கே ஆர் மணி
வாழ்க்கைக்கும்
இருத்தலுக்கும்
கவிதைக்குமான –
போரட்டத்தில்
கவிதை தோற்கும்
என் குற்ற உணர்வு
மேலொழும்போதெல்லாம்
நான் அந்தக் கவிதையை
படிப்பதுண்டு.
கடந்த முப்பது வருடமாய்
அதனுடன் என் பழக்கம்.
அதன் வரிகள்
மாறிக்கொண்டேயிருக்கிறது.
பொருட்பற்றி சொல்லவே
வேண்டியதில்லை.
அந்தக்கவிதை
ஒடிக்கொண்டேயிருக்கிறது
என்று சொன்னாலும்
தப்பில்லை.
அந்தக் கவிதையை நான்
அடிக்கடி படிக்கிறேன்.
உங்களில் சிலர்
பார்த்திருக்கலாம்.
வெகுசிலர்
படித்திருக்கலாம்..
யாருக்கும் புரிந்திருக்க
வாய்ப்பேயில்லை..
எனக்கு சிலசமயம்
அதுபுரிகிறது.
பல சமயம் அழுத்தி பிடித்த
மணல் போல்
கை நழுவி விழுகிறது..
அது
மாறிக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு முறை
படிக்கும்போது
கலைடாஷ்கோப்பின்
கலைக்கப்பட்ட கலர் போல..
அதை புரிவதற்கான
போரட்டங்களில்
நான் தோற்த்துபின்,
ஜெயிப்பதாய் கற்பிதம்
கொள்கிறேன்..
அது எளிமையானது..
பின் கடினமானது.. அதனுள்
ரொம்பவும் எளிமையானது..
நிறைய வியாஞ்னங்கள்..
விளக்கங்கள்..
குழப்பங்கள்..
சில சமயம்
பயமாயிருக்கிறது..
மறுசமயம்.. நெகிழ்வாய்..
எரிவாய்…
அடிக்கடி
அதைப்படித்துக்கொண்டேயிருப்பேன்..
புரிதலை
எழுதிக்கொண்டேயிருப்பேன்..
அதுதான் என் வளர்தலை
மெய்ப்படுத்தும்போலும்..
mani@techopt.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)
- டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு
- முதுமை வயது எல்லோருக்கும் வரும்
- மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்
- அலன்டே & பினொச்சே – சிலி
- கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!
- தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்
- சாம வேதமும் திராவிட வேதமும்
- ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்
- கடித இலக்கியம் – 22
- தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து
- கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து
- பட்டறை தயாரித்த பரமார்த்த குரு
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- ஆணிவேர் திரைப்படம் வெளியீடு
- கடிதம்
- சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]
- வஞ்சித்த செர்னோபில்
- என் கவிதை
- பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)
- தன் விரல்களை துண்டித்த சூபி
- எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா
- தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்
- ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்
- கையறு காலம்
- மடியில் நெருப்பு – 3
- இரவில் கனவில் வானவில் – 1