அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை – ஜே. எஸ். ஹக்ஸ்லி
முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது – ஆல்பர்ட் ஐன்ஸ்டான்
வில்லியம் ஜேம்ஸ் ‘நம்புவதற்கான மன உறுதி ‘யை பிரச்சாரம் செய்தார். என் பங்குக்கு நான் ‘சந்தேகப்படுவதற்கான மன உறுதியை ‘ பிரச்சாரம் செய்யவேண்டும். தேவையான விஷயம் நம்புவது அல்ல. கண்டுபிடிப்பது. இரண்டும் நேர்மாறான விஷயங்கள் – பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
நாம் மற்றவர்களைப் போல வரலாற்றில் சிக்கித்தவிக்கவில்லை என்று நினைத்துக்கொள்வது 20ஆம் நூற்றாண்டு வியாதி – புரூஸ் ஸ்டெர்லிங்
உன் 70 வருடங்களின் மொத்த நாட்கள் 26,250. இந்த அத்தனை நாட்களில், ஒரு நாளும் இன்னொரு நாளைப்போல இருக்கவில்லை. இதிலிருந்து, கிரியோஸஸ், மனிதன் முழுமையாக சந்தர்ப்பத்தின் மிருகம் என்பதை நீ பார்க்கலாம். – வரலாறுகள் என்ற புத்தகத்தில் ஹெரோடோடஸ்
நம்மிடம் மற்றவர்களை வெறுக்க போதுமான மதங்கள் இருக்கின்றன. ஆனால் மற்றவர்களை அன்பு செய்ய போதுமான மதங்கள்தான் இல்லை – ஜோனதன் ஸ்விஃப்ட்
கால்பந்தாட்டம் என்பது வாழ்க்கையைப் போல. இதில் கடின உழைப்பு, தியாகம், விடாமுயற்சி, போராட்டகுணம், சுயநலமின்மை, மேலதிகாரிகளுக்கு மரியாதை என்ற அனைத்து விலைகளையும் கொடுத்துத்தான் நம்மால் உருப்படியான எதையும் அடையமுடியும் என்று நமக்கு கற்றுதருகிறது – வின்ஸ் லொம்பார்டி
இங்கே வெறுமே உயிர்வாழ நீங்கள் இருக்கவில்லை. உலகத்தை மேலும் வளமையாகவும், நல்ல தூரதரிசனத்தோடும், நம்பிக்கை சாதனை போன்றவற்றின் உணர்ச்சியோடும் வாழவைக்கவே இருக்கிறீர்கள். இந்த உலகத்தை மேலும் வளப்படுத்தவே இங்கே இருக்கிறீர்கள். இந்த வேலையை மறந்துவிட்டார்களென்றால் நீங்கள் உங்களையே ஏழையாக்கிக் கொள்கிறீர்கள் – உட்ரூ வில்ஸன்
ஒன்றுமில்லாததைவிட நிஜமானது வேறு ஒன்றுமில்லை – டெமாக்ரிடஸ்
கிரிஸ்துவின் ராஜ்யத்தை விட அதிக ரத்தம் சிந்திய ராஜ்யம் வேறெதுவுமில்லை – மோன்டிஸ்க்
மனிதர்கள் ஏன் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதன் காரணம், அவர்கள் வானத்திலும் பூமியிலும் நடக்கும் வினோதமான காரணமற்ற விஷயங்களை பார்த்து அவைகளை கடவுளின் எண்ணத்தால் அவை நடக்கின்றன என்று நினைப்பதால்தன் – அகிலத்தின் இயற்கை என்ற புத்தகத்தில் லுக்ரேஷியஸ்
உலகம் அமைதியற்றுப் பிறந்தது, அன்றிலிருந்து எப்போதும் அசைவன்றி நின்றதில்லை – ரூஸோ
ஆயிரம் மைல் பிரயாணம் ஒரு சின்ன அடியிலிருந்தே ஆரம்பிக்கிறது – லாவோ-ட்சு
ஏதாவது ஒரு பேரழிவு நடந்து, எல்லா அறிவியல் அறிவும் அழிந்து போகும் என்ற நிலை வந்து, ஒரே ஒரு வரி மட்டும் அடுத்த தலைமுறை உயிர்களுக்கு செல்லலாம் என்ற நிலை வந்தால் எந்த வரி நிறைய விஷயத்தை குறைந்த வார்த்தைகளில் வைத்திருக்கும் ? ‘ஒன்றைச்சுற்றி ஒன்று நிரந்தரமாக சுற்றிக்கொண்டிருக்கும் மிகமிகச்சிறிய பொருள்கள் சற்று தூரத்தில் இருக்கும்போது ஒன்றை ஒன்று ஈர்க்கவும் நெருக்கினால் விலகிப் போகவுமான குணங்கள் கொண்ட சின்னச்சின்ன பொருள்களால் ஆன அணுக்களாலேயே எல்லாப்பொருள்களும் கட்டப்பட்டிருக்கின்றன ‘ என்னும் வாக்கியத்திலேயே, உலகத்தைப் பற்றிய ஏராளமான விஷயத்தை ஒரு வரியில் அடக்கலாம். கொஞ்சம் கற்பனையும் சிந்தனையும் வேண்டும். – ரிச்சர்ட் பி ஃபெயின்மான்
சுதந்திரத்துக்கும் உண்மைக்குமாக போராட வெளியே சென்றால் உன்னிடமிருக்கும் மிக நல்ல உடைகளை அணிந்து கொண்டு போகாதே -ஹென்ரிக் இப்ஸன்
நமது காட்சியியே நமது அத்தனை அறிவுக்கும் ஆரம்பம் – லியோனர்டோ டா வின்ஸி
இன்றைக்கு இருக்கும் நிலையில் யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பது முக்கியமான வித்தியாசம் இல்லை. யார் அக்கறைப்படுகிறார்கள் யார் அக்கறைப்படவில்லை என்பதே முக்கியமானது – அபே பைர்
இலட்சியத்துக்கு வந்த மனிதர்கள் திரும்பக்கூடாது – புளூடார்க்
கார்ல் சாகன் நம்ப விரும்பவில்லை. அறிய விரும்பினார் – ஆன் ட்ருயன்
தாங்களே கண்டறிந்த காரணங்களாலேயே மனிதர்கள் மனம் தேறுகிறார்கள். மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டகாரணங்களால் அல்ல – பிளைஸ் பாஸ்கல்
உண்மையிலேயே மகத்தான சமூகம் எது தெரியுமா ? மக்களை வித்தியாசமாக இருக்க விடும் சமூகம்தான் – டேவிட் க்ரேசான்
என்னத்தை நம்புகிறானோ அதுதான் அந்த மனிதன் – ஆண்டன் செக்காவ்
‘கிரிஸ்தவ கடவுள் முந்தைய கலாச்சார சமூகங்களின் பழைய கடவுள்கள் போலவே பார்க்கலாம். கிரிஸ்தவ கடவுள் மூன்று முகங்கள் கொண்ட அரக்கன். குரூரம், பழிவாங்குதல், தான்தோன்றித்தனம் ஆகியவைதான் அந்த மூன்று முகங்கள். இந்த அரக்ககுணம் கொண்ட மூன்று முகங்கள் கொண்ட மிருகம் போன்ற கடவுளை அறிய வேண்டுமாயின் இந்த கடவுளுக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் மனிதர்களைப் பார்த்தால் போதும். இவர்கள் இரண்டுவகை. ஒன்று முட்டாள்கள் இரண்டாவது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் ‘ – தாமஸ் ஜெஃபர்ஸன் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)
நேற்றைய கனவு இன்றைய நம்பிக்கையாகவும் நாளைய நடப்பாகவும் இருக்கும்போது எது நடக்கவே நடக்காது என்று கண்டுபிடிப்பது கடினம் – ராபர்ட் கொட்டார்ட்
எதிர்காலம் பற்றிய கனவில்லாதபோது மக்கள் அழிகிறார்கள் – ப்ரோவர்ப்ஸ் 29:18
தெரிந்த விஷயங்கள் இருக்கின்றன, தெரியாத விஷயங்கள் இருக்கின்றன, இரண்டுக்கும் நடுவில் தேடுதல் இருக்கிறது – யாரோ
நாம் என்னத்தை திரும்பத்திரும்ப செய்கிறோமோ அதுவே நாமாக ஆகிவிடுகிறோம். சிறப்பு என்பது செயலில் இல்லை, பழக்கத்தில் இருக்கிறது – அரிஸ்டாட்டில்
எதிர்காலத்தை கணிக்க முடியாது, கண்டுபிடிக்கலாம் – டென்னிஸ் கபோர்
பைபிள் பண்ணிய கொடுமைகளை நினைத்துப் பார்க்கும்போது, அதற்கு சமமாக எதையும் எழுதுவதை நினைத்துப்பார்க்கவும் வருத்தமாக இருக்கிறது – ஆஸ்கார் வைல்ட்
கடவுள்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். ஆனால் அணுக்கள் காலம்காலமாக இருந்துகொண்டே இருக்கின்றன. – அலெக்ஸாண்டர் சேஸ்
நிழலைப்பிடிக்கபோய் நிஜத்தை விட்டுவிடாதே – ஏஸாப் நீதிக்கதைகளில்
நீண்டகாலத்தில், மனிதர்களை எதைக் குறிவைக்கிறார்களோ அதையே அடிக்கிறார்கள் – தோரோ
- இயலாமை
- யாரோ சொன்ன புன்னகைமொழிகள்
- உரத்த சிந்தனைகள்
- கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி (இறுதிப்பகுதி)
- வெந்தயப் பொங்கல்
- பட்டர் பனீர் மசாலா
- நுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்
- ஊர்ந்து போகும் வாழ்க்கை
- மரணம்
- சிதம்பர ரகசியம்
- பிரும்மம்
- கவரிங் புன்னகைகள்
- இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001
- காய் கவர்ந்தற்று
- இரணியன் – திரைப்பட விமர்சனம்
- அபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)
- சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்
- கறுப்பு அணில்
- …ப்பா