மதுபாலிகா
ஹொளரா மதராசி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது (1956) சக மாணவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். சிறுகதையல்ல, தொடர்கதை. இன்றைய சீரியல்கள் போல முடியாத கதை. ஆனால் கேட்போருக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும். என்வே நான் நான்காவது, அய்ந்தாவது வகுப்புக்கு வந்தபிறகும், இது தொடர்ந்த்து. ஒருநாள் எனது வகுப்பாசிரியரும் அமர்ந்து கதை கேட்டு என்னை தட்டிக் கொடுத்த் பாராட்டியது எனக்குள் விதையாய் இருந்த கற்பனை விருட்சத்தினை தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பின்னர் நெல்லை ( மதுரை திரவியம் தயுமானவர்) இந்து கலா சாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ( 1962 ) பள்ளி ஆண்டு மலருக்காக என் முதல் கவிதையை எழுதினேன். ” உலகமே ஒரு நாடக மேடை ” என்பது அதன் தலைப்பு. பள்ளி ஆசிரியர் குழாம் அக்கவிதை என்னால் எழுதப்பட்டது என்பதை நம்பவில்லை. எந்து தமிழாசான் மட்டும் என்மீது நம்பிக்கை வைத்து கவிதையிலிருந்த இலக்கணதவறுகளை திருத்தி அதை வெளியிட்டார்.
என் தய்மாமன் தமிழ் வித்துவானாக இருந்த காரணத்தால் எந்து இலக்கிய ஆர்வத்தினை வளர்த்து கட்டுரை, கவிதை, நாடகப்போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்தார். சைவ சமய் கட்டுரைப் போட்டி, சங்க கவிதை வாசிப்புகள், கூட்டுக் கலைப்போட்டி என்று நெல்லை மாவட்ட்டத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் கலந்து பல முறை முதல் பரிசைத் தட்டிச் சென்றதுடன் பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணக்கனகவும் தேர்ச்சி பெற்றேன். மகாகவி பாரதி பயின்ற பள்ளியில், அவர் அமர்ந்து படித்த வகுப்பறையில் பயிலக் கிடைத்த வாய்ப்பு நான் பெற்றதைமகத்தான பேறு. அந்த உற்சாகமும் தாக்கமும் இன்றும் தொடர்கிறது. எனது கவிதை வரிகளின் ஊடும் பாவுமாக பாரதியின் சிந்தனை பாவிக் கிடப்பதற்கும் , அதுதான் காரணம் என நினைக்கிறேன்.
அரசு வேலை கிடைத்த காரணத்தால் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருச்சி தொலைபேசி இலக்காவில் பணியில் சேர்ந்தேன். 1968) அங்கே பணிபுரிந்த தோழர்கள் என் எழுத்துப் பணிக்கு உற்சாகமும் ஆதரவும் தந்தனர். திருச்சியில் பணியாற்றிய 18 ஆண்டு காலம் என் இலக்கிய வாழ்வின் முக்கியமான கால கட்டமாகும். திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம், கம்பன் விழா போன்றவை எனக்கு எனது நண்பர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்தன. பேராசிரியர்கள் சத்திய சீலன் , அ.வ. ராசகோபாலன், ராதாகிருஸ்ணன், டாக்டர் கலைக்கோவன், இலக்கிய விமர்சகர் சேவற்கொடியோன் ஆகியோர்களின் பரிச்சியமும் கிடைத்தது. முத்தமிழ் அறிஞர் கி ஆ பெ விஸ்வநாதம் அவர்கள் தலைமையில் கவியரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் ஆதி சங்கரரின் சொளந்தர்ய லஹரியை தமிழ்கஆக்கம் செய்து ( வாழ்த்துப்பா கண்ணதாசன்) அதை இராதாகிருஸ்ணன் மூலமாக திருவாணைக்காவில் வெளியிட்டது மறக்க முடியாத நிகழ்வுகள். எனது முதல் பக்திப் பாசுரமான ” அகிலாண்டேசுவரி பாமாலை” நண்பர்களால் பலமுறை அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பில் உள்ள,
“வானுக்கும் மண்ணுக்கும் வள்ர்கினர சொந்தமாய்
மழயொன்று இருப்பதைப் போல
தேனுக்கும் நாவுக்கும் அறிமுகச் சுவையொன்று
சிந்தையில் இனிப்பதைப்போல
ஊனுக்கும் உயிருக்கும் தொடர்பான உணர்வுகள்
உள்ளத்தில் சிலிர்ப்பதைப் போல்
தானுக்குத்தானேதான் அந்நியமாய் நிற்கின்ற
தாசனுக்குறவாகு நீ ”
என்ற பாடலைத்தான் இன்றும் நான் எனது Master Piece ஆகக் கருதுகிறேன்.
தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன், புதுகை புவனேஸ்வரி வயலூர் முருகன், மதுரை மீனாட்சி ஆகிய தெய்வங்கள் மீதும் பாசுரங்கள் இயற்றினேன். ஆதிசங்கரரின் சொளந்தர்ய லஹரியைத் தொடர்ந்து கனகதாரா, கீதையின் ஞானயோகம் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை சுவாமி சின்மயானந்தா அவர்கள் வெளியிட்டு என்னை ஆசீர்வதித்தார்.
அலுவலக சகாகக்களுடன் இணைந்து Carrier In digest. தொழிற்சங்க நண்பர்களுடன் இணைந்து ” குமுறல் ” போன்ற கையெழுத்துப்பிரதிகளையும் வெளியிட்டோம். காதல் கவிதைதொகுதியான அரங்கேற்றமாகாத கவிதைகள், உனக்காக நாலுவரி, Keep Me Engrossed ( ஆங்கிலக் குறுங்கவிதை) ஆகியவை முதலில் கையெழுத்துப்பிரதிகளாகவும், பின்னர் ” மதுபாலிகா கவிதைகள் ” என்ற தலைப்பில் தொகுப்பாகவும் வெளிவந்தன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே எனது முதல் சமூக விமர்சன் கவிதைத்தொகுதியான் ” புதிய கீதை ” 1982 ல் பாரதி
நூற்றாண்டுப் பதிப்பாக வெளிவந்து கல்கி, குங்குமம், தினமணிக்கதிர், தாய் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டு பெற்றது ( கல்கி இதழ் பரிசும் தந்தது )
” அர்ச்சுனா கண்ணனை
இன்னும் காணோம்
நீயே சங்கைப் பிடி
சாரதியாகு
மங்கல சங்கு முழங்கி விட்டது” என்ற தலைப்புக் கவிதையும்
“இந்த ஊமைப்படத்தின்
ஒவ்வொரு காட்சியும்
ப்ளாஸ்பேக் தானா” என்ற விதவி பற்றிய சித்திரமும்
தண்ணீர் என்ற தலைப்பில்
” தண்ணிதான்
தாராளாமக கிடைகுதே,
ஏலே, காந்தி
சாருக்கு நூறு ஊத்து”
என்ற கவிதையும் வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்த முதல் தொகுப்பை பாதி விலையில் அச்சிட்டுத் தந்த லோட்டஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் வரகனேரி செட்டியார் அவர்கள் என வாழ்க்கையில் மறக்க முடியாத அன்பர். ,
மற்ற தொகுதிகளை தேவி பிரஸ் நண்பர் ரங்கராஜன் அவர்களும் ஜெயராம் பிரஸ் நண்பர் வெங்கட்ரமணி அவர்களும் சலுகை விலையில் அச்சிட்டுத் தந்தனர்.
என் ஆதர்ச எழுத்தாளர் நா.பா. அவர்களுடன் தீபத்தில் பணிபுரிந்த திருமலை அவர்கள் அச்சிட்டு கொடுக்க சேவற்கொடியோனின் காரசாரமான முன்னுரையுடன் இரண்டாவது புதுக்கவிதை தொகுப்பு ” அஸ்வமேத யாகம் ” வெளியானது.
திருச்சி ரசிக ரஞ்சனா சபா நாடகப் போட்டியில் நான எழுதி இயக்கிய ” சரித்திரத்தை மாற்றுவோம் ” நாடக்த்திற்கு விசேச பரிசும், Trend Setter என்ற பாராட்டும் கிடைத்தது இதில் நடித்த அனைவரும் எனது தொழிற்சங்க நண்பர்களே.பின்னர் நான் அரங்கேற்றம் செய்த ” உணர்ச்சிக்குமிழிகள் ” நாடகம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அக்கருத்தை மையமாகக் கொண்டு நான் எழுதிய நெடுங்கவிதை வாசக்ர்களின் வரவேற்பைப்பெற்றது. திருச்சி தில்லை நகர் குறிஞ்சி திருமணமண்டபத்தில் டாக்டர் கலைக்கோவன், சாமிக்கண்ணு ஆகியோரின் உஅதவியுடன் அப்போது பிரபலமாகிவந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் அவரது முதல் நாவல் ” மெர்க்குரிப்பூக்களுக்கு”விமர்சன் விழாவும் கண்டோம்.
1986ல் தொழிற்சங்க காரணங்களுக்காக சென்னை வந்த பிறகு 10 ஆண்டுகள் இலக்கியப் பணியில் சுணக்கம். பின்னர் 1996=2008 கால கட்டத்தில் எனது அடுத்த கவிதைதத் தொகுதி ” குங்குமப்பூக்களை” வார்த்தச்சித்தர் வலம்புரிஜான் அவர்களும் ” “பூச்சொரியும் வானம் ” என்ற பக்திக் கவிதைகளின் தொகுப்பை இயக்குனர் முத்துராமர் அவர்களும் வெளியிட்டனர், ” வாழ்க்கையின் கவிதைகள் ” என்ற என் சமீபத்திய கவிதைத் தொகுப்பை பேராசிரியர் சோ.சத்திய சீலன் அவர்கள் வெளியிட்டார்கள். வாழ்க்கையின் அநித்தியம்தான் வாழ்வின் பெருமை என்ற வள்ளுவரின் வாக்கைக் கடன் வாங்கிய தலைப்புக்கவிதையும் சிலாகிப்புப் பெற்றது.
ஜக்கிவாசுதேவ் அவர்களின் யோகா இயக்கத்தில் சேர்ந்து பெற்ற அனுபவங்களின் பயனாக ” வெள்ளியங்கிரி ” என்ற கட்டுரைத்தொகுப்பும் , ” சிந்து பூந்துறை” என்ற சிறிய கவிதைக் கையேடும் வெளியானது.” வெள்ளியங்கிரியை ” சத்குரு அவர்களே சென்னையில் வெளியிட்டார்.
தொழிற்சங்கவாதிகள் படித்துப் பயன் பெறுவதற்காக வெளியிடப்பட்ட ” காது கொடுத்துக் கேளுங்கள்” என்ற பயிற்சிக்கட்டுரைகளின் தொகுப்பு , ஊழியர்களின் குறைகள், பிரச்சினைகளை எப்படி கவனத்துடன் கேட்டுத் தீர்க்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இன்றும் விளங்குகிறது. இடைவிடாதா தொழிற்சஙக் பணிகளிடையே எழுத்துப்பணியும் இறையருளால் தொடர்ந்து வருகிறது.
( புதுதில்லியில் வசிக்கும் மதுபாலிகா=வள்ளிநாயகம் தொலைலித்தொடர்புத்துறையின் தொழிற்சங்கமொன்றின் அகில இந்திய செயலாளர்)
issundarakkannan7@gmail.com
- நான் மட்டும் இல்லையென்றால்
- கோரமுகம்
- திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
- மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா
- கடிதம்
- குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
- நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை
- என் எழுத்து அனுபவங்கள்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
- இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.
- சந்தர்ப்பவாதிகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4
- வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை
- இயல்பாய் இருப்பதில்..
- பயணம் சொல்லிப் போனவள்…
- நகரத்துப் புறாவும், நானும்!
- மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..
- எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- முள்பாதை 5
- வேத வனம் -விருட்சம் 59
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7
- மீண்டும் துளிர்த்தது
- அம்ரிதா
- நுவல்