இருத்தல் குறித்த சில கவிதைகள்..

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

சுப்ரமணியன் ரமேஷ்


தப்பு தப்பு
எல்லாமே தப்பு
தப்பி தப்பி
எங்கேனும் தப்பி
எப்படியேனும் தப்பி
தப்பாமல் தப்பி
தப்பில்லாமல் தப்பி
தப்பு தப்பில்லை ?
பிரம்பு உயர்ந்தசைய
உவகை கிளர்ந்தது
‘உள்ளேன் ஐய்யா! ‘

@@@@@@@@@@@@@@@@@

தகித்து ஒளிர்ந்து சீறும் உயிாிழை
ஒன்றைக் கண்டேன்
பகுக்க முயன்றேன்
வெளியையும் காலத்தையும்
பெற்றோரெனக் கொண்ட சக்திக் குவியல் பிடிபட்டது…
பிடிக்க முயன்றேன்
மரணத்தின் வாசனையொடு
காித்துகளொன்று விழுந்து கிடந்தது…
என் கவனிப்பு,
சிந்தனை மடிப்புகளில் பொசுங்கிக் கொண்டிருக்க
தன் போக்கில் நீந்தி மறைந்தது உயிாிழை
‘தன் போக்கில் ஆனந்தமாய் நீந்தி மறைந்த ‘தாய் குறித்து வைத்தேன் நான்.

@@@@@@@@@@@@@@@@@

சின்னப் பயல் சீனுவுக்கு
சிறகுகள் ஏதும் தேவையாயில்லை
மேஜையின் விளிம்பிலிருந்து தயக்கமாய் நீண்ட
கைகளை குறி வைத்துப் பாய்ந்தான்
காலத்திற்கும் அ-காலத்திற்கும்
இடைப்பட்ட ஒன்றில்
கணத்தினை கூறுகளாக்கி
ஒன்றில் தயங்கி
ஒன்றில் சாிந்து
ஒன்றில் மிதந்து
ஒன்றில் மீண்டான்.
யுகங்களைப் புறந்தள்ளி
கணங்களில் தளிர்க்கிறது ஜீவிதம்.

@@@@@@@@@@@@@@@@@@@

subramesh@hotmail.com

Series Navigation

சுப்ரமணியன் ரமேஷ்

சுப்ரமணியன் ரமேஷ்