ஒரு தாய் மக்கள் ?

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

சி. ஜெயபாரதன், கனடா



எந்தையும் தாயும் குலாவிய
தாயகத்தை
உன் தாயகமாக நீ
ஒப்புக் கொள்ள வில்லை !
உன் மூதாதையர்
பிறப்பகம் என்றாலும் !
ஒருதாய் மக்கள் நாமில்லை யென
நிரூபித்துக் காட்டினாய் !
பட்டொளி வீசும்
மூவர்ணக் கொடியை வணங்கி
நாவிலே
“வந்தே மாதரம்” மந்திரச் சொல்
வரவில்லை !
பாரத இனங்களை விடுவித்த
முதல் சுதந்திர முழக்கம் !
விடுதலை பெற்ற மாந்தர் தமது
மதத்துக்கு அடிமைகள் !
அரிவாளும், சுத்தியும்
ஓங்கிடும்
உன் விருப்பக் கொடியில் !

என் தாய் வேறு
உன் தாய் வேறு
ஒரு நாட்டில் பிறந்த நமக்கு !
என் வாய் வேறு
உன் வாய் வேறு
ஒரு மொழி பேசும் நமக்கு !
இரு வாயிலும் ஒலிக்க வில்லை
ஒரு வாய்க் குரல் !
எதிர்த் திசையில் போகும் நாம்
இந்த யுகத்தில்
அன்னிய ராகச் சந்தித்தோம் !
பிணைத்தவை சில !
பிடித்தவை சில ! ஆயினும்
பிரித்தவை பல !
ஒரு தாய் மக்களும்
இரு தாய்ப் பிள்ளையாய்ப்
சண்டை யிட்டார் !
இரு தாய் மக்களை
இணைத்திட
இரும்புப் பாலம் ஒன்றில்லை !
பிரிந்து, பிரிந்து
அந்நியராய்ப் போனோம்
சொந்த நாட்டிலே !

காலங் காலமாய்
ஆலயங்கள் கொள்ளை போயின !
மோனச் சிற்பங்கள்
மூக்கறுபட்டு முலை அறுபட்டு
மானம் இழந்தன !
ஆக்ராவிலே
ஆகாவென்று எழுந்தது
தாஜ்மஹால் !
கஜினிஸ்தான் ஆவதை நிறுத்திடும்
ஆங்கிலக்
காலனி ஆட்சி !
புத்துயிர் பெற்றது பாரதம்
முக்கால் கண்டமாய் !
மொகஞ்ச தாரோ
முகவரி அழிந்தது !
ஹரப்பா
வரலாறு மாறியது !
சிலுவையில் அடிக்கப் பட்டது
சிந்து நதி நாகரீகம் !
திருடு போன
பிரமிட் கோபுரம்
திறந்த வாயில் பாரதம் !
பளிங்குக் கொலு வான
தாஜ்மகால் இல்லை !

*******

S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 18, 2008

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா