எல்லாம் உன் பார்வை

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

அபி சுப்பிரமணியன்


பச்சிளம் பாலகனாய்
சின்னச்சிறு நடயிட்டு
அன்னையின் விரல் பிடித்து
உலகத்தை னோக்கினபோது
அகிலமெல்லாம் நல்லவரே

பல வசந்தம் பின் ஓட
உடல் வளர்ந்து இளைகனாக
அன்னையின் விரல் நழுவிப்போக
உலகத்தை நோக்கினபோது
ஐயகோ இது என்ன கொடுமை
நல்லவரை னான்முகன் படைக்கவில்லையா
கபடமுகம் தான் காட்சியிலே
இடிபட்ட இதயம் இறைவனைஇறைஜ்ஜியது

இதமாக சிரித்து இறைவன் சொன்னான்
பச்சிளம் பாலகனாய் நீ சிரித்தபோது
நீ சொன்ன வார்த்தையில் விஷமில்லை
நீ பார்த்த பார்வையில் நெருப்பில்லை
கபட முகம் நீ கானும் உலகிலில்லை
களைந்து விலக்கு உன் அழுக்கை
காண்பாய் உலகெல்லாம் நல்லவரே.

***
abisubra@hotmail.com

Series Navigation

அபி சுப்பிரமணியன்

அபி சுப்பிரமணியன்