ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

மலர் மன்னன்


பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே பெரும் தவறு என்பது போன்ற பிரமை பலருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. விருப்பு வெறுப்பின்றி விவரங்களைப் பதிவு செய்யத் துணிபவரைப் பலவாறு தூஷிக்கும் ஆவேசமும், உள்நோக்கம் கற்பிக்கும் வேகமும் உண்டாகிவிடுவதோடு, முட்டாள் என்று திட்டுகிற அளவுக்கு நிதானமும் தவறிப்போகிறது.

குறிப்பாக நம் நாட்டு மக்கள் சமய உணர்விலும் நம்பிக்கையிலும் ஊறிப்போய்விட்டவர்கள்.

பொது நலனுக்காகப் பாடுபட முன்வருவோரையும், மன ஆறுதல் அளிப்போரையும் அவர்கள் ஒரு தெய்வ அவதாரம் போலவே கருதி வணங்கத் தொடங்கிவிடுவார்கள். எளியரான நம் மக்களின் இயல்பு தெரிந்திருப்பதால்தான் பலர் மந்திரம், மாயம், பூஜை, யாகம், மடம், ஆசிரமம் என்றெல்லாம் பிழைப்பு நடத்தத் தொடங்கிவிடுகிறர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போகப்போகத்தான் புலப்படுகிறது.

சோம்பேறித்தனமாகப் பிச்சையெடுத்துப் பிழைக்க விரும்புவோரும் தங்கள் பிழைப்பு சிரமம் இல்லாமல் நடைபெறக் காவியைக் கட்டிக்கொண்டு விடுகிறார்கள். எத்தனை போலிகள் நடமாடினாலும் அசலை இனங்காண்பது இயலும்தான் என்றாலும் அதற்கும் சிறிது தீர்க்கமான பார்வை தேவைப் படுகிறது.

நம் மக்கள் ம ?ாத்மா என்று பயபக்தியுடன் ஒருவரை அழைப்பது காலங் காலமாக நடைபெற்று வருவதுதான். இதில் புதுமை ஏதுமில்லை. ம ?ாத்மா உதங்கரில் தொடங்கி, ம ?ாத்மா பூலே வரை தொடர்ந்து, இறுதியாக காந்திஜியில் தாற்காலிகமாக முற்றுப் பெற்றுள்ளது.

உதங்கர் நாடோடியாய் அலையும் துறவி. மகா பாரதப் போரில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டதை அறிந்து இத்தனைக்கும் இந்தக் கிருஷ்ணன் அல்லவா காரணம் என்று கோபங் கொண்டவர். கிருஷ்ணர் அவரைச் சமாதானப் படுத்தி மனிதர் நலனில் அவருக்கிருந்த ஈடுபாட்தைப் பாராட்டி, அதன்பொருட்டு அவருக்கு ஏதேனும் ஒரு வரமும் அளிக்க முன் வந்தார்.

“”வனாந்தரங்களிலும் பாலை வனங்களிலும் திரியும் எனக்குப் பெரிதாக என்ன வேண்டும் கிருஷ்ணா ? இப்படி அலைகையில் சில சமயம் தாகமெடுத்து நாக்கு வறண்டு போகும். தொண்டை காய்ந்து தவிப்பேன். அம்மாதிரி சமயங்களில் தாகந் தீரத் தண்ணீர் கிடைக்க வழிசெய்தாயானால் போதும்” என்றார் உதங்கர்.

“”இதென்ன பிரமாதம்! அப்படியே ஆகட்டும்” என்று வாக்களித்துவிட்டு விடைபெற்றார், கிருஷ்ணர்.

உதங்கருக்கு சீக்கிரமே சோதனை வந்தது. பாலை நிலத்தில், சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து செல்கையில் தாகத்தால் அவரது நாவு வறளத் தொடங்கியது. தண்ணீர் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அவ்வளவுதான்; உடனே அவரை நோக்கி ஒருவன் தோளில் தோற்பையுடன் வருவது தெரிந்தது.

வந்தவன் ஒரு புலையன். அவனது தோளில் இருந்த தோற்பையில் நிரம்பியிருந்தது தண்ணீர்.

“’சுவாமி, தாகமாயிருக்கிறீர்கள் போலிருக்கிறதே… நீர் வார்த்துத் தரவா ? நான் புலையன். ஆபத்துக்குத் தோஷம் இல்லை அல்லவா ?” என்றான் புலையன்.

ம ?ாத்மா உதங்கர் சங்கடப்பட்டுப் போனார். தோற்பையில் தண்ணீர். சுமந்து வருவதோ புலையன்!

“வேண்டாமப்பா, பாதகமில்லை” என்று தாகத்தைச் சகித்துக் கொண்டார், உதங்கர்.

உடனே புலையன் வேடங் களைந்து ஸ்ரீ கிருஷ்ணன் சிரித்து நின்றான்!

“என்ன ம ?ாத்மா நீங்கள்! ஆன்ம விசாரம் செய்யும் தாங்கள் தோற்பைத் தண்ணீர் என்றும் சுமந்து வருபவன் புலையன் என்றும் பேதம் பார்க்கலாமோ ?” என்றான் குறும்புக்காரக் கிருஷ்ணன்.

உதங்கர் வெட்கித் தலை குனிந்தார். மன்னிப்புக் கேட்டார்.

உதங்கரையும் மக்கள் ம ?ாத்மாவாகத்தான் பார்த்தார்கள். அவருக்கும் ஒருவகையில் சரிவு ஏற்பட்டாலும் சுதாரித்துக் கொண்டு ம ?ாத்மாவாகத் தொடர்ந்தார். ஒவ்வொரு ம ?ாத்மாவும் இப்படித்தான் பல சரிவுகளுக்குப் பிறகும் ம ?ாத்மாவாகத் தொடர வேண்டியுள்ளது. ஏனெனில் என்னதான் ம ?ாத்மாவென மற்றவர்களால் போற்றப் பட்டாலும் அவர்களும் மனிதர்கள்தாமே, பல தடவைகள் சரிந்துவிட நேரிடுகிறது.

ஆண்டவனே மனிதனாய் அவதாரமெடுத்து வருகையில், மனித இயல்புக்கு ஏற்பவே நடந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை உணர்த்துவதற்காகத்தான் ராமனும்

கிருஷ்ணனும் பல சந்தர்ப்பங்களில் மனிதர் இயல்பின் பிரகாரம் நடந்து காட்டியதாக வர்ணிக்கப் படுகிறது. அதிலும் ம ?ா போகியும் ம ?ா யோகியுமான ஸ்ரீ கிருஷ்ண தத்துவம் மிக நுட்பமானது. புரிந்துகொள்ளத் தேர்ச்சி அவசியம். கிருஷ்ணனை விஞ்சிய போகியும் இல்லை, கிருஷ்ணனை விஞ்சிய யோகியும் இல்லை!

அவதாரங்களிலேயே தலை சிறந்ததாகக் கருதப் படுவது கிருஷ்ணாவதாரம். காரணம் அந்த அவதாரத்தில்தான் நான் இறைவன் என்கிற பிரகடனத்தை ஒரு அவதாரம் பகிரங்கப் படுத்துகிறது. நான் இறைவன். நீ மானிடன். நான் சொல்கிறேன், நீ செய். உன் மூலமாய் நானே வினையாற்றுகிறேன் என்று கட்டளையிடுகிற அவதாரம் அது. பாக்கியவான்

களுக்குத் தன் விசுவரூப தரிசனம் தந்த திவ்விய அவதாரம்! ஆகையால்தான் ஸ்ரீ கிருஷ்ணன் என்று நினைத்த மாத்திரத்திலேயே பலர் பரவசமடைய நேரிடுகிறது.

யுக தர்மம் இன்னதென்று கற்றுக் கொடுக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். யுக தர்மத்தின் பிரகாரம் இயங்காவிடில் பேரழிவே எனவும் தானே இயங்கிக் காட்டி அறிவுறுத்திய அவதாரம், ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். ஆ, பரமாத்மனின் அந்த தேவ ரகசியம் அறிதல் அத்தனை எளிதா ? எவ்வளவு பேதைகளாய்ப் போனோம்! எல்லாவற்றையும் அது அதற்கு உரிய பயிற்சியும் தேர்ச்சியும் பெறாமலேயே அறிந்துகொள்ள எப்படித் துணிகிறோம்! சாதாரணமாக ஒரு சைக்கிளை சாலையில் ஓட்டக் கூடப் பயிற்சியும் தேர்ச்சியும் தேவைப் படுகின்றன எனத் தெரிந்திருந்தும் எவ்வளவு அகம்பாவத்துடன் இறைத் தத்துவம் பற்றி விவாதிக்கத் தொடங்குகின்றோம்! சிறு குட்டை போன்ற நமது அறிவுக்கு எட்டாது என உணராது, மடக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்கிறோம்!

மனிதர்களின் பிரச்சினைகள் மனிதர்களால்தான் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் தெய்வம் மனித அவதாரமெடுத்து வந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வு காண்பதாக அறிவுறுத்தப்படுகிறது. அறிவின் பரிணாம வளர்ச்சியின் பிரகாரம் இது உணரப்பட்டு, ராமாவதாரத்திலிருந்துதான் இது மிகத் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது.

ம ?ாத்மாக்களை அடையாளங் கண்டுகொள்வதுபோல் பரமாத்மனை அறிதல் அத்தனை எளிதல்ல. அன்புக்குக் கட்டுப்படுபவனை அறிவால் கட்டுப்படுத்த இயலாதெனினும் சிறிதளவு முயற்சி செய்து பார்ப்போம்; இப்போதல்ல, பிற்பாடு.

முதலில் ஒரு ஆத்மாவை எந்த அடிப்படையில் ம ?ாத்மாவாகக் காண ஆரம்பிக்கிறோம் என யோசிப்போம்:

ஈகோ எனும் தான் என்ற அகந்தை முற்றிலும் இல்லாதிருத்தல்

அனைவரையும் சரிசமமாகப் பாவித்தல்

பிறரது உணர்வுகளையும் மதித்து அவற்றுக்குச் செவிசாய்த்தல்

தனது நலனை மறந்து பிறர் நலனையே கருத்தில் கொள்ளுதல்

ச ந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் தன் பிரதிக்ஞைகளை மாற்றிக்கொள்ளாதிருத்தல்

தனது செயல்பாட்டை எதிராளியின் போக்கை அனுசரித்து மாற்றிக் கொள்ளாதிருத்தல்

எத்தகைய பழிவரினும் அதற்காக நிதானமிழந்து குமுறாமல் அமைதி காத்தல்

பிறர் நலனுக்காக எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பாராமல் எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருத்தல்

முக்கியமாக இந்த எட்டு குணாமசங்களும் வெளிப்படுமாறு ஓர் ஆத்மா நடந்துகொள்ளும்போது, ஆகா, இதோ ஒரு ம ?ாத்மா என்று குதூகலிக்கிறோம், வியந்து போற்றுகிறோம், தாள் பணிந்து வணங்குகிறோம்.

இப்போது நம் காலத்தில் ம ?ாத்மாவாக அறியப்பட்ட காந்திஜியைப் பற்றி எந்தக் கோணத்தில் அவர் ம ?ாத்மாவாக அறியப்படுகிறார் எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம். நம்முடைய அணுகுமுறை ”அவர் சொன்னார், இவர் சொன்னார் ம ?ாத்மா என்பதாக அதனால் நாமும் சொல்வோம் ம ?ாத்மா என்று” என இருக்காது. அதே சமயம் ”அவர் ஏன் ம ?ாத்மா என்று சொல்லவில்லை ? இவர் ஏன் ம ?ாத்மா என்று சொல்ல

வில்லை ? ஆகவே நாமும் சொல்ல மாட்டோம்ம் ம ?ாத்மா என்று” எனவும் நமது அணுகுமுறை இருக்காது!

ஒரு குஜராத்தி நிறுவனமான அப்துல்லா அன் கம்பெனிக்குத் தென் ஆப்பிரிக்காவில் நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் ஒத்தாசை செய்வதற்காக, அதன் மூலமாகத் தமது வழக்கறிஞர் தொழில் ஸ்திரப்படும் என்கிற கனவுடன் 24 வயது இளைஞராகத் தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலேறியவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற இளம் பாரிஸ்டர். காரணம், மும்பையிலும் பின்னர் ராஜ்கோட்டிலும் அவர் பாரிஸ்டர் என்று பலகை மாட்டிக்கொண்டு தொடங்கிய வக்கீல் தொழில் தலையெடுக்கவில்லை. மும்பையில் முதல் வழக்கில் ஆஜராகி அவர் வாய் திறந்தபோது வார்த்தையே வரவில்லை!

தென் ஆப்பிரிக்காவில் நடக்கிற எங்கள் வழக்கில் உதவி செய்யச் சம்மதமா என்று அப்துல்லா கம்பனி கேட்கவும் வேளை வந்துவிட்டது என உடனே புறப்பட்டுவிட்டார், மோ ?ன்தாஸ்.

1869ல் பிறந்த அவர், முதன் முதலில் பாரிஸ்டராகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றது 1893ல். நினைவில் வையுங்கள், அதாவது 24 வயது இளைஞராக! தொடக்கத்தில் அவரது நோக்கம் ஐரோப்பிய உடையும் வழக்கறிஞருக்குரிய அடையாளங்களுமாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தாம் மனிதரை மாற்றி அமைக்கின்றன அல்லவா ? காந்தியையும் அவை மாற்றலாயின.

தென் ஆப்பிரிக்காவில் காந்தி இருந்த இடம் பாரத முகமதிய வியாபாரிகள் கூடுதலாக இருந்த இடம். அவர்களோடுதான் அவருக்குச் சகவாசம் அதிகமிருந்தது.

அங்கு வியாபாரம், தொழில், கூலிவேலை முதலான காரணங்களுக்காகக் குடியேறிய பாரத வம்சாவழியினர், பிரிட்டிஷ் காலனிய மக்களே என்ற போதிலும் சட்டப் பூர்வமாகவே இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவது கண்டு அதிர்ச்சியடைகிறார், அவர்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரைப் பொருத்தவரை பாரத தேசத்தவர் எவராயினும் “கூலி” தான். கூலி டாக்டர், கூலி என்ஜினீர், கூலி வக்கீல் என்றுதான் அடைமொழி கொடுத்து அடையாளப்படுத்துவார்கள். காந்திஜி கூலி பாரிஸ்டர்!

தென் ஆப்பிரிக்க மண்ணின் மைந்தர்களான கறுப்பர்கள் பாரதியர்களைக் காட்டிலும் மோசமாக, மிருகங்களைப் போல நடத்தப்படுவது காந்திஜிக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. கறுப்பர் விடுதலைக்கு கறுப்பர் இனத்தவரிலிருந்தே ஒருவர் வருவதுதான் முறை என அவர் கருதியிருக்கக் கூடும்.

பாரதத்தில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியர்களை அப்படியொன்றும் பிரிட்டிஷாருக்குச் சமமாக நடத்தவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்காவில் கடைப்பிடித்தது போன்ற நிறவெறிக் கொள்கயை நடைமுறைப் படுத்தவில்லை. தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் காலனியின் பிரஜைகளுக்குரிய உரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடும் மன உறுதியை அனுபவம் காந்திஜிக்கு உருவாக்கித் தந்தது. தென் ஆப்பிரிக்காவில் அவரது நூதனப் போராட்டத்திற்குக் கிடைத்த கவனிப்பு பாரதத்தில் அலை அலையாக வந்து கரை சேர்ந்து, பெரும் பிரமிப்பைத் தோற்றுவித்துவிட்டது.

இடையில் இருமுறை காந்திஜி பாரதம் திரும்பிய போதிலும், 1914ல்தான் நிரந்தரமாக பாரதத்தில் தங்கிவிடும் உத்தேசத்துடன் திரும்பி வந்தார்.

தென் ஆப்பிரிக்க அனுபவத்துடன் 44 வயது நடுப்பிராய இளைஞராகத் தாயகம் திரும்பியவர், இனி அரசியல்தான் தமது துறை என்கிற நிச்சயத்துடன்தான் கரையிறங்கினார். மிதவாதியான கோகலேதான் அவர் கண்ளுக்கு குருவாகத் தெரிந்தார். அவரது தென் ஆப்பிரிக்க சாதனை பாரதத்தில் முன்கூட்டியே அவருக்குப் பெரும் பிராபல்யத்தை உருவாக்கிவிட்டிருந்தது. பாரதத்தில் அவர் முதலில் ஈடுபட்ட போராட்டம் விவசாயிகளுக்கானதும் பின்னர் தொழிலாளர்களுக்கானதும்தான். அதற்கப்புறந்தான் நேரடி அரசியலுக்கு வருகிறார், காந்திஜி.

மாநாடு கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றும் சபையாக இருந்த காங்கிரசைத் தெருவில் இறங்கிப் போராடும் இயக்கமாக மாற்றியமைத்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

அவரது திட்டமிட்ட செயல்முறைகளால் 1920க்குள் காங்கிரஸ் பேரியக்கமே அவர் கைக்கு வந்துவிட்டது. அப்போது அவர் வயது 51. இந்த 51 வயதிற்குள் வங்கக் கவி ரவீந்திரரால் அவர் ம ?ாத்மா என்று அழைக்கப்பட்டுவிட்டார். தமிழ்க் கவி பாரதியும் அவரை வாழ்க நீ எம்மான் என வாழ்த்தி, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி ம ?ாத்மா என அங்கீகாரம் அளித்துவிட்டுத்தான் மறைந்தார்.

தமது வளர்ப்புச் சூழலுக்கு ஏற்ப, வாழையடி வாழையாகவரும் பல ஒழுக்கவிதிகளுக்குக் கட்டுப்பட்டவராகவே காந்திஜி அரசியலில் இறங்கினார். உதரணமாக, மது அருந்துதல் உடல் நலனுக்கு உகந்தது அல்ல என்பதைவிடவும் அது ஒரு பாவம் என்பதாகச் சிந்திப்பவராகவே அவரால் இருக்க முடிந்தது. புலால் உண்ணுதல், ஏன் புகை பிடித்தலுங்கூட அவரது வளர்ப்புச் சூழலில் பாவங்களே!

உண்மையில் குறைந்த பட்ச ?ிம்சைதான் உண்டே தவிர அ ?ிம்சை என்பதாக ஒன்று இல்லை. சகல ஜீவராசிகளின் உயிரியக்கமே ?ிம்சையின் அடிப்படையில் நிகழுமாறுதான் இயற்கை விதித்துள்ளது.

வலியுண்டாக்கப்பட்டுள்ளது எனும் செய்தியை மூளைக்குத் தந்தியடிக்கும் நுண்நரம்பு முடிச்சுகளோ, அந்தச் செய்தியை ஏற்று வலியை உனரச் செய்யும் மூளையோ தாவர வர்க்கத்திற்கு இல்லையெனினும் அவையும் தாக்கப்படுகையில் ஒருவகை அதிர்ச்சிச் சலனத்திற்கு ஆட்பட்டு பாதிக்கப் படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் உயிர் தரித்தல் எனும் நியதி ?ிம்சையை அத்தியாவசியமாக்கிவிடுகிறது. ஆக, கூடுமானவரை குறைவான ?ிம்சையின் மூலமாக உயிர்தரித்திருக்கும் நியதியை மேற்கொள்ளுமாறு நமது சாத்திரங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. நமது முற்காலத் துறவியர் செடிகளிலிருந்தும், மரங்களிலிருந்தும் இற்று விழும் காய் கனி, இலைகளையும், உலர்ந்துவிட்ட செடியின் கிழங்குகளையும் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது ?ிம்சையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பதால்தான். அவ்வாறு இன்றி, செடியிலிருந்தோ, மரத்திலிருந்தோ எதையேனும் பறிக்க நேர்ந்தால், எனது உயிர்தரித்திருத்தலுக்கான அவசியம் காரணமாக உன்னைத் துன்புறுத்த வேண்டியுள்ளது; எனக்கு வேறு வழியில்லை. ஆகவே தயவு செய்து என்னை மன்னிப்பாயாக என்று மானசீகமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரவேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.

என் பாட்டி வாழை இலையில்தான் உணவு கொள்வது வழக்கம். அவரே கொல்லைப்புறம் சென்று மரத்திலிருந்து இலை அறுத்து வருவார். அப்படி அறுக்குமுன் மரத்திடம் மன்னிப்புக் கோருவார். மிகவும் மென்மையாக இலையைப் பற்றி, பதமாக அறுப்பார். இதுதான் நமது கலாசாரம்!

புலால் உணவு உடல் நலனுக்கு ஊறு விளைவிப்பது, உணவுக்காக வலிமிக்க உயிர்க்கொலை செய்தல் மனிதாபிமானம் அல்ல; அது விலங்குகளுக்கே உகந்தது என உணர்தல் வேறு, பாவம் என ஆசாரத்துடன் அதனை ஒதுக்குதல் வேறு மனோபாவம்தானே!

காந்திஜி கண்டுபிடித்துப் பயன்படுத்திய அ ?ிம்சைக் கொள்கையானது தனது கோரிக்கையின் நிறைவேறலுக்காகப் பிறரை ?ிம்சிக்காமல் தன்னைத் தானே ?ிம்சித்துக் கொள்ளுதல், அல்லது தான் ?ிம்சிக்கப்பட அனுமதித்தல். ஆக, எப்படியும் அங்கு ஏதோ ஒருவகையில் ?ிம்சையின் பிரசன்னம் உண்டுதான். மேலும், ஒருவர் தனது கோரிக்கைக்காகப் பிறர் காணத் தன்னைத் தானே ?ிம்சைக்கு ஆட்படுத்திகொள்வதும் சகிக்க முடியாத கொடுமையே அல்லவா ? நம் வீட்டில் பெரியவர் ஒருவரோ, குழந்தைகளோ ஏதேனும் கோபத்தில் சாப்பிட மறுத்து முடங்கிக் கிடந்தால் நம் மனதில் ஏற்படும் சலனம் சகிக்கவியலாத ?ிம்சைதானே ? சொல்லப்போனால் உடலுக்கான ?ிம்சையைவிட உள்ளத்திற்கான ?ிம்சை அதிகக் கொடூரம் அல்லவா ?

ஆகையால் கா ந்திஜியின் அ ?ிம்சைக் கோட்பாடு வாஸ்தவத்தில் அதி ?ிம்சையே அல்லவா ?

முகமதியர் நடத்திய கலவரத்திற்கு ?ிந்துக்கள் பதிலடி கொடுக்கக் கூடாது என்பதற்காக காந்திஜி நவகாளியில் உண்ணாவிரதமிருந்தபோது, வயதான பெரியவர் பட்டினி கிடப்பதைக் காணச் சகியாமலும், அந்த ?ிம்சை தாங்காமலும் ?ிந்துக்கள் பதில் தாக்குதல் நடத்த மாட்டோம் என வாக்களித்தனர். பாலியல் வன்முறைக்கு ஆளான ?ிந்து கன்னியரை ?ிந்து இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும், கலவரத்தில் குழந்தைகளை இழந்த ?ிந்துக்கள் முகமதிய அனாதைக் குழந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்து தத்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாங்கூட அப்பொழுது வலியுறுத்தினார், காந்திஜி!

சரி, சரி, முதலில் நீங்கள் ஆகாரம் செய்யத் தொடங்குங்கள், இப்படிப் படுத்துக் கிடப்பது கண்ணறாவியாக இருக்கிறது; வீட்டில் எங்களுக்குச் சோறு இறங்க மாட்டேன் என்கிறது என்றார்கள், ?ிந்துக்கள்.

ரிச்சர்டு ஆட்டன்பரோவின் காந்தி ஞாபகம் இருக்கிறது அல்லவா, பரம ஏழையாக வரும் ஓம் பூரி இரண்டு காய்ந்த சப்பாத்திகளைப் படுத்திருக்கும் கா ந்திஜி யின் வயிற்றில் எறிவார். சாப்பிடுங்கள், இதனை, என் பச்சிளங் குழந்தையைப் பாவிகள் கொன்று போட்டார்கள், அதனால் பரவாயில்லை, நீங்கள் சாப்பிடுங்கள், என்பார். இறந்து போன உன் குழந்தைக்கு ஈடு செய்ய ஒரு முகமதிய அனாதைக் குழந்தையை தத்து எடுத்து அதனை ஒரு முகமதியனாகவே வளர்ப்பாயாக என்று ஓம் பூரிக்கு அறிவுரை கூறுவார், காந்திஜி. இப்படித்தான் நடந்தது நவகாளியில்! இம்மாதிரியான அறிவுரையை அவர் ?ிந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தார்.

சிறுபான்மையினர் உள்ளிட்ட பாரத நாட்டவர் அனைவருக்குமே தாம் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன்பொருட்டு முகமதியரும் தம்மைத் தலைவராக ஏற்கச் செய்யவேண்டும் என விழைந்ததால் எப்போதும் ஒருதலைப் பட்சமாக முகமதியருக்குச் சாதகமாகவே நடந்துகொள்பவராகத்தான் அவர் இருந்திருகிறார். இவ்வளவுக்கும், அவரே பொதுவாக ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும் ?ிந்து கோழையாகவும் இருப்பதாகத் தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவிலும் முகமதியருக்குச் சாதகமாகத்தான் பேசியிருக்கிறார் என்பதுதான் இதில் விசித்திரம்!

இது பற்றி காந்திஜியின் பதிவை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

“There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quarrels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharanpur the Mussalmans looted houses, broke open safes and, in one case, a Hindu woman’s modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice.”

“Hindu-Muslim Tension: Its Cause and Cure”, Young India, 29/5/1924;
Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.

தமிழில் இதை அப்படியே மொழிபெயர்ப்பதானால்:

(முகமதியர்களுக்கும் ?ிந்துக்களுக்குமிடையிலான) பெரும்பாலான சண்டை சச்சரவுகளில்

?ிந்துக்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்லிவைத்தாற்போல் ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும், ஒரு ?ிந்து கோழையாகவுமே இருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவப்பூர்வமாகவே அறிந்துள்ளேன். அது ரயிலானாலும் சரி, பொதுவான சாலையானாலும் சரி, நான் தீர்த்துவைக்கும் சண்டை சச்சரவானாலும் சரி, நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஒரு ?ிந்து தனது கோழைத்தனத்திற்காக முகமதியனை ஏன் குறைகூறவேண்டும் ? எங்கு கோழைகள் இருக்கிறார்களோ அங்கு அடாவடிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். ச ?ாரன்பூரில் முகமதியர் ( ?ிந்துக்களின்)வீடுகளைச் சூறையாடியதாகவும், பெட்டகங்களை உடைத்ததாகவும், ஒரு இடத்தில் ஒரு ?ிந்துப் பெண்மணி மானபங்கம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது யாருடைய தவறு ? தங்களுடைய அத்துமீறிய நடத்தைக்கு முகமதியர்களால் சமாதானம் சொல்ல இயலாது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ?ிந்து என்கிற முறையில், முகமதியரின் அடாவடிச் செயலுக்காக அவர்கள் மீது ஆத்திரம் வருவதைவிட ?ிந்துக்களின் கோழைத்தனத்தைக் கண்டு எனக்கு வெட்கம்தான் வருகிறது. பறிகொடுத்த ( ?ிந்துக்களான)வீட்டுச்சொந்தக்காரர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரிழக்காதது ஏன் ? தங்கள் சகோதரி மானபங்கம் செய்யப்பட்ட சமயத்தில் அவளுடைய உறவினர்கள் எங்கு போயிருந்தார்கள் ? அவர்களுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா ? என்னுடைய அ ?ிம்சைக் கொள்கை ஆபத்துக் காலத்தில் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய அன்பிற்குரியோரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப் போவது அல்ல. வன்முறையா, கோழைத்தனமாக ஓடிப் போதலா, இரண்டில் எதைத் தேர்வது என்கிற கேள்வி எழுமானால் கோழைத்தனத்தைக் காட்டிலும் வன்முறையினையே நான் தேர்ந்தெடுப்பேன்.

( ?ிந்து முஸ்லிம் மோதல்: காரணமும் பரிகாரமும். யங் இன்டியா, 29/5/1924 மறுபிரசுரம்: எம். கே. காந்தி ?ிந்து முஸ்லிம் ஒற்றுமை, பக்கங்கள் 35 36)

காந்திஜி இப்படிச் சொல்லியிருக்கிறாரே தவிர, இருதரப்பாரிடையே மோதல் வரும்போது, ?ிந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதை ஒருபோதும் அவர் ஆதரித்ததே இல்லை! அடிவாங்கினாலும் ?ிந்துக்கள் மீது குற்றச்சாட்டு, திருப்பி அடிகொடுக்க முனைந்தாலும் ?ிந்துக்கள் மீதே பழி என்பதாகத்தான் அவரது போக்கு இருந்தது.

சில தாய்மார்கள் உண்டே, தங்களுடைய சிறு பையன் பக்கத்து வீட்டுப் பெரிய பையன் அடித்துவிட்டதாக அழுதுகொண்டு வந்தால், அவன் போக்கிரி என்பது தெரிந்த விஷயந்தானே, நீ ஏன் அவனிடம் போனாய் என்று கேட்டுச் சிறு பையன் முதுகில் தானும் மொத்துவார்களே, அது மாதிரி!

கலவரத்தைத் தொடங்கும் முகமதியர்கள் ?ிந்துக்கள் அயர் ந்துள்ள சமயம் எதிர்பாராத விதமாகத் தாக்குதலை நடத்துவார்களேயன்றி முன்னறிவிப்புச் செய்துவிட்டா வருவார்கள் ?

என்னுடைய நாற்பதாண்டுகளுக்கும் மேலான பத்திரிகைத் துறை அனுபவத்தில் கல்கத்தாவிலும், தில்லியிலும், கர்நாடகத்திலும் பல தடவைகள் ?ிந்து முகமதியர் கலவரத்தைப் பார்த்திருக்கிறேன். திடாரென்றுதான் அவை வெடிக்கும்.

ஆக, முன்னெச்சரிக்கையின்றித் தாக்குதலுக்குள்ளாகும் ?ிந்துக்கள் தக்க முன்னேற்பாடின்றிப் போராடிச் சாகவேண்டும் என்பதாகத்தான் காந்திஜியின் அறிவுரையாக இருந்தது. ஏனெனில் ?ிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்க முற்படுவதை அவர் ஆதரிக்காதது மட்டுமல்ல, கடுமையாகக் கண்டிக்கவும் தவறியதில்லை!

காந்திஜியின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கையில் அவர் ஈகோ எனும் தான் என்ற அகந்தை வெளிப்படுமாறு செயலாற்றுபவராகவே தென்படுகிறார். கணவன் என்கிற அதிகாரத்தை மனைவியிடமும், தகப்பன் என்கிற மேலாதிக்கத்தைக் குழந்தைகளிடமும்

செலுத்தும் குடும்பத் தலைவனாகவே அவர் இருந்துள்ளார். மனைவியின் உணர்வுகளை மதிப்பவராகவோ, குழந்தைகளின் நலன் குறித்துக் கவலைப் படுபவராகவோ அவர் இல்லை. அன்னிய தேசத்தில் நட்ட நடு நிசியில் இளம் மனைவியை வெளியே துரத்தி, வீட்டுக் கதவைச் சாத்தி நிர்க்கதியாய் நின்ற அவளைப் பணியவைத்திருக்கிறார்!

மனைவி கஸ்துரி பா மரணப் படுக்கையில் இருந்தபோதுகூடத் தமது பிடிவாதத்தை அவரால் தளர்த்த்திக் கொள்ள இயலவில்லை. கணவன் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, டாக்டர்களின் ஆலோசனையை ஏற்காமல், மத நம்பிக்கையினைக் காரணங் காட்டி, மனைவியைச் சாகக் கொடுத்தவர் அவர்.

பால் அருந்துவதைக் கைவிட்டிருந்த காந்திஜி, ஒருமுறை சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவரைச் சந்தித்தபோது, பால் கோமாதாவின் ரத்தம் என்பதால் தாம் அதைப் பருகுவதில்லை என்றார்.

அப்படிப் பார்த்தால் நாமனைவருமே நம் மாதாவின் ரத்தத்தைக் குடித்தவர்கள்தான் என்று உடனே பதிலிறுத்து காந்திஜியைத் திகைக்கவைத்தார், ராதாகிருஷ்ணன். மாட்டின் ரத்தம் பருகாவிடினும் மனித ரத்தம் பருகியிருக்கிறோமே என்று மேலும் வெறுப்பேற்றினார், ராதாகிருஷ்ணன்!

பிற்காலத்தில் காந்திஜியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டபோது, டாக்டர்கள் அவர் பால் அருந்தி உடம்பைத் தேற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். முடியாது என்று மறுத்த காந்திஜி, அதற்கான காரணமாகத் தமது முந்தைய சங்கற்பத்தைக் கூறினார். பசும் பாலைத் தானே அருந்துவதில்லை என சபதம் செய்திருக்கிறீர்கள், ஆட்டுப்பாலை அருந்தலாமே என்றனர் டாக்டர்கள். சரிதான் என்று ஒப்புக்கொண்டார், காந்திஜி. இதுதான் அவர் ஆட்டுப்பால் பருகத் தொடங்கிய கதை!

நடு வயதினராக இருக்கையிலேயே இனி உடலுறவு கொள்வதில்லை என காந்திஜி தம்மிச்சையாகவே முடிவெடுத்திருக்கிறார். வயது முதிர்ந்த காலத்தில் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தம்மால் அதனைத் தவிர்க்கவும் சலனப்படாமல் இருக்கவும் முடிகிறதா என்று சோதிதித்துப் பார்க்க இளம் வயதுப் பெண் களைப் பரிசோதனைக் கூட கினி பன்றிகளைப் போலப் பயன்படுத்தியிருக்கிறார்! அந்தப் பெண்களின் மன உணர்வுகள் எப்படியிருக்கும் என்று அவர் கவலைப்படவேயில்லை! அவருடைய சத்திய சோதனை பல ஆண்டுகளுக்கு முன்னதாகப் பாதியிலேயே நின்றுபோனதால் இது பற்றிய பதிவு அவரிடமிருந்து இல்லை. ஆனால் அவரது காரியதரிசியாக இருந்த பியாரேலாலின் தங்கை சுசீலா நய்யார் ஒரு கெட்ட கனவாகவே அந்த அனுபவத்தை மறக்க விரும்புகிறேன் எனப் பதிவு செய்துள்ளார்!

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும் அவர் தனது முடிவே சரியென்று அதனைப் பிறர் மீது வலிந்து திணிப்பவராகவும் மகா பிடிவாதக்காரராகவும்தான் இருந்திருக்கிறார். தொடங்கிய இயக்கத்தை சக உறுப்பினர்களைக் கலந்தாலோசியாமல் தம்மிச்சையாகப் பாதியில் நிறுத்துவதும், தமது கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத ஆயுதத்தைக் கையிலெடுப்பதுமாக இருந்துள்ளார். பிறரின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்ததாகத் தெரியவில்லை.

மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் முன்னேற்பாடுகளோடும்தான் அவர் உண்ணாவிரத ஆயுதத்தைப் பிரயோகித்துள்ளாம்ர். உடல் நிலையைச் சரிபார்த்துக்கொண்டும், குடலை முற்றிலுமாகச் சுத்தம் செய்துகொள்ளாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் எனிமா எடுத்துக் கொண்டும் உண்ணாவிரதம் தொடங்கும் அவர், யாரிடம் அது செல்லுபடியாகுமோ அவர்களிடம்தான் அந்த ஆயுதத்தைப் பிரயோகிப்பார். குறிப்பாக முகமதியரிடம் அதனைப் பயன்படுத்தியதேயில்லை!

உண்ணாவிரதத்தின்போது எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்த நீரை அவர் அவ்வப்போது பருகுவது வழக்கம். எதுவுமே அருந்தாமல் இருப்பதுதான் உண்மையான உண்ணாவிரதம் எனத் தமது மனசாட்சியின் காவலர் என்று காந்திஜியாலேயே அங்கீகாரம் பெற்ற ராஜாஜி அதனை விமர்சித்ததுண்டு!

அடுத்து, இலக்கியம், நுண் கலைகள் ஆகியவற்றில் காந்திஜிக்குப் பரிச்சயமோ ஈடுபாடோ இல்லை என்பதைவிடவும், அவைபற்றித் தவறான அனுமானங்கள்தாம் அவருக்கு இருந்தன என்றே கூறவேண்டும். தமக்கு ஒரே ஒருநாள் ஆட்சியதிகாரம் கிடைத்தால் தமது முதல் ஆணை கஜுராே ?ா சிற்பங்களை உடைத்து நொறுக்கி அப்புறப்படுத்துவதாகத்தான் இருக்கும் என்று சொன்னவர் அவர்! நல்ல வேளையாக அவர் கையில் அம்மாதிரி ஒருநாள் அதிகாரம் கிடக்காது போயிற்று. மிக நல்ல வேளை, 1947 ஆகஸ்ட் பதினைந்துக்குப்பின் அவர் கவனம் கஜுராே ?ா மீது செல்லாதவாறு வேறு விஷயங்கள் அவர் நேரத்தை எடுத்துக்

கொண்டு விட்டன. இல்லாவிட்டால், மகா பிடிவாதக்காரரான அவர், பாகிஸ்தானுக்கு ஐம்பத்தைந்து கோடி ரூபாயைக் கொடுத்தே தீரவேண்டும், ஜின்னா அந்தத் தொகையை ராணுவ தளவாடங்கள் வாங்கச் செலவிட்டு, கூடுதல் பலத்துடன் பாரதத்தைத் தாக்க முன் வந்தாலும் பாதகமில்லை என உண்ணாவிரதம் இருந்தார் அல்லவா, அதுபோல் கஜுராே ?ா சிற்பங்களை உடைத்தெறிய நேருவும் பட்டேலும் உத்தரவிட்டே தீர வேண்டும் என உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியிருக்கக் கூடும்!

பாரதத்திற்கு விடுதலை என்பதைவிட பாரத நாட்டவருக்கு பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் சுயாட்சி அதிகாரம் என்பதில்தான் கவனம் கொண்டிருந்த பாரத தேசத்துப் பெரிய மனிதர்கள் காங்கிரஸ் மகாசபையின் பெயரால் அரசியல் செய்துகொண்டிருந்த தருணத்தில் பாரதம் திரும்பிய மோகன்தாஸ், அவர்கள் மேற்கத்திய சிந்தனைத் தடத்தில் நடப்பவர்களாகவும், மேற்கத்திய கலாசாரத்தில் திளைப்பவர்களாகவும் இருக்கக் கண்டார். சுயாட்சி உணர்வு தமக்கு வந்ததே பிரிட்டிஷ் சிந்தனா உலகப் பரிச்சயம் காரணமாகத்தான் என நம்புபவர்களாகவும் அவர்கள் இருக்கக் கண்டார், அவர். பாரத தேசத்து மக்கள் எனப்படுவோரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள் அவர்கள் என்பதைப் புரிந்து கொண்டார். தாம் மேற்கொள்ள வேண்டிய வழியை அறியும் பொருட்டுகோபால கிருஷ்ண கோகலேயை நாடிய அவர், கோகலேயின் வழிகாட்டுதலுக்கு இணங்க, பாரத தரிசனத்தை மேற்கொண்டார்.

விடுதலைப் போரட்டக் களத்தில் காந்திஜியின் பங்களிப்பை எவ்வாறு குறைத்து மதிப்பிட முடியும் ? பாரதத்தின் மிகப் பெரும்பாலான மக்கள் தெய்வ பக்தியும் சமயப் பற்றும் மிக்கவர்களாக இருக்கக் கண்ட காந்திஜி, மக்களின் ஆதரவைப் பெற, அரசியலில் மதத்தைக் கலந்தார். அவரது பிரார்த்தனைக் கூட்டங்களே சமூக அரசியல் கருத்து விளக்கக் கூட்டங்களாகத்தான் இருந்தன. முதலில் பிரார்த்தனை, அதன்பின் அரசியல் விளக்கம்!

லட்சோப லட்சம் மக்கள், படித்தவர், பாமரர் எனும் பேதமின்றி அவருடைய பக்தர்களாக மாறக் காரணமாக இருந்தது அவருடைய இந்த அணுகுமுறைதான். அவரது அழைப்புக்கு இணங்க மக்கள் தம் தொழிலையும், உத்தியோகத்தையும், படிப்பையும் பாதியில் விட்டுவிட்டுக் கண்மூடித்தனமாகத் தெருவில் இறங்கி அவர் பின்னால் போனார்கள். இது ஓர் உலக அதிசயம் என்பதில் சந்தேகமில்லை!

என் தகப்பனாருங்கூட நல்லவேளையாகத் தமது உயர் கல்வியை அப்போது

முடித்துக்கொண்டுவிட்டிருந்தார் எனினும், அதிக வருமானம் தரக் கூடிய பல அரிய வாய்ப்புகளை உதறி எறிந்தார். கணிதத்தில் பட்டமேற்படிப்புப் படித்து, சென்னை ராஜதானியிலேயே முதலிடம் பெற்றுத் தேறிய அவருக்கு மத்திய அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில் ஓர் உயர்பதவி காத்திருந்தது. எனினும் அதனை ஏற்காமல்

காந்திஜியின் குரலுக்கு செவிசாய்க்கலானார். அதன் பயனாக வெகு விரைவிலேயே தரித்திரம் எங்களைத் தேடிவந்தது! அவரது அரசியல் ஈடுபாடு அவரை எங்கும் நிலைகொள்ளவிடாமல் அலைக்கழித்தது! முன்னோர் சேர்த்துவைத்த பெருஞ்செல்வம் அதன் காரணமாகவே சிறுகச் சிறுக அழிந்தொழிந்தது!

காந்திஜி தாம் ஒரு தலை சிறந்த அரசியல் வியூகி என்பதை வெகு விரைவிலேயே நிரூபணம் செய்தவராவார். ஒரு சில ஆண்டுகளில் ஒரு மாபெரும் ஜன சமூகத்தையே தனக்கு அடிபணியவைத்துக் கொள்வது என்ன சாமானியமான சாதனையா ? சந்தேகமின்றி அவர் திறமைமிக்க அரசியல் வியூகிதான் (ணீணிடூடிtடிஞிச்டூ ண்tணூச்t ?ஞ்டிண்t). ஆனால் அந்த மகத்தான மக்கள் சக்தி தம் பக்கம் இருந்தபோதிலும் அவர் சாதித்தது என்ன ? பாரதப் பிரிவினையை அவரறீதூ தடுக்க இயலவில்லையே! அந்த மக்கள் சக்தியைத் திரட்டி பிரிவினைக்கு எதிரான கிளர்ச்சியை நடத்த அவர் முன்வரவில்லையே!

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன், தனித்துச் செல்வேன் என்று சொன்னவராயிற்றே அவர், பிரிவினையை ஆதரித்தவரும் அல்லவே, ஏன் வாளாவிருந்துவிட்டார் ?

காந்திஜியால்தான் பாரதம் சுதந்திரம் பெற்றது என்று பாமரத்தனமாக எண்ணக் கூடாது. பாரத விடுதலைக்கு அவரும் ஒரு முக்கிய காரணி என்பதே சரியான மதிப்பீடாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது இந்திய ராணுவ வீரர் பலர் சுபாஷ் பாபுவின் பக்கம்

சேர் ந்துகொண்டதும், மும்பையில் கப்பற் படையினர் அரசுக்கு எதிராகக் குமுறியெழுந்ததும் ஆங்கிலேய ஆட்சியை அதிர்ச்சியடையச் செய்திருந்தன. போரின் பின் விளைவுகள் இங்கிலாந்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதல பாதாளத்திற்கு இறக்கிவிட்டிருந்தன. பாரத மக்களிடையே அது கட்டுப்பாடு மிக்க ராணுவமாக இருந்தாலும் சரி, வேறு எந்தத் துறையாக இருப்பினும் சரி, இனி விசுவாசத்தை எதிர்பார்க்க இயலாது என்பதை பிரிட்டிஷ் அரசு புரிந்துகொண்டுவிட்டிருந்தது. இந்நிலையில் பாரதத்தைக் கட்டி ஆளத் தன்னால் இயலாது எனவும் உணர்ந்துகொண்டது. இவையெல்லாம் ஆங்கிலேய ஆட்சி அகன்றமைக்கு முக்கியமான காரணங்கள் என அறிந்திருப்பது அவசியம்.

மதத்தை அரசியலோடு கலக்கலாகாது என வாதித்த ஜின்னா, மூர்க்கத்தனமான மதவாதிகளிடமிருந்து விலகியே நின்ற ஜின்னா, ?ிந்துமுகமதியர் ஒற்றுமைக்குத் தலை சிறந்த அடையாளச் சின்னம் என சரோஜனி நாயுடுவே போற்றிய ஜின்னா, கடைந்தெடுத்த மதவாதியாக மாற அடிப்படைக் காரணமாக இருந்தது யார் என ஆராய்ந்தால், இறுதிக் கண்ணி காந்திஜியில்தான் போய் முடியும்.

தமது சவத்தின் மேலாகத்தான் பாரதத்தைக் கூறுபோட முடியும் எனச் சவால் விடுவதுபோல் கூறிய காந்திஜி, பிரிவினை வேண்டாம் எனப் பிரிவினை வேண்டிய முஸ்லிம் லீகை இணங்கச் செய்வதற்குத் தமது கைகண்ட உபாயமான உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அந்த ஆயுதம் ?ிந்துக்களைத்தான் அடிபணியச் செய்யும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்து, அவர்கள் மீதே அதனைப் பிரயோகித்தார்.

அம்பேத்கரைப் பணியவைக்கத் தமது உண்ணாவிரத அஸ்திரத்தைப் பயன் படுத்திய அவர், அதேபோல் ஜின்னாவைப் பணியவைக்க அதனைப் பயன் படுத்திப் பிரிவினையைத் தவிர்க்கத் துணியவில்லையே!

விடுதலைப் போராட்ட காலச் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால் காந்திஜி ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மற்ற எந்த அரசியல் தலைவரையும்போலத்தான் காணப்படுகிறார்.

அவரது காலத்தில் அவருக்குச் சரி சமமாக மக்கள் ஆதரவைப் பெற்றுப் பிரபலமடைந்தவர்கள் பகத் சிங்கும் சுபாஷ் பாபுவும். பகத் சிங்கை அவர் விரும்பியிரு ந்தால் தமது செல்வாக்கைப் பயன் படுத்தித் தூக்கு மேடையிலிருந்து இறக்கிவிட்டிருக்க முடியும். ஆனால் பகத் சிங் சுருக்குக் கயிற்றில் தொங்குவதைத் தவிர்க்க அவர் சிறு முயற்சியும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, பக்த் சிங் தூக்கிலிடப்பட்ட சூட்டோடு சூடாக நடந்த காங்கிரஸ் மகாசபைக்கு பகத் சிங்கின் தந்தையை வரவழைத்து, தம் மகனின் பாதை தவறு எனப் பேசவும் வைத்தார்.

(இதனைப் படிக்கையில் அண்ணாமலை நகரில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் வருகையையொட்டி நிகழ்ந்த சம்பவத்தில் இறந்துபோன உதயகுமாரின் தந்தையை அழைத்து, இறந்தது என் மகன் உதயகுமார் அல்ல என்று சொல்லவைத்த நிகழ்ச்சி எவருக்கேனும் நினைவு வருமானால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

பகத் சிங் குற்றம் சாட்டப்பட்ட லா ?ூர் சதி வழக்கில் வங்கத்தைச் சேர்ந்த ஜதீன் தாஸ் என்ற 25 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டு லா ?ூர் சிறையில் அடைக்கப் பட்டார்.

அரசியல் காரணங்களுக்காகச் சி றை வைக்கப்படுபவர்களைக் கிரிமினல் கைதிகளைப் போல் நடத்தாமல் அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக அந்த இளைஞர் தமது கோரிக்கை நிறைவேறும்வரை சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சிறையிலேயே உயிரையும் துறந்தார். தேசமே அந்த இளஞனுக்காகக் கண்ணீரும் கம்பலையுமாக நின்றது. பத்திரிகைகள் அரசுக்குக் கண்டனமும் ஜதீனுக்கு அஞ்சலியும் தெரிவித்தன. ஆனால் காந்திஜியோ, ஜதீன் மறைவு பற்றித் தமது யங் இன்டியாவில் ஒரு வரிகூட எழுதவில்லை. தமது பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாட்டையே உலுக்கிய அந்த உயிர்த் தியாகம் பற்றி ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. அப்படி ஓர் 25 வயது இளைஞன் அவரது சொந்த ஆயுதமான உண்ணாவிரதத்தை அனைத்து அரசியல் கைதிகளின் தன்மானத்திற்காகக் கையிலெடுத்து உயிர்த் தியாகமும் செய்ததை காந்திஜி ஏனோ கண்டுகொள்ளவேயில்லை!

இவ்வளவுக்கும் ஜதீன்தாஸ் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அதன் மாநாடுகளில் தொண்டர் படைத் தளபதியாகக் கூட இருந்தவர்தான். ஆகவே காந்திஜியின் மவுனம் கண்டு மனம் பொறாத சிலர் அவரது மவுனத்திற்குக் காரணம் கேட்டனர்.

ஜதீன்தாசின் மரணம் பற்றி நான் ஏதும் குறிப்பிடும் பட்சத்தில் அதைக் குறைவாகத்தான் மதிப்பிட்டிருப்பேன். அதனால்தான் அதுபற்றி எதுவும் சொல்லாமலேயே இருந்துவிட்டேன் என்று விளக்கமளித்தார், காந்திஜி!

சுபாஷ் பாபுவுக்கு காங்கிரசிலும் மக்கள் மத்தியிலும் ஆதரவு வளரக் கண்டு அவரைக் கட்சியில் செயல்படவிடாமல் முடக்கி, இறுதியில் அவர் கட்சியைவிட்டே வெளியேறவும் நெருக்கடி கொடுத்தார், காந்திஜி.

பகத் சிங்கும் சுபாஷ் பாபுவும் வன்முறையில் நம்பிக்கை வைத்ததால் தமது கொள்கைக்கு இணங்கவே காந்திஜி அவர்களை ஆதரிக்க மறுத்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றலாம். ஆனால் சிரத்தானந்தர் போன்ற போரளிகளைக் கொன்ற முகமதியரை அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் இறங்கியதால் அவர்களை மன்னித்துவிடவேண்டும் என்று அவர் சொன்னதுண்டு! மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் கண்டித்ததில்லை.

விரும்பியே சிறை சென்றபின் விடுதலையை எதிர்பார்ப்பதோ அதற்குத் தாம் ஒத்துழைக்க வேண்டும் என விரும்புவதோ சரியல்ல என்று சொன்ன காந்திஜி, ராஜத் துரோகக் குற்றத்தின்பேரில் சில்றையிலிடப்பட்டிருந்த அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டும் என நிபந்தனையே விதித்தவர்தான்.

கிலாபத் கிளர்ச்சியின்போது காந்திஜியின் ஒத்துழைப்பைப் பெற்ற அலி சகோதரர்கள்,

கா ந்திஜியின் உப்பு சத்தியாக்கிரகத்தையோ வேறு இயக்கங்களையோ ஆதரித்தவர்கள் அல்லர். என்னவானாலும் காந்திஜி ஒரு காபிர்; ஆகவே மிக மிக மோசமான முகமதியரும் முகமதியர் என்ற காரணத்திற்காகவே காந்திஜியைவிட மேலானவர் என்றும் கூறியவர்கள்தான் அவர்கள்!

வேல்ஸ் இளவரசர் வருகையின்போது கிளர்ச்சி எதுவும் செய்யாமல், அவரை வரவேற்பதில் காங்கிரஸ் ஒத்துழைத்தால் ஆட்சியதிகாரத்தில் சுதேசி அமைச்சர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அப்போதைய வைசிராய் ரீடிங் பிரபு கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லாத் தலைவர்களும் விரும்பினார்கள். ஆனால் காந்திஜியோ, அலி சகோதர்ரகளை விடுதலை செய்தால்தான் வேல்ஸ் இளவரசரை வரவேற்பதில் ஒத்துழைக்க முடியும் என்று கூறிவிட்டார்!

ராஜத் துரோகக் குற்றத்திற்காகச் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க இயலாது என்று கூறிவிட்டார், வைசிராய். அப்படியானால் ஒத்துழைக்கப் போவதில்லை என்றார், காந்திஜி.

பாரத தேசத்தவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கை நழுவிப்போனதாக அனைவரும் வருந்தினர்.

1947 ஆகஸ்ட் 15 க்குச் சிறிது முன்பும், அதன் பிறகும் காந்திஜியின் செயல்பாடுகள் அனைத்தும் பாரத நாட்டின் நலனுக்கும், பாரத மக்களின் நலனுக்கும் பாதகமாகவே இருந்தன. எனினும் அவர் தான் பாரத தேசத்தவரின் தேசத் தந்தையாக அறியப்படுகிறார்.

ம ?ாத்மா என்றும் போற்றப்படுகிறார். இதுவே பாரத தேசத்தவரின் தனிச் சிறப்புக்கு ஓர் அடையாளம் எனலாம்.

காந்திஜியின் எளிய வாழ்க்கை உலகப் பிரசித்தம். அவரது எளிமை கண்டே மக்கள் அவர் மீது தேவதா விசுவாசம் கொண்டிருந்தனர். ஆனால் அவருடைய தலைமையில் செயல் பட்டவரான சரோஜனி தேவியோ, எங்கள் காந்திஜியை எளிமையான ஏழையாக வைத்திருப்பதில் எங்களுக்கு ஏகப்பட்ட செலாவாகிறது என்று கூறியதுண்டு!

தொடக்கத்தில் ம ?ாத்மா என ஒருவரை அடையாளங் காண்பதற்கான அடிப்படைக் குணாம்சங்கள் எனச் சிலவற்றைப் பட்டியல் போட்டிருந்த பிரகாரம் காந்திஜியை மதிப்பீடு செய்யும் பொறுப்பைத் திண்ணையின் அறிவார்ந்த வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

காந்திஜி மிகச் சிறந்த சமூக வியலாளரும், பொருளாதர நிபுணருமாவார் என்பதே எனது கருத்து. பாரத தேசத்திற்கு மட்டுமின்றி, இயந்திரத் தொழிலில் முன்னேறாத ஆசிய நாடுகள் அனைத்துமே உய்யத்தக்க பொருளாதாரத் திட்டத்தை அவர் முன்மொழிந்தார்.

மேற்கத்திய உலகம் காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் தொழில்துறையில் ஏற்கனவே முன்னேறிச் சென்றுவிட்டது. கீழ்த் திசை உலகம் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. ஆகவே அது விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களுமான பாதிப்பு இல்லாத துறைகளில் ஈடுபட்டு, தம்மிடம் உள்ள ஏராளமான மனித வளத்தையும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பூமியின் சுற்றுப்பு றச் சூழல் காக்க உதவும். மேற்கும் கிழக்கும் தத்தம் வசமுள்ளவற்றைப் பண்டமாற்றம் செய்துகொண்டு இருதரப்பாருமே பூமியின் நலன்கெடாது வளங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வாங்கு வாழலாம் என்பதுதான் காந்திஜி சொன்ன பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டு, மேற்குடனான தொழில் போட்டியில் வெகு தூரம் வந்துவிட்டிருக்கிறோம். திரும்பிச் செல்வது சாத்தியமாவதோ, பயன் தருவதோ இனி சந்தேகந்தான்.

பொது வாழ்க்கையில், குறிப்பாகப் பொதுப் பணத்தைக் கையாள்வது போன்ற விவகாரங்களில் காந்திஜி மிகவும் கண்டிப்பானவராக இருந்திருக்கிறார். லஞ்ச ஊழலையும், பதவி துஷ்பிரயோகங்களையும் அவரால் சகித்துக் கொள்ளவே இயலாது. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் இது போன்ற விவகாரங்களில் காந்திஜியை ஆதர்ச புருஷராகக் கொள்ளவேண்டுமேயன்றி அவரை ம ?ாத்மாவாகப் பார்த்து பிரமித்துவிடலாகாது. அவ்வாறு பிரமித்து நின்றுவிட்டால் காலப் போக்கில் அதுவே அவர்கள் தமது சறுக்கல்களுக்கு ஒரு சமாதானம் சொல்லும் மனப் போக்கைத் தோற்றுவித்துவிடும். இனறைக்கு நடை முறையில் இதைத்தான் பார்க்கிறோம். அக்டோபர் இரண்டாம் தேதி காந்திஜியின் சிலையைத் தேடிச் சென்று ஒரு மாலையைப் போட்டு விட்டு வருவதும், ஜனவரி முப்பதன்று ரகுபதி ராகவ படுவதும் போதுமானது, மற்ற நேரங்களில் பதவி வேண்டித் தமக்குள் அடிதடி சண்டைகள் போட்டு, சட்டையைக் கிழித்துக்கொள்வதும், ரத்தக் காயப்படுத்திக் கொள்வதும்தான் சரி என்கிற மனப்பான்மை வ ந்துவிட்டிருக்கிறது.

ஆனாலும் மக்கள் சேவை செய்வதற்காக இவ்வளவு தூரமா சண்டை போட்டுக் கொள்வது ?

மக்கள் தொண்டாற்றுவதற்கான வாய்ப்பப் பெறும் போட்டியில் வேட்டி அவிழ்வதுகூடத் தெரிவதில்லையே!

காந்திஜியை வியாபாரமோ தொழிலோ செய்து பணம் சேர்த்த சீமானுக்கும் ரன் எடுத்துக் குவித்த விளையாட்டு வீரருக்கும் இணைவைப்பதும், அவர்களை ஆதர்சமாகக் கொள்வதுபோலத்தான் காந்திஜியையும் ஒருவரால் சுலபமாக ஆதர்சமாய்க் கொள்ளமுடியும் எனச் சர்வ சாதாரணமாக எடை போடுவதும் பாரத நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் அவரது அந்தஸ்திற்கு மரியாதை செய்வதாகாது. அதிலும் ம ?ாத்மா என அழைக்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்ட அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை இப்படியா அவமானப் படுத்துவது!

இனி, பரமாத்மாவை நமது சொற்ப அறிவால் அணுகக் கூடுமாவென யோசிக்கையில், அந்த விசாரம் எந்த அளவுக்குத் திண்ணையில் அமர்ந்து வார்த்தையாடுவதற்குப் பொருத்தமாயிருக்கும் எனத் தெரியவில்லை.

====

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்