இலை போட்டாச்சு! – 30 அடை

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

பாரதி மகேந்திரன்


இலை போட்டாச்சு!

அடை – நான்காம் வகை

தேவைபடும் பொருள்கள்:

கோதுமை ரவை – 500 கிராம்
கொண்டைக்கடலை – 200
துவரம் பருப்பு – 200
பச்சைப்பயறு – 100
அரிசி – 250
உளுத்தம் பருப்பு – 50
பாசிப்பருப்பு – 50
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் – 250
கறிவேப்பிலை – 10 ஆர்க்குகள்
கொத்துமல்லி – ஆய்ந்து அரிந்தது – 1 கிண்ணம்
பெருங்காயப்பொடி – 1 மே.க.
உப்புப்பொடி – 3 மே.க. (அல்லது விருப்பம்போல்)
மிளகாய்வற்றல் – 12

கோதுமை ரவையை எண்ணெய் விடாது வறுக்கவும். கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, பச்சைபயறு, அரிசி ஆகியவற்றை ஒன்றாய்க் கலந்து களைந்து தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஊற வைக்கவும். நசுங்குகிற பதத்துக்கு ஊறியபின் அரிசி, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை பாசிப்பயறு ஆகியவற்றைக் கரகரப்பாக மின் அம்மியில் மிளகாய் வற்றலுடன் சேர்த்து அரைத்து வழித்து எடுத்த மாவுடன், களைந்த பாசிப்பயறு, உளுத்தம்பருப்பு, வறுத்துவைத்துள்ள கோதுமை ரவை, உப்புப்பொடி, பெருங்காயப்பொடி,கறிவேப்பிலை. கொத்துமல்லித் தழை, வெங்காயம் ஆகியவற்றைக் கலந்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்த பின் அப்படியே ஒருமணி நேரம் விட்டு வைத்தபின்னர் அடைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடைகளாய்த் தட்டி எடுக்கவும். இதற்கும் தேங்காய்ச் சட்டினி தொட்டுக்கொள்ளலாம். கோதுமை ரவை அடைக்கு வெங்காயம் கட்டாயம் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்