இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

ஃபிலிப் பெளரிங்


(இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் இதழில்)

அர்ஜெண்டைனாவும், என்ரான் நிறுவனமும் நிதி நெருக்கடியில் மாட்டி அழிவதைப் பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தத்துக்கான இந்தியாவின் ஆழமான உறுதியான முயற்சிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

1991இல் தான் அர்ஜெண்டைனாவும் தனது பொருளாதார சீர்திருத்தங்களை ஆரம்பித்து தனது பணமதிப்பை டாலருடன் இறுக்கிக்கட்டியது. அதே நேரத்தில்தான் என்ரான் நிறுவனமும் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்தைக் காரணமாகக்கொண்டு இந்தியாவில் டாபோல் என்னும் இடத்தில் அனல் மின் நிலையம் கட்ட முயற்சி எடுத்தது. அன்றைக்கு இந்தியாவில் இருந்த மிகப்பெரிய அன்னிய முதலீடு இதுதான். இன்னும் இந்தியா, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட, மிகவும் அதிகமாக நிர்வகிக்கப்பட்ட, மிகவும் அதிகமாக மான்யம் வழங்கும், மிகவும் மோசமான கட்டுமான அமைப்புக்கொண்ட பொருளாதார அமைப்பாக இருக்கிறது. இதன் தொழிற்சாலைகளில் மிகச்சிலவே உலக அளவில் போட்டி போடக்கூடிய வலிமை பெற்றவை.

இதே நேரத்தில், பாகிஸ்தானுடனான போர்ப்பதட்டம் டிஸம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்குப்பின்னர் அதிகரித்திருக்கிறது.

சென்ற பத்தாண்டுகளில் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் நல்லதும் கெட்டது கலந்ததாகவே காட்டுகின்றன. சீனா தன்னுடைய பொருளாதார முன்னேற்றம் என்று கூறிக்கொள்ளும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பில் சில சதவீதப்புள்ளிகளை மிகைப்படுத்துகிறது என்பதை கணக்கில் கொண்டாலும், இந்தியாவை விட சீனாவின் முன்னேற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவும் சென்ற பத்தாண்டுகளில் உலகப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்ததை உபயோகப்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது. வெளிநாட்டு முதலீடும் அதிக அளவில் வரவில்லை. இருந்தும், 4.6 சதவீத வருடாந்தர வளர்ச்சி அதற்கு முந்தைய பத்தாண்டுகளைக் கணக்கில் எடுத்துப்பார்க்கும்போது சிறப்பானதுதான்.

பொருளாதார சீர்திருத்தத்தைப் பொறுத்த மட்டில், இந்தியாவின் ஈடுபாட்டைச் சந்தேகிப்பது எளிதுதான். அரசாங்கத்துக்குச் சொந்தமான எல்லாத் தொழிற்சாலைகளையும் தனியார்மயப்படுத்துவது இந்தியாவைப் பொறுத்த மட்டில் சரியானது அல்ல என்று முன்னாள் நிதி மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் உலக பொருளாதார விவாதக்களத்தில் பேசினார். அதற்கு அவர் சொன்ன காரணம், இந்தியாவின் தனியார்துறையிடன் பெரும் சொத்துக்கள் இல்லை என்பதும், இந்தியாவின் அரசாங்கத் தொழிற்சாலைகளை வெளிநாட்டாரிடம் விற்பது அரசியல் ரீதியில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று என்பதும். அதே போல தொழிலாளர் சந்தையில் நடக்கவேண்டிய சீர்திருத்தங்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கிய பின்னரே செய்யப்பட வேண்டும் என்றும், அப்படிப்பட்ட சமூகப்பாதுகாப்பு அமைப்பு (social security) இப்போது வருவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்கள் சுதந்திரமயமாக்கல் என்ற liberalizationஐ இன்னொருவிதமாய்ப் பார்க்கலாம். சிங் எதிர்க்கட்ட்சியைச் சேர்ந்தவர். எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர் கட்சி ஆளும் மானிலங்களில் என்ன நடந்தாலும் மைய அரசின் எல்லாக் கொள்கையையும் அவர் எதிர்த்தே ஆக வேண்டும். அதில்லாமல், அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை கோர்ட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதும் உண்டு.

சிங் அரசியல் புள்ளி ஆனதே கூட , அடிப்படை மாற்றங்கள் பற்றி நம்பிக்கை தரும் விஷயம் தான். உத்தியளவிலும், சுய நலத்திற்காகவும் தவிர்க்கப் பாடு வரும் விஷயங்கள் : லாபம் ஈட்டாத அரசுக் கம்பெனிகளை மூடலாகாது. மானியங்களைக் குறைக்கக் கூடாது. தனியார்மயமாகக் கூடாது. அமைப்பின் கீழ் உள்ள தொழிலாளர்களுகுப் பல வசதிகள் இருந்தும், அமைப்பின் கீழ் வராத தொழிலாளர்கள் மிகக் கஷ்டப்படுகிறார்கள். தாராளமயமாக்கலை ஆதரித்தவர்கள் கருத்தளவில் வெற்றி பெற்றுவிட்டார்கள். இந்திய அரசின் மெத்தனமான போக்கும், என்ரானின் தடாலடிப் போக்கும் மோதியதில் பலருக்கும் காயம் தான். ஆனால் டாபோல் திட்டம் குறைந்தபடசம் பரிசீலனைகு வந்ததே வெற்றி தான். டாபோல் திட்டம் அங்கீகாரம் பெறாததின் ஒரு காரணம் : மகாராஷ்ட்ரா மின்சாரம் அதிஅக அளவில் உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றது தான்.

கடந்த பத்தாண்டுகளில் மைய அரசின் பிடி தளர்ந்ததன் காரணமாக மானிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. கல்வியும் வளர்ந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர்கள் எங்கும் சென்று வேலை தேடக் கூடிய ஒரு சுதந்திரம் உண்டு. சீனாவில் இது இல்லை. இதனால், வருமான ஏற்றத்தாழ்வு சீனாவை விடவும் இந்தியாவில் குறைவே.

அர்ஜெண்டைனா போலவே இந்தியாவின் கடன் நிலையும் மோசமானதே. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் அரசுப் பற்றாக்குறையாகும். மொத்த பற்றாக்குறை பத்து சதவீதம். அரசிற்குச் சொந்தமான வங்கிகள் திரும்பிவராக்கடனில் மூழ்கியுள்ளன. ஆனாலும் , சீனாவில் போல அரசு வங்கிகள் திவாலாகிவிடவில்லை. பணக் கொள்கையும் எச்சரிக்கை மிக்கதே. மிதமான பணவீக்கத்திற்கு இந்தியா பழகி விட்டது. ஆனால் தாங்கமுடியாத பண வீக்கம் இல்லை. வெளிநாட்டுக் கடன்களைத் தவிர்க்கிற இந்தியாவின் கொள்கையும் நலன் பெற்றுத்தந்துள்ளது. வெளிநாடு வங்கிகள் எப்படி ஆசியாவையும் , அர்ஜெண்டைனாவையும் திவாலாக்கி விட்டன என்பது பற்றி இந்தியா அறிந்தே வைத்திருக்கிறது. சிங் போன்றவர்கள், மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், நடைமுறை ஞானம் உள்ளவர்கள். தேசிய உணர்வு, மெத்தனம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பற்றிய லேசான அவநம்பிக்கை கொண்ட இந்தியா, கோட்பாட்டளவில் எளிமையான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு தோல்வியுற்ற அர்ஜெண்டைனாவைக் காட்டிலும் பயனுள்ளது என்பது விளங்கும். இந்தியாவின் சீர்திருத்தங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக நகர்கின்றன.

Series Navigation

ஃபிலிப் பெளரிங்

ஃபிலிப் பெளரிங்