ஜெயக்குமார்
‘ஒரு எழுத்தாணி குனிந்து நிமிர்ந்தால் ஒரு குனிந்து கிடக்கும் சமுதாயம் நிமிரவேண்டும் ‘ என்பது சான்றோர்களின் கருத்து. ஒரு எழுத்தாளனும் அவனுடைய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தத்தான் அவர்கள் அப்படி கூறி இருக்கிறார்கள். அப்படியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரப்போராட்டகாலத்தில் இத்தகைய ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வையும்இ தேசிய ஒருமைப்பாட்டையும், எதையும் தாங்கும் வலிமையையும் நம்மிடையே வளர்த்தன. வெறும் எழுத்து மட்டுமே ஊடகமாக இருந்த காலத்திலேயே அவர்கள் செயற்கறிய பல சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் ஊடகங்கள் பல வடிவில் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் அதில் சில நம் மக்களிடையே இதுதான் உலகம்இ இதுதான் நல்ல செய்திஇ இதுதான் நல்ல கருத்து, இதுதான் நல்ல பழக்கம், இதுதான் ஒழுக்கம் என்ற சில சமூகக்கேடு விளைவிக்கிற
விசயங்களை நம்மிடையே பரப்பி வருகின்றன.
ஹிட்லரின் ஆட்சியில் அந்நாட்டில் மக்களுக்கு சிந்திக்க உரிமையில்லாமல் இருந்தது. ஆனாலும் அம்மக்களுக்கு அந்த ஆட்சியின் மேலும் அந்த ஆட்சியாளர் மீதும் ஒரு வெறுப்பும் இருந்தது. அதற்கு காரணம் அவர்களின்
சிந்தித்துப்பார்க்கும் திறனே. ஆனால் நம் மக்களை சிந்திக்கவே விடாமல் ஆதிக்க சக்திகளும், அந்நிிய சக்திகளும் நிறைந்த இந்த திரையுலகமும் அது சார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் நம் மூளைகளை மலுங்கடிக்கச் செய்துகொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் சினிமா கதாநாயகனாக இருந்து அதன் கவர்ச்சியில் நிஜக்கதாநாயகனாக மாறி நம் நாட்டை ஆண்ட ராமசந்திரன் வெறும் இலவச திட்டங்களாய் போட்டு நம் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் ஆக்கி நம் இனத்தின் அழிவு பாதைக்கு அடிக்கல் நாட்டினார். அவர் ஆட்சிகாலத்தில் தான் இலவசத்திட்டங்கள் அதிகரித்தன. தொலைநோக்குத்திட்டங்கள் வேரறுக்கப்பட்டன. நம் இனம் போலியான கவர்ச்சிக்கு அடிமையாக ஆரம்பித்தது.
காகிதப்பூக்களுக்கும் மகரந்தச்சேர்க்கை உண்டு என்று ஒத்துகொண்டது. நம் சிந்தனா மண்டலத்தில் சிலந்தி வலைகள் பின்ன ஆரம்பித்தது. அன்று ராமசந்திரன் நட்ட விசச் செடி, ரஜினியால் நீரூற்றி வளர்க்கப்பட்டு இன்று விஜய்இ அஜித்இ சிம்பு போன்றவர்களால் வேலிகட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இன்று நம் தமிழ் தொலைக்காட்சிகளில் என்ன நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன ?. சினிமா, சினிமா விட்டால் அழுது வடியும் பிற்போக்கு தொலைக்காட்சித்தொடர்கள். என்ன செய்தி சொல்கிறார்கள் ?. ‘செய்திகளில் அடுத்து வருவது ஜெயேந்திரர். சிவகாசி ஜெயலட்சுமி, ஜ்டியல் சுப்பரமணியம், செக்ஸ் சாமியார் சதுர்வேதி, கஞ்சா செரினா மற்றும் கருத்து கருணாநிதி ‘ என்ற அளவில்தான் நமக்கு செய்திகள் சொல்லப்படுகின்றன. உலக செய்திகள் என்று இவர்கள் கூறுவது ஆப்பிரிக்காவில் சிங்கம் இரண்டு குட்டி போட்டதுஇ இங்கிலாந்தில் ஒரு ஜோடி 24 மணி நேரம் முத்தம் கொடுத்ததுஇ அமெரிக்காவில் நிர்வாணப்போரட்டம் என்கிற அளவில்தான் உள்ளது. நாட்டில் வேறு நல்ல விசயங்களே நடக்கவில்லையா. மக்களுக்கு தேவையானஇ பயனுள்ளஇ சிந்திக்க தூண்டுகிற நல்ல விசயங்கள் தினம்இ தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் நடந்த சில அசம்பாவிதங்களைப்பற்றி சொல்லும் போது உண்மை நிலை என்ன என்பதை அந்த நாடுகளின் தொலைக்காட்சி செய்திகளைப்பார்த்தாவது சொல்லலாம்இ அப்படி இல்லாமல் ஒரு குண்டு வெடிப்பில் 10 பேர் இறந்தால் 100 பேர் இறந்ததாக கூறுவதுஇ ஒரு ரயில்வே ஸ்டேசன் மூடினால் லண்டனில் அனைத்து ரயில்வே ஸ்டேசன்களும் மூடப்ப்ட்டன என்று கூறி தாயகத்தில் உள்ள உறவினர்களின் மனநிலை எப்படி பாதிப்பு அடையும் என்று கூட கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுவது போன்ற முட்டாள் தனமான காரியங்களையும் செய்கின்றனர். நல்ல செய்திகள், கருத்துக்கள் சொன்னால் மக்கள் சிந்திக்க ஆரம்ப்பித்துவிடுவார்கள்! இவர்களின் போலியான கவர்ச்சி எடுபடாமல் போய்விடுமே என்ற எண்ணம் தான் இன்று இவர்களிடம் மேலோங்கி உள்ளது. கெட்டவிசயங்கள் மிக எளிதாக மக்களை சென்றடையும். ஆனால் நல்ல விசயங்கள் மருந்து போன்று கசப்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு எளிய முறையில் சொல்லப்படுமானால், அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க உதவும்.
இன்று சுதந்திர தின மற்றும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தால் அதில் சில நடிகர், நடிகைகளின்
நேர்காணல், குத்து நடனங்கள் மற்றும் இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக என்று மூளையை
மழுங்கடிக்கச்செய்யும் ஒரு படம். இதுதான் இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் சுதந்திர போராட்ட
வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சிகளா ?. கொஞ்சம் ஏமாந்தால் விக்ரமும், விஜய்யும் தான் காந்தியோடு உப்பு சத்யாக்கிரகத்துக்கு போனார்கள் என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். இதேபோல் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தால், நாளைய சமுதாயம் சுதந்திர தினத்திற்கு விடுமுறை விடுவதே இவர்களின் நிகழ்ச்சியை பார்க்கத்தான் என்று புரிந்துகொள்ளும் நிலை
ஏற்படலாம். இப்படி சமூகப்பொறுப்பற்ற ஊடகங்களால் நாளைய தலைமுறைக்கு சத்யாக்கிரகம் என்றால் அந்த கிரகம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. நம் தாய் தந்தையரின் அன்பையும்இ தியாகங்களையும் நேரில் பார்த்து உணர்கிறோம். ஆனால் தேசத்திற்காக பாடுபட்டு நம் முன்னோர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக சொல்லுவதன் மூலம்தான் நம்முடைய சுதந்திரத்தின் அருமையை நம் இளைய தலைமுறைக்கு உனர்த்தமுடியும். நாம் ரத்தம் சிந்தி பாடுபட்டு வாங்கிய இந்த சுதந்திரத்தை பாதுகாக்க முடியும். ஏன் நம் நாட்டில் ஒரு தியாகி கூட இல்லையா ? அவர்களிடம் நேர்காணல் கண்டால் இவர்களின் வியாபாரம் போகிவிடுமா ?. மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன! என்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி உள்ளது. இதே போல்தான் அனைத்து தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளன. நம் மண்ணைப்பற்றிய, நம் மக்களைப்பற்றிய, உலகில் சிறந்த நம் கலாச்சாரத்தைப்பற்றிய எந்த நிகழ்ச்சிகளும் இவர்களின் தொலைக்காட்சிகளில் இடம்பெறாது. மாறாக போலியான கவர்ச்சிகளே மக்கள்முன் நிறுத்தப்படுகின்றன.
இப்போது சும்மா ‘நச் ‘-னு ஒரு ஆபாச ‘விஷம் ‘ சில இலவசங்களுடன் நம் தமிழகத்தை தினம், தினம் தாக்கி நமது தேசத்தை அதன் இயல்பிலிருந்து பிரிக்க முயன்று கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் செய்திகள் என்னவென்றால் ஆண் விபச்சாரம், பெண்களுக்கு காபி குடித்தால் ‘மூட் ‘ வருமா ? ஆதிவாசிகளின் நிர்வாண பூஜை, ஆதிவாசிகளின் ஆபாச
குருந்தகடு பரபரப்பு விற்பனை, குஷ்பு ஆபாச பட வெளியீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், 5 நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனம், செக்ஸ் சாமியார்கள் பற்றிய செய்திகள் மற்றும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் பற்றிய தவறான கருத்துகள் போன்ற அருவெறுக்கத்தக்க ஆபாச செய்திகள் தான். இதில் அசிங்கம் என்னவென்றால் இவற்றையெல்லாம் படங்களுடன் தலைப்புச் செய்திகளாக முதல் பக்கதிலேயே வெளியிடுவதுதான். இவைகளை வெளியிடுவதால் நம் தமிழகத்திற்கு என்ன பயன் ?. செய்தித்தாள்களின் தரம் என்பது அன்றாட நாட்டு நடப்புக்களை உலகுக்கு சொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல பயனுள்ள, சிந்திக்கவைக்கக்கூடிய கட்டுரைகளையும், கருத்தாய்வு களையும் வெளியுட்டு மக்களிடம் உலகளாவிய சிந்தனைகளை வளர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே பத்திரிக்கை தர்மமும் நீதியும் ஆகும். சமூகப்பொறுப்புள்ள எந்த செய்தித்தாளும் இதைதான் செய்யும். ஆனால் நான் மேற்கூறிய ‘விஷம் ‘ இலவசங்களுடன் பரவி மக்களின் செய்தித்தாள் அறிவை மட்டமாக்கி அவர்களிடம் எந்த உலகளாவிய சிந்தனைகளும் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் அச்செய்திதாளுக்கும் அது சார்ந்த கட்சிக்கும் தான் லாபமே தவிர நம் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லைஇ மாறாக நம் மக்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாகஇ சுயநலவாதிகளாக மட்டுமே இருப்பார்களே தவிர சிந்திக்கின்ற உண்ர்ச்சியுள்ள, போராடும் குணமுள்ள,பொதுநலனில் அக்கரை உள்ள, மனித நேயமிக்க,சமூகப்பொறுப்புள்ள மற்றும் உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தில் இருந்து வந்த நல்ல குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.உதாரணமாக இன்று குடியரசுதினம். இன்றைக்கு வெளிவந்த செய்தித்தாள்கள் அணைத்தும் குடியரசுதின நிகழ்ச்சிகளையும் நம் ஜனாதிபதி மற்றும் ஆளுனர் அவர்கள் நாட்டுமக்களுக்கு சொன்ன செய்தியையும் தான் தலைப்பு செய்திகளாக வெளியிடுவாரகள். ஆனால் ‘தமிழ் முரசு ‘ என்ற தரமற்ற முரசில் ‘பள்ளி மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச வீடியோஇ பிடிபட்டது ஆபாசக்கும்பல் ‘ என்ற செய்திதான் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இவர்களுக்கு இதற்கு முன்னர் இத்துறையில் அணுபவம் உள்ளதா ? அல்லது ‘நீலப்படம் ‘ எடுக்கும் கும்பலில் இருந்து பிரிந்து வந்து இந்த பத்திரிக்கையை ஆரம்பித்தார்களா ? என்றே புரியவில்லை.
நாளைய சமுதாயம் எல்லா நல்ல வளங்களும் பெற்று சிறப்பாக வாழ வேண்டுமெனில் வெறும் வியாபார நோக்கோடு செயல்படும் மேற்கூறிய நச்சு விதைகள் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் பாதுகாப்பது சுரணையுள்ள ஓவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இவர்களை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஊடகங்களை, நல்ல படைப்புகளை, நல்ல கலைஞர்களை ஊக்குவிப்பதுமே நம் தமிழகத்தை செழிக்க உதவும்.
—-
mjai_kumar@hotmail.com
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- இன்று சொல்லிச் சென்றது
- அணுவும் ஆன்மீகமும்
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- கற்பு என்றால் என்ன ?
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- சிவா ! ராமா ! – 2060
- சிரிப்பு
- கடிதம்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- மலர்களும் முட்களும்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- எடின்பரோ குறிப்புகள்-8
- மீள் வாசிப்பில் சூபிசம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இளமையா முதுமையா
- எதுவுமில்லாத போது
- மீண்டும் மரணம் மீதான பயம்
- கவிதைகள்
- சிரிப்பு
- புனித உறவுகள்