உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவிப்பு


உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்

மனிதரை மற்ற மனிதரோடும், உலகின் ஒவ்வொரு பரிமாணத்தோடும் தொடர்புடையவராய் உணரச் செய்வது மெய்ஞானம். அதுவே வாழ்க்கை நுணுக்கம். இத்தொடர்பை அறியும் முறைகளை தொடர்ந்து நடந்துவரும் ஆராய்தலினால் பரத கண்டத்தில் நிலைபெறவைத்த ஆதி மரபினை ஹிந்து மதம் என்று அறிகிறோம்.

ஒரு குழுவின் ஆதிக்கத்தைவிட தனிமனித முன்னேற்றமே நிலையான நேர்மையான சமூகத்தை உருவாக்கும் வழி எனக் கண்டு பயிலுவதாக இந்த ஹிந்து மதம் விளங்குகிறது.

மனிதரின் வேறுபட்ட ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களை கருத்தில் கொண்டு பயில்பவருக்கு பலனளிக்கும் பல வழிகளை கண்டறிந்த இந்த மரபில் நம் தெய்வீக தமிழகத்தின் பங்கு ஈடு இணையற்றது. இந்த ஞானத்தை நடைமுறைப்படுத்திய தமிழர்கள் தலை சிறந்து விளங்கினர்.

கற்றோர் வியக்கும் தமிழர் இலக்கியமும், கல்லாதவர் கண்களை கட்டுடைக்கும் ஆலயங்களும், அழகியலும் இளமையும் இணைந்து வெளிப்பட்ட இசை-நடனங்களும், கடல் கடந்த வணிகம் காட்டிய வளமும், பாரத ஒன்றிணைப்பை பழுதற்றதாக்க தமிழகத்தில் எழுந்த இமாலய கல்லின் தீரமும், ராமேஸ்வரத்தில் கலக்கும் காசி நதியின் இனிமையும், பன்முக பார்வையும் இந்த ஞானத்தில் இருந்தே விளைந்தன.

நாம் மட்டுமன்றி, மனித குலம் கண்டறியும் அறிவியல், மொழி வளம், கலை போன்ற திறமைகளும் இந்த ஞானத்திலிருந்தே எழுகின்றன. உலகப் பொது மரபான இம்மரபில் உதிக்கும் மாமனிதர்களே இந்தியாவில் இம்மரபை காத்தும் வருகின்றனர்.

மனிதரை மாமனிதராக மாற்றும் தமிழரின் இத்தொல் மரபு குறித்தும், தமிழர் அவரது தெய்வீக ஆற்றல்களை மீண்டும் அடைய தேவையான வழிகள் சுட்டவும் சான்றுகள் மற்றும் தகவல்கள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைய தளமாக http://www.tamilhindu.com விளங்குகிறது.

சாதி, மதம், அரசியல், மற்றும் குழு காழ்ப்புகள் அற்றதாக விளங்க விரும்பும் இத்தளம், மந்தை மனப்பான்மையிலிருந்து மனிதம் விடுதலைபெறவும், மனித வள மேம்பாட்டிற்காகவும் உழைக்கும்.

நேரிடை எண்ணங்களால் நேசம் வளர்க்கவும், நேசத்தால் எழுந்த நம் தேசம் வளர்க்கவும், இத்தேசத்தின் பிள்ளைகளான உங்களை உயர்த்தவுமே உருவான யாக பீடம் இது. வந்தவரை வல்லவராக்கும்.

வாருங்கள் !

வாழிய நற்றமிழ் ! வாழிய பாரத மணித்திரு நாடு !

வந்தே மாதரம்.


saakshin@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு