மஞ்சுளா நவநீதன்
கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது
முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் ‘என் இயலாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு குஜராத் ‘ என்று பேசியிருக்கிறார். மிகவும் வருத்தம் வர வைக்கும் ஒரு பேச்சு இது. நான் எழுதியபோது, உடனே அரசியல் சார்பற்று அனைத்து கட்சித்தலைவர்களும் குஜராத் விஜயம் செய்து, தங்கள் தங்கள் சார்பாளர்களிடம் பேசி அமைதி நிலைநாட்டவேண்டும் என எழுதியிருந்தேன். என்னுடைய கட்டுரையை யாரும் டெல்லியில் படிப்பதில்லை எனத் தெரியும். ஆனால் இப்படிச் செல்லவேண்டும் என வேறு யாரும் டெல்லியில் பேசாமல் இருந்திருப்பார்களா என்ன ? பல பத்திரிக்கைகளில் இந்த வேண்டுகோள் வெளியாகியிருந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவிர வேறு யாரும் அங்கு செல்லவில்லை. முக்கியமாக ஜனாதிபதி தன் மாளிகையிலிருந்து வெளியே வரவே இல்லை. ?ார் ? பெர்னாண்டை ? விமர்சித்த எந்த காங்கிர ?காரரும், மணி சங்கர் ஐய்யரிலிருந்து சோனியாவரை யாருமே கு ?ராத் செல்லவில்லை. கு ?ராத் எரிவதை அரசியல் ஆதாயத்தின் கண்ணாடிவழியாகப் பார்த்து சந்தோ ?மடைந்துகொண்டிருந்தார்கள். ?னாதிபதி ஏன் கு ?ராத் செல்லவில்லை ? காரணம் என்ன ? பா ?கவுக்குப் பிடிக்காது என்று இவராக நினைத்துக்கொண்டதுதான் காரணம். அப்படி கு ?ராத் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால், மீண்டும் ?னாதிபதி பதவிக்கு பா ?க தன்னை ஆதரிக்காது இவராக நினைத்துக்கொண்டதுதான் காரணமாக இருக்கவேண்டும். சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளி கூட கொடுத்த கூலிக்கு வேலை செய்யவேண்டும் என நினைப்பான். ஒரு நாட்டின் தலைமைப்பதவியில் இருக்கும் இவர், தனது அடுத்த பதவியை நினைவில் வைத்துக்கொண்டு, செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் இருந்தது மன்னிக்க முடியாத குற்றம். ஜனாதிபதி பதவி பெற்றதும் முதல் வேலையாக குஜராத் சென்று மக்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அப்துல்கலாம். ஆரம்பச் சூரத்தனம் என்று இதனையும் வழக்கம்போல கேவலப்படுத்தலாம். ஆயினும், அது அவர் செய்யவேண்டிய வேலை. அதனைச் செய்தார். பாஜக அவரை அங்குச் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. அவர் அங்கு வருகிறார் என்றதும் அவசர அவசரமாக நிவாரணப் பணிகள் நடந்தன. அதனால் ஒரு நூறுபேர் பயன் பெற்றிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதுதான்.
*******
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் : இணைய தளத்தில் ஆங்கிலம்
தமிழ்நாடு அரசாங்கத்தின் இணையதளம். தமிழ்நாடு அரசாங்கம் உங்களை இரு கரம் நீட்டி தன் இணையத்தளத்துக்கு அழைக்கிறது. http://www.tn.gov.in முதல் பக்கம் தவிர வேறு பக்கங்களில் தமிழைப் பார்த்தால் உங்களுக்கு கண் கோளாறு. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர்களும், நீதிமன்றக் காகிதங்கள் அனைத்தும் தமிழில் இருந்தால்தான் நீதிமன்றம் வருவேன் என்று சொன்னவர்களும் இணையத்தளத்தில் இரண்டு பக்கம் தமிழ் எழுத விருப்பமின்றி அரசியல் பண்ணிகொண்டிருக்கிறார்கள். இந்தப் பக்கம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லா துறைகளின் பக்கங்களும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. வெட்கக்கேடு இது.
தமிழ்நாட்டின் கிராமங்களில் எல்லாம் இணையவசதி செய்துகொடுக்கும் ஒரு திட்டம் தீட்டப்பட்டுவருகிறது. இது எப்படி கிராமத்து மக்களுக்குப் பயன் அளிக்கும் ?
**
குறிப்பு: இது எழுதியது இரு வாரங்களுக்கு முன்னர். பின்னர் மறுபடி பரிசோதித்தேன். நிறையப்பக்கங்கள் தமிழில் இருக்கின்றன. இருப்பினும்…
*******
வாழ்க சர்வாதிகாரி முஷரஃப்
சர்வாதிகாரி முஷரஃப் ஒரு பக்கம் தேர்தல் நாடகத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டே இன்னொரு பக்கம் , தன்னுடைய பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் காட்டிலும் உயரத்தில் , யாரும் தொட முடியாதபடி இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக் கொண்டுவிட்டார். இதில்லாமல் நவாஸ் ஷரீஃப், பேநஸீர் புட்டோ போன்ற செல்வாக்கு உள்ள தலைவர்கள் பாகிஸ்தானில் நுழைய முடியாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவிற்கு பன்னீர் செல்வம் பினாமி ஆட்சி புரிந்தது போல், பேநஸீர் புட்டோவிற்கும், நவாஸ் ஷரீஃபுக்கும் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரக் கூடும் என்பது முஷரஃபிற்கு அச்சம் தருகிறது. ராணுவ ஆட்சியின் அனைத்து குணாம்சங்களும் கொண்டிருந்தாலும் அமெரிக்காவின் ஆசீர்வாதம் இருக்கும் வரையில் கவலை இல்லை. இவர் கா ?மீர் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்வது தான் மகா தமா ?.
***********
வேட்பாளர் தகுதிச் சட்டம் திரும்பவும் நாடாளுமன்றத்திற்கு
நீர்த்துப் போன ஒரு வேட்பாளர் தகுதிச் சட்டத்தை எப்படியும் அடுத்த தேர்தலுக்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் எல்லாக் கட்சி ஆட்களும். கட்சி கடந்த ஒற்றுமை இதில் மட்டும் நிலவுகிறது. இந்தச் சட்ட வரைவை ஜனாதிபதி திரும்பி அனுப்பியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. இதனால் சட்டத்தைத் தடுக்க முடியாதென்றாலும் இப்படி அதிருப்தியைத் தெரிவிப்பது ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி அல்ல நான் என்று அப்துல் கலாம் தெரிவிக்கும் ஒரு செய்தி. இதனால் சிறிதேனும் இந்தச் சட்டம் சீர்பட்டால் நல்லது என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் இருந்தது. ஆனால் , எந்த மாற்றமும் செய்யாமல் நாடாளுமன்றம் திரும்மபவும் அதை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. வெட்கக்கேடு. பாராளுமன்றம் பன்றித் தொழுவம் என்று சொன்னால் எனக்குக் கோபம் வருவதுண்டு – இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால். இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, குற்றவாளிகளின் பிரதிநிதிகள் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது.
*********
தேர்தல் கமிஷனை எதிர்த்து ஜெயலலிதா
சேஷன் வந்து தான் தேர்தல் ஆணையத்தைக் கெடுத்துவிட்டார் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார், ஜெயலலிதா. குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த தேர்தல் ஆணையம் செய்திருக்கும் சிபாரிசை இவர் எதிர்த்திருக்கிறார்.
அரசாங்கத்தின் வேலையை தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது என்பது இவர் பேச்சு. அரசாங்கம் ஒழுங்காக இருந்தால் தேர்தல் ஆணையம் ஏன் தலையிடுகிறது ? எல்லா அமைப்புகளுமே தன் காலடியில் கிடக்க வேண்டும் என்று ஜெயலலிதா போன்றோரின் எண்ணம்.
தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீரிலும் தேர்தலுக்கு முன்பு கவர்னர் ஆட்சி நடைபெற வேண்டும் என்று கோரியுள்ளது.
********
மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்.
குஜராத்தின் முதல்வர் மோடி மிகக் கீழ்த்தரமாக ஆணையரைத் தாக்கிப் பேசியுள்ள செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இவர் கிறுஸ்தவர். சோனிய காந்தியும் கிருஸ்தவர், இதனால் சோனியாவுக்கு ஆதரவாக லிங்டோ இருக்கிறார் என்று பேசும் அளவுக்குக் கீழிறங்கியிருக்கிறார் இந்த மோடி. இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எப்படி முதல்வர் ஆகிறார்கள் ? எப்படி கட்சிகள் இந்த மாதிரி ஆட்களை நம்பிச் செயல்படுகிறது ?
வேட்பாளர் தகுதிச் சட்டம் இயற்றப்பட்டால் ஒரு மோடி, ஒரு ஜெயலலிதா அல்ல எல்லா திசைகளிலும் இப்படிப்பட்ட ஆட்கள் தாம் பதவிக்கு வருவார்கள்.
*******
manjulanavaneedhan@yahoo.com
- மறு பிரசவம்
- சொர்க்கமாயும் சில கணங்கள்.
- காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்
- கேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி ?
- கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்
- ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)
- ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)
- சைவ சில்லி (chili)
- ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)
- ‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்
- அறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)
- பூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்
- விதி
- அந்த அக்கினியை ருசிபாருங்கள்
- நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
- ஆடு புலி ஆட்டம்
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- சீதை
- மனிதக் கறை!மனித அக்கறை!
- நடை பாதை
- பருவ காலம்
- தமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி
- சிறுபான்மையினர் கல்விநிலையங்கள்
- சுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் ?
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)
- சீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1
- ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்
- ‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்
- நிலை