எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue


எபோலா காய்ச்சல் என்ற தொத்து நோய் காபோன் நாட்டிலிருந்து ‘வேகமாகவும், நிர்ணயிக்க முடியாத அளவிலும் ‘ பரவி வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது. ஒரு பெண் காபோன் நாட்டிலிருந்து காங்கோ நாட்டிற்கு தன்னுடைய எபோலா காய்ச்சலையும் எடுத்துக்கொண்டு சென்றதால், இந்த பெண்ணை கண்டுபிடிக்கவும் தீவிர வலைவீசி வருகிறது.

மனித குலத்திலேயே மிகவும் தீவிரமான தொத்து நோயாக அறியப்படும் இந்த நோய் இதுவரை சுமார் 11 பேர்களை காபோன் நாட்டில் பழி வாங்கி இருக்கிறது.

சுமார் 95 பேர்கள் எபோலா நோயால் 1994இலும் 1997இலும் இறந்தார்கள்.

காபோன் நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் எபோலா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியுமென்ற நம்பிக்கை தெரிவித்தார்.

எகாடா கிராமத்தில் முதலில் தோன்றிய இந்த ரத்தம் கக்கும் வைரஸ் காய்ச்சல், அருகே 8 கிலோமீட்டருக்குள் இருக்கும் காங்கோ தேசத்துக்குள்ளும் பரவி விடும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

இந்த கிராமத்துக்கு அருகிலேயே மெடாம்பா, நெடொலோ, எலனோனெ என்ற கிராமங்களுக்கும் பரவி இருக்கிறது. இந்த கிராமங்கள் பல முக்கிய நகரங்களுக்கு சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதால் அந்த நகரங்களுக்கும் பரவலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த செஞ்சிலுவைச்சங்கமும், இன்னும் பல உலக சுகாதார நிபுணர்களும் இந்த இடத்தில் குழுமி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் காங்கோ நாட்டுக்கு போன ஒரு பெண் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைக்கண்டுபிடிக்கவும் இந்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் இந்த இடத்தில் ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தி இந்த நோயால் இறந்தவர்களைத் தொட்டவர்களை கண்டறியவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது.

எபோலா நோய்க்கு மருந்து கிடையாது. இந்த தொத்து நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டால் மற்றவர்களுக்கு ஒட்டிக்கொள்ளும். இந்த நோய் கண்ட ஆட்களில் சுமார் 90 சதவீத ஆட்கள் ரத்தம் எல்லாத் துவாரங்களிலிருந்தும் கொட்ட இறந்து போவார்கள்.

Series Navigation

செய்தி

செய்தி