி தற்போது திறக்கப்பட்டுவி¢ட்டது என்பது மட்டும் உறுதி. அந்தவகையில் தற்போது தமி¢ழ்ப் பெண்மொழிப் பண்புகளைத் தமிழ்ப் பெண்ணியவாதிகள் பலர்¢ முன்வைத்துள்ளனர். அவர்கள் கூறும் பெண்மொழித் தன்மைகள் பின்வருமாறு.

1. எந்த நிலையிலும் பெண்ணை ஒரு கவர்ச்¢சிப் பொருளாகச் சித்திரிப்பதற்கோ உடமைப் பொருளாகவும் போகப் பொருளாகவும் சிறுமைப் படுத்துவதற்கோ துணியாததுடன், அவ்வாறான போக்குகளுக்கு எதிரான கண்டனத்தை எழுப்பவும் தயங்காததே உண்மையான பெண்ணிய எழுத்தின் இயல்பு( 2001) ( எம். ஏ. சுசீலா, பெண் இலக்கியம், வாசிப்பு,ப. 47)

2. எதிர்கால மொழி பெண்மொழிக்குச் சிறப்பிடம் நல்கும் என்று எண்ணுதல் பெருமைதான். பெண் உடலை எழுதும் நிலையில் இன்றையப் பெண் எழுத்துக்களின் வெளிப்பாடு காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் பெண் மனங்களின் கொந்தளிப்பு என்பதையும் உணர முடியும்.(2005) ( முனைவர் செ. சாரதாம்பாள் , பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும்)

3. தன் இருப்பை தன் சுயத்தை மீட்டெடுத்த பெண் இப்போது தனக்கான தடைச் சுவர்க்ளைத் துனிச்சலோடு தாண்டி முன்னேறிச் செல்கிறாள் நதியாக. நதி எக்காலத்தும் பின்னோக்கிச் செல்வதில்லை. இனி அவள் பொங்கிப் பாய்வதில் அவளை அழத்தி வைத்த அத்தனை கருத்தாக்கங்களையும் சுனாமி அலையாய் அடியோடு அழித்து தனக்கான ஒரு புதிய வெளியைக் காணும்போது பெண்ணுக்கான இயல்பான மொழி உருவாகும். (2005)¢( முனைவர் தேவதத்தா, மெளனத்தின் அதிர்வுகளும் மொழியும் -பெண், ப 95)

4. பாலியல் உறவுகளை அவள் பேசுகிறபோதும் அவை அசிங்கமாகவோ ஆபாசமாகவோ இல்லாமல் புனிதம் என்ற புனைவும் கடந்து நிற்கும் போது உண்டாகும் மொழி பெண்மொழி (மேலது ப, 95-96)

5. அவள் உடலையும் உடலைச் சார்ந்த வலிகளைப் பற்றியும் சுதந்திரமாக வெளிப்படுத்தும்போது அவளுக்கான மொழி வீரியத்தோடு பிறக்கிறது (மேலது)

இவை பெண்மொழிக்கான சில வரையறைகள். இவை மொழியின் பொருண்மை அல்லது பாடுபொருள் குறித்த வரையறைகளே. பெண் எழுத்து என்பதற்கான தனிக் குறியீடு எதுவும் இல்லாத நிலையில் பெண் எழுத்தை வெறும் பொருண்மை கொண்டு கணக்கிடுவது சரியானது ஆகாது. அளபெடைக்குத் தனித்த வரிவடிவத்தைத் தந்த இலக்கண ஆசிரியர்கள் போல தனித்த குறியீட்டு பெண் எழுத்து தோன்றவேண்டும். அதற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் தமி¢ழ்ப் பெண்ணியவாதிகள் தொடங்கவேண்டும். எவ்வாறு அதனைத் தொடங்கலாம். சில கற்பனைகள்

1. தலைப்பெழுத்தைப் போட்டு பெயரை எழுதுவதுபோல பெண் என்பதில் உள்ள ஒற்றைக் கொம்பை எல்லாச் சொற்களிலும் பயன்படுத்தி புதிய தமிழ்ப் பெண் மொழியை ஆக்கலாமா? (எ.டு. ¦பெண் ¦என்பவள் ¦ஆணின் ¦எதிர்பால் ¦இனம் மெட்டுமல்ல ….)

இதன் சிறப்பு- இவ்வகை எழுத்து பெண்களின் உடலமைப்பில் உள்ள கொங்கைக் குறியீட்டு அமைப்பில் அமைந்துள்ளது. இன்னும் இதனை சற்று மாற்றி இரட்டைக் கொம்பு வடிவைக் (§) கவிழ்த்¢து படுக்கை வாட்டில் அமைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

2. ஆண் அதிகாரத்திற்கு எதிரான தலைகீழ் மாற்றம் பெண்களுக்குத் தேவை என்பதால் இடமிருந்து வலம் என்ற தமிழ் எழுத்துப் பழக்க முறையை மாற்றி வலமிருந்து இடம் என்ற எழுத்துமுறையைப் பெண்களுக்கான எழுத்துமுறையாக ஆக்கலமா? (எ.டு) ..,லல்மடுட்ம ம்னஇ ல்¡பர்திஎ ன்ணிஆ ள்வபன்எ ண்பெ

3. பழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களில் ஆண்வயப்பட்ட சொற்களை நீக்கிவிட்டு புதிய பொருள் கொண்ட சொற்களைப் பெற புதுவகைப் பெண் மொழித் தமிழ் அகராதிகளை உருவாக்கியும் இதனை நடைமுறையாக்கலாம்.

What is Women ? என்பது இரண்டாம் பாலினம் என்ற (சைமன் டி பாவியர் எழுதியது) புத்தகத்தில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி. இதற்குத் தமிழில் பதிலாகத் திருவள்ளுவர் தரும் தற்காத்து… என்ற குறளின் விளக்கத்தை வைக்க இயலுமா? அது நிறைவாக இருக்காது. எனவே பெண் என்பதற்கு புதிய பொருள் சொல்லவேண்டிய கட்டாயம் தமிழ்ப் பெண்ணியவாதிகளுக்கு உள்ளது. அவ்வகையில் புதிய அகராதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு எந்த ஆண்மைய நிறுவனமும் பணஉதவி செய்யாது. இதனை உருவாக்கப் பெண்களின் முயற்சி எண்ணிடலங்காத அளவில் தேவை.

4, பெண்களின் வாய் வழி இலக்கியமான தாலாட்டு ஒப்பாரி ஆகியவற்றில்¢ உண்மைப் பெண்ணிலக்கியம் புதைந்து கிடக்கிறது. அவற்றில் பயன்படுத்தப்படும் பெண் மொழிகளைக் கொண்டு புதிய தமிழ்ப் பெண் மொழியை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதற்கு ஒரு காட்டு மட்டும் தரப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட தாலாட்டுப் பாடல்களை ஆராய்ந்த போ. சத்தியமூர்த்தி என்பவர் தன் முனைவர் பட்ட ஆய்வேட்டில் பல தாலாட்டுப் பாடல்களைப் பதியவைத்துள்ளார். அதில் பின்வரும் ஒரு பாடல் (49)அமைந்துள்ளது.

”ரேரேரே ஆய்
எங் எண்ணே
ராரிராரி ராராரோ
சீரான கண்¢ணுக்குட்டி
எங் கண்ணே
சீக்கிரமாய்க் கண்ணுறங்கு”

என்ற தாலாட்டில் ‘ரா’ என்ற எழுத்து பயன்படுத்தப் பட்டுள்ளது. இலக்கண முறைப்படி ‘ரா’ என்ற எழுத்து சொல்லுக்கு முதலில் வராது. ஆனால் தாலாட்டு¢ப் பாடல்களில் அந்த எழுத்தே முன்னிலை படுத்தப்படும். ராராட்டு என்றே தாலாட்டு இன்னமும் வழங்கப்படுகிறது.

ஆண்பண்டிதர்கள் வகுத்த மொழியமைப்பை தமிழ்ப் பெண்கள் மாற்றியிருக்கிற இந்த அமைப்பை பெண்மொழியின் ஆரம்பக் கூறு எனக் கருதலாம். மேலும் ‘என’¢ என்ற தன்மைச் சொல் ‘எங் ‘ என்ற திரிபால் ஆண்பால் சார்பு படாமல் வந்துள்ளது. இவ்வாறே கண்ணுக்குட்டி போன்ற சொற்களில் ஒரு பெண் தன்மை நிலவுவதை உணரமுடிகிறது. இதிலிருந்¢து தொடங்கினால் பெண் மொழி உதயமாகும்.

இவ்வகையில் சிந்தித்தால் பல புதிய முயற்சிகள் பெண்மொழி குறித்துக் கிடைக்கும். தற்போது பெண்மொழியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறையும்.

இக்கட்டுரையின் வழி எதிர்காலப் பெண்ணியத்திற்கான இரு கருத்துக்கள் மட்டும் சுட்டிக்காட்டப் பட்டன. இவை தவிர இன்னமும் வளர வேண்டிய கிளைக்க வேண்டிய துறைகள் கேள்விகள் ஆய்வுகள் பல உள்ளன. அவற்றில் மிகத் தேவையான இந்த இரண்டு மட்டும் இக்கட்டுரையில் விவாதிக்கப் பட்டுள்ளன. மற்றவற்றைச் சிந்திக்கும் காலமும் நேரமும் இடமும் வளர்ந்து கொண்டே உள்ளது என்பது தெளிவு.

முடிவுகள்
எதிர்காலத் தமிழ்ப் பெண்ணியம் பல சவால்களையும், பல கேள்விகளையும் சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான இரண்டு கூறுகள் உள்ளன. அவற்றில் முதலானது தமிழ்ப்¢ பெண்களுக்கான வாழ்க்கைமுறை. தமிழ்ப் பெண்ணியவாதிகள் தமிழகப் பெண்களுக்கு முன்வைக்கும் வாழ்க்¢கை முறை யாது என்பதில் தொடங்¢கும் இச்சிக்கல் தற்போது தீவிரம் அடையாவிட்டாலும் எதிர்காலத்தில் குடும்பக் கட்டமைப்பை உடைத்¢து மகப்பேற்றைத் தவிர்த்து வாழும் இயல்புடையதாக இருக்கும் என்பதாக நிறைவு பெறுகிறது.

அடுத்ததாக பெண்ணுக்கான மொழி என்ன என்பதைப் பற்றிய சிந்தனை எதிர்காலத்தில் நிறைவு பெறவேண்டிய ஒன்றாக உள்ளது. தமிழ்ப் பெண்ணிய மொழி என்பது உள்ளடக்க அளவில் உருவாகத் தொடங்கி விட்டாலும் அது மொழி என்ற அளவில் தமிழ் மொழி தழுவிய தனித்த எழுத்துக் குறியீடாக உருவாகவி¢ல்லை என்பது தெளிவு. ஆண் சொல் பெண்உள்ளம் என்ற நிலை மாறி பெண் சொல் பெண்உள்ளம் என்பதாக எதிர்காலத்தில் அமையவேண்டும். இதற்கு தக்க வழி முறைகளைப் பெண்ணியவாதிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும்.
———————————-
முனைவர் மு. பழனியப்பன்
தமிழ் விரிவுரையாளர், மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை-1.

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்