மகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங்
வருடக்கணக்கான வறட்சியால் ராஜஸ்தானின் பிசுனி கிராமத்திலிருந்து விவசாயிகள் பஞ்சம் பிழைக்க வெளி மாநிலங்களுக்கு ஓடினார்கள். மழை நீரைத் தேக்கி வைக்க மூதாதையர்கள் கட்டிய சிறிய குளங்களும், சிறிய அணைகளும் இறக்க விடப்பட்டன. இப்படி முதுகில் துணி கூட இல்லாமல் இருந்த இந்த விவசாயிகள் இன்று பெரும் வளமையான பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
இந்த விவசாயிகளுக்கு இந்த கட்டுமான வேலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அந்த வேலைகளைச் செய்ய ஆர்வமோ அல்லது அதற்குத் தேவையான பணமோ இல்லை.
அப்போது, பக்கத்துக் கிராமங்களில், வறண்ட பிரதேசத்தை உயிர்விக்க முனைந்த ‘தாருன் பாரத் சங்க் ‘ என்ற கல்லூரி மாணவர்கள் அமைப்பின் உதவியோடு, பக்கத்து கிராமங்களில் விவசாயிகள் குளங்கள் வெட்டுவதைப் பார்த்தார்கள்.
‘எங்கள் கிராமத்திலும் மக்கள் சேர்ந்து இது போல நாமும் செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம் ‘ என்று ராமேஷ்வர் தயாள் என்ற விவசாயி கூறினார்.
இந்த வேலைக்கு ஆகும் செலவில் கால்பகுதி கிராம மக்களே கொடுத்தார்கள். அத்தோடு உழைப்பும். இந்த இளம் களப்பணியாளர்கள், எல்லோரையும் இணைத்து தண்ணீர் பற்றியும், காடுகள் பற்றியும் இன்னும் மற்ற இயற்கைச் செல்வங்கள் பற்றியும் மக்களையே முடிவெடுக்க தூண்டினார்கள்.
இவர்களது முயற்சியால், இங்கும் இன்னும் ஆயிரக்கணக்கான ராஜஸ்தான் கிராமங்களிலும், பலன் கிடைத்தது.
அரசாங்கம் இந்த இடங்களை மிகுந்த தண்ணீர் குறைபாட்டினால், ‘கறுப்பு நிலங்கள் ‘ என முத்திரை குத்தி கைகழுவி விட்டுவிட்டது. அந்த இடங்கள் இன்று உயிருடன் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கிராம சமூகங்களும், அந்த சமூகங்களுக்கு உதவிய ‘தாருன் பாரத் சங்கமுமே ‘.
இந்த சங்கத்தின் தலைவர் ராஜேந்திர சிங் அவர்கள், இந்த வருடத்தின் ‘சமூகத்தலைமைக்கான ‘ ராமன் மக்ஸாஸே பரிசை பெற்றிருக்கிறார்.
ராஜேந்திர சிங் இந்த பரிசு கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும், தடங்கல்களுக்கிடையிலும் உழைத்த கிராமத்தவர்களுக்கே சேரும் என்று கூறுகிறார்.
‘முன்பு முதுகில் போடத் துணியில்லாத இவர்கள் இன்று வளமையான பண்ணை நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இவர்கள் ஒரே சமூகமாக நெருங்கி வந்து சேர்ந்து உழைத்ததுதான். அவர்கள் குளங்கள் கட்டியது மட்டுமல்ல, மரங்களை நடவும், இன்னும் கிராமத்து செல்வங்களை சரியாக மேலாண்மையும் செய்தார்கள். இறுதியில் அவர்கள் வளத்தை எய்தினார்கள் ‘
வளமையோடு கூடவே பிரச்னைகளும் வந்திருக்கின்றன. ராஜஸ்தான் அரசாங்கம், இந்த புதிய தண்ணீர் நிலைகளை அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக அடிக்கடி உறுதிப்படுத்தி வந்திருக்கிறது.
இது கிராமத்தவர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. இவர்களது கடின உழைப்பாலேயே தண்ணீர் மீண்டும் அந்த இடத்துக்கு வந்தது.
மகஸாஸே பரிசு காரணமாக நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதனால் அரசாங்க அலுவலர்கள் மீது, இன்னும் கொஞ்சம் கிராம சமூகம் சார்ந்த முயற்சிகளை மதிக்கவும், அதனை ஊக்குவிக்கவும் பலர் தூண்டுவார்கள் என்று நம்புவதாக கூறினார் ராஜேந்திர சிங்.
‘ராஜஸ்தான் முதல்வர் தண்ணீர் நிலைகளை உருவாக்குவதும், காப்பாற்றுவது முக்கியம் என்றும், அதனை சமூகங்களே செய்யவேண்டும் என்றும் பேசியிருக்கிறார். தண்ணீர் மந்திரி என்னிடம் தொலைபேசியில் பேசி, ‘கடந்தகாலத்தை மறந்து விடுவோம். இப்போது நீங்கள் குளம் வெட்ட வேண்டுமென்றாலும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் ‘ என்று கூறினார் ‘ என்று ராஜேந்திர சிங் கூறுகிறார்.
1986இல் ஒரு கிராமத்தில் ஆரம்பித்த ‘தாருன் பாரத் சங்கம் ‘ , இன்று 700 கிராமங்களில் தனது வெற்றியை கொண்டாடி வருகிறது.
‘மக்கள் தண்ணீரைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் தானாகவே சுற்றுச்சூழலைப்பற்றி அக்கறை கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள் ‘ என்றும் கூறுகிறார்.
‘சுற்றுச்சூழலை காப்பாற்ற முயலும் போது, அவர்கள் தங்களது இயற்கைச்செல்வங்களை சரியாக மேலாண்மை செய்யவும் கற்றுக்கொள்கிறார்கள். ‘ பிசுனி கிராமத்தார்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கிறது. அங்கிருக்கும் தரைக்குக் கீழ் இருக்கும் தண்ணீர் படுகை பல அடிகள் உயர்ந்திருக்கிறது இன்று.
விவசாயமும், கால்நடைகளை வளர்ப்பதும் மீண்டும் இங்கு நடக்கக்கூடியதாக ஆகியிருக்கிறது. அங்கங்கு கரும்பும் பயிரிடப்பட்டிருக்கிறது. கரும்பு அதிகம் தண்ணீர் குடிக்கும் தாவரமாக இருந்தாலும், முந்தைய வறண்ட பிரதேசத்தில் இன்று செழிக்கும் தண்ணீரில் வளர்கிறது.
‘முன்பு எங்களுக்கு சரியாகச் சாப்பிடவே உணவு கிடையாது. இப்போது நாங்கள் சாப்பிட்ட மீதத்தை விற்கவும் முடிகிறது. முன்பு நிறைய மக்கள் நகரங்களுக்கு வேலைதேடி சென்றார்கள். இப்போது இங்கே கிராமத்திலேயே நிறைய வேலை இருக்கிறது ‘ என்றும் கூறுகிறார்.
- புரியவில்லை
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- குறள்- கவிதையும் நீதியும்
- உசிலி உப்புமா.
- ரவா பொங்கல்
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- வேகவேகமாக வாழ்வு
- ஆறு சேவியர் கவிதைகள்
- விசாரணை
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- அன்புத்தங்கைக்கு………
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- ஒரு பேறு
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…