எலுமிச்சை மகிமை

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

கருத்தடை சாதனம், எய்ட்ஸ் கிருமி ஒழிப்பு


ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் எலுமிச்சை சாறுக்கு நல்ல உபயோகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமிக் கொல்லியாகவும்.

மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்று கூறுகிறார்.

பாலுறவுக்கு முன்பு, சில சொட்டு எலுமிச்சை சாற்றை உறுப்புக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்று கண்டறிந்துள்ளோம் என்று அவர் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த அறிவியல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

லைம் சாற்றையும் உபயோகப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்

எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

***

Series Navigation

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர