ஊரெல்லாம் ஒரு கதை தேடி…

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


எதிர்ப்பட்ட மாந்தாிடமெல்லாம்
ஒரு கதை சொல்லக் கேட்டு,
அவர்தம் இதழ் திறக்க
ஆவலாய் நின்றேன்!
‘கட கட ‘ சிாிப்புகளையும்
கடும் வசவுகளையுமே
நான் பெற்றேன்!

பயமின்றி
விலங்கினம் முன் நின்று கேட்டேன்!
அவை சொல்லின –
‘ஆயிரம் கதைகள்
நீவிர் அறிவீர்,
அவற்றில் பலவும்
எம்மைப் பற்றியாம்!
உம்மைப் ப்ற்றிய கதைகள் மட்டுமே
எம்மிடமுண்டு!
அவற்றைத் தர
ஆர்வமில்லை எங்களுக்கு! ‘

வருடம் முழுதும்
பருவத்திற்கேற்ப
உருவம் மாறியும்
காற்றின் துணை கொண்டு
தலையாட்டியும்
தாவரங்கள்
சொல்கிற கதையின்
மொழி புாியவில்லை எனக்கு!

நேற்று
தூக்கத்தில்
நான் ஒரு கதை –
புதியதாய் ஒன்று –
சொன்னதாக(உளறியதாக)
அம்மா சொல்கிறாள்!

Series Navigation

இரா. சுந்தரேஸ்வரன்.

இரா. சுந்தரேஸ்வரன்.