ஒரு தமிழனின் பிரார்த்தனை

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

ஒரு தமிழன்


உங்களை இழந்த பின் நாங்கள் வாழ்வதே குற்றமாக தோன்றுகிறது.
உங்களை காப்பாற்ற தவறிய எங்களை மன்னித்துவிடுங்கள்

பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை கட்டிய எங்களை
பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய எங்களை
மன்னித்துவிடுங்கள்

எங்கள் பேராசையால் உங்கள் வாழ்க்கைகளை எரித்த எங்களை
உங்கள் பெற்றோர்களை கதறவைத்து அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கிய எங்களை
அவர்கள் உயிர்களை தீயில் பொசுக்கிய எங்களை
மன்னித்துவிடுங்கள்

அவர்களது வயிற்றெரிச்சல் எங்கள்
தலைமுறைகளை பொசுக்கிவிடாமல்
தயவு செய்து எங்களை
மன்னித்து இரக்கம் காட்டுங்கள்

எங்களைத் திருந்த செய்யுங்கள்
கணநேர கோபங்களுக்கு அப்பால்
பொங்கியெழும் வெறுப்பினை துடைத்து
எங்களை செயல்பட செய்யுங்கள்
இனியென்றும் இத்தகைய சோக விபத்துகள் இல்லாத
சமுதாயத்தை உருவாக்க
எங்களுக்கு உத்வேகத்தை வழங்குங்கள்
எங்கள் கால்கள் நேர்மையின்மையின் பாதையில் செல்கையில்
எங்கள் நினைவில் நின்று எங்களை வழிநடத்துங்கள்
நாங்கள் இலஞ்சம் வாங்க ஆசைகொள்கையில்
சமுதாயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்
ஒரு செயலை சொந்த இலாபத்திற்காக
நாங்கள் செய்ய முற்படுகையில்
எங்களை நினைவுகளையும் உணர்வுகளையும்
முழுமையாக ஆக்ரமித்து
எங்களை மீண்டும் மனிதராக்குங்கள்

எங்களை மன்னியுங்கள்
எங்களுடன் இருங்கள்
எங்களை வழிநடத்துங்கள்
என்றென்றும்
எங்கள் ஒவ்வொருவருடனும்,
தயவு செய்து
—-

Series Navigation

ஒரு தமிழன்

ஒரு தமிழன்