கே ஆர் மணி
நான் வெற்றியா ? தோல்வியா ?
தொப்புள் கொடி அறுத்து
பூமியில் குதித்தபின் தொடங்கும்
என் மன ஊசலாட்டம்..
என் அரும்பு மீசையிடம்
குழந்தைதனம் தோற்கும்.
என் நரைமயிரில்
வாலிபம் தோற்கும்.
முப்பதை தாண்டியும் கல்யாணமாகலாம்.
முடியாது போனால் நித்திய கல்யாணி.
பத்து மாதத்திற்கு முன்
அது குறைப்பிரசவம்.
மூணு மாதத்தில் முழுகாது போனால்
கல்லெறியும் மலடிப்பார்வைகள்.
வெற்றியும், தோல்வியும் காலத்தின் கணக்குகளா ?
இருளின் தோல்வி ஒளியா?
ஒளியின் தோல்வி இருளா ?
பிறப்பின் முடிவு இறப்பென்றால்
இறப்பின் தொடக்கம் எதுவாகும்..
புனரபி ஜனனம்..புரிகிறது.
புனரபி மரணம்.. இடிக்கிறதே.
தோல்விகள் வெறும்
கால மணித்துகளின்
கண்ணாடியில் பாதரசமோ ?
வெற்றியும், தோல்வியும் காலத்தின் மாயங்களா ?
என் மன ஊசலாட்டம்..
முருங்கை மரத்தின்மீது..
வேதாளத்தின் கேள்விகளாய்..
விடைகளுக்காய் விக்கிரமாத்தினை தேடி..
நான் வெற்றியா ? தோல்வியா ?
நான் என் கவிதையை மறுபடி படித்தேன்.
விக்கிரமாதித்தனின் பக்கத்திலிருந்து..
வெற்றி உன் மனைவி..
தோல்வி உன் காதலி
வெற்றியை தேய்த்து பார்.
தோல்வி தெரியும்.
தோல்வியை தேய்த்து பார்
வெற்றி பல்லிளிக்கும்.
வெற்றி உன் மனைவி
தோல்வி உன் காதலி
ஒவ்வொரு மனைவி பின்னும்
எத்தனை காதலிகள்.. உனக்கே தெரியும்..
மனைவியை மட்டும் ஊருக்கு சொல்லு.
காதலிகள் உன் நினைவு கல்லறைக்குள்
நித்திரையாகட்டும்.
உன் மனைவியை உனக்கு உவப்பாக்குவது
உன் காதலியின் ஈரமான நினைவுகள்தானே..
யாரோ எனக்காய் கவிதை படித்தார்கள்
அந்த பிரபஞ்சப்பகுதியில்.
என் கேள்விக்கு நான்தான்
என் குரலில் விடை சொல்லவேண்டும் என
வேதாளம் சொல்லிற்று.
நான் வெற்றியா ? தோல்வியா ?
விதை வெடித்து, மரம் வளர்வது
விதையின் தோல்வியா ?
மரத்தின் இலையுதிர்காலம்
மரத்தின் மரணப்படுக்கையா ?
ஒவ்வொரு இலையும் மட்கி
மறுபடியும் விதையாவது
இயற்கையின் வித்தையன்று… விதி..
தோல்வி மறுக்கப்பட்ட வெற்றியா ?
இல்லை.. நீட்டிக்கப்பட்டதா ..
ஹ¤ம்.. அதெல்லாம் சரி.
நான் வெற்றியா ? தோல்வியா ?
அடுத்தவாரம் யாராவது
முடியாத என் கவிதையை
யாராவது தொடருங்களேன்.
உன் கவிதையை நீயே எழுதன
சத்தியத்தை யார் சொன்னது ?
- சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)
- ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்
- காதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை !
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2
- நட்சத்திர இரவு – 2007
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்
- புதிய நளபாகம் – மும்பாதேவிக்கு
- கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?
- இனியநாள்
- பா.விசாலத்தின் படைப்புப்பயணம்
- நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)
- தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா
- ஹெச்.ஜி.ரசூல்
- ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 25
- இலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்
- கடிதம்
- கவிதைகள்
- தனிமையில் வெறுமை
- முகம்
- ஹை கூ…..
- முடிவதில்லை எவராலும்..
- உன் கவிதையை நீயே எழுது
- அமெரிக்கன் பேபி
- விலைவாசி
- ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
- ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்
- ல ப க்
- ‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து
- தி ல் லா னா
- கால நதிக்கரையில்……(நாவல்)-21
- நான்காம் நாயகம்!
- தாமஸநாசினி