ராவ்
தேவையான பொருட்கள்
ஒரு கோப்பை காய்கறித்துண்டுகள் (சிறிதாக நறுக்கப்பட்ட கேரட், பட்டாணி போன்றவை. உறைந்ததையும் வாங்கிக்கொள்ளலாம்)
அரைக் கோப்பை வெங்காயம் நறுக்கியது
இரண்டு பச்சை மிளகாய் (காரத்துக்கு ஏற்ப)
அரை மேஜைக்கரண்டி சோய் ஸாஸ்
அரை மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
ஒரு மேஜைக்கரண்டி ஷெர்ரி ஒயின் (குக்கிங் ஒயின்)
உப்பு தேவையான அளவு
வேகவைத்த சாதம் 2 கோப்பை
***
செய்யும் முறை
ஒரு பெரிய வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதிக தீயில் பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கவும்.
பின்னர் அதில் காய்கறிகள், சோய் சாஸ் ஊற்றி அதிகத் தீயில் வேகவைக்கவும்.
சற்று வெந்ததும், குக்கிங் ஒயினை கலவையில் ஊற்றி ருசி பார்க்கவும். (பல நேரங்களில் குக்கிங் ஒயினில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் அதற்காகவே இப்போது ருசி பார்க்க வேண்டும்) தேவையான அளவு உப்பும் மிளகும் போடலாம் இப்போது.
வேகவைத்த சாதத்தை உதிரியாக இந்த கலவையில் கொட்டி பிரட்டவும். தீயைக் குறைத்துவிட்டு இப்போது நன்றாகப் பிரட்டி, அதன் மேல், கொத்துமல்லித் தழைகளைப் போட்டு அழகு படுத்தலாம்.
**
இதனோடு சாப்பிட கோழி வறுவல், அல்லது தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
**
பயப்பட வேண்டாம். ஒயினை வேகவைக்கும்போது பெரும்பாலான ஆல்கஹால் ஆவியாவி விடும்.
***
- வசந்தத்தின் வாசல்இதுவல்ல
- என் கணக்கு வாத்தியார்
- ம்…
- திண்ணை அட்டவணை – சூன் 2001
- சுந்தர ராமசாமிக்கு இயல் விருது – 1
- அவல் புலாவ்
- ஒயின் வறுத்த சாதம் (ஒயின் ஃப்ரைட் ரைஸ்)
- நொறுங்கிய பழமை
- மூன்று கவிதைகள்
- கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)
- சிறியன செய்கிலாதார்…
- முத்தமிடு!
- நல்ல நாள்
- இருமை.
- மரணம்
- அரசாண்ட கூடு.
- காதலுக்கு மரியாதை ?
- இந்த வாரம் இப்படி — சூன் 17
- கடன்