தமிழநம்பி
அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும்
திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது!
ஆரையும் விடவும் ஆரிய அரவை -5
நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய
ஒருதனிப் பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந்
தெருள்தெளி மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது!
மூடுற்ற தமிழினப் பீடு விளக்கிய
ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது! -10
தாய்நிலந் தன்னைத் தமிழ்நா டென்றே
வாய்மகிழ்ந் தழைக்க வைத்தவர் பெயரிது!
ஆட்சியில் கல்வியில் காட்சியில் இசையில்
நீட்சி தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி
நலக்கலை சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச் -15
சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது!
செத்ததை விலக்கிய செந்தமிழ்த் திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!
பிறப்பிற் பிரிவினை இறக்கங் கூறிய
சிறப்பறு ‘ஆரிய மாயை’ செறுத்தவர்! -20
தமிழர் உணர்வுத் தழல்’தீப் பரவுக’!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென
ஆர்த்தவர்; உழைத்தவர்; அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே! -24
thamizhanambi44@gmail.com
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1
- தாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]
- ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- ஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்
- கே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி
- சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்
- சென்னை மாரத்தான்!!
- தானம்
- காஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா?
- சந்திரமுகி வீடியோ கடை
- இல்லாமையின் இருப்பு
- மழை பெய்தாலும் பெய்யலாம்
- ஒரு பாதசாரியின் கனவுகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு
- யமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- அப்பாவின் நினைவு தினம்
- உயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்
- விழித்திருப்பவனின் இரவு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.
- திருவல்லிக்கேணியில் திருமங்கையாழ்வார்
- நினைவுகளின் தடத்தில் – (17)
- உயிர்
- வேத வனம் கவிதை விருட்சம் 1.
- இருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்!
- இரண்டு கவிதைகள்
- கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி
- மொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை
- தேவைகளின் பார்வைகள்
- அணில்கள்
- பட்டம்
- ஆத்மார்த்தமாய்க் கொடு