ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue


உலகத்தின் ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்திருக்கிறார்கள்.

இந்த விவரம், இன்னும் சக்தி வாய்ந்த மருந்துகளை உற்பத்தி செய்யவும், சூப்பர் பூச்சிகள் எனப்படும் அதி தீவிர வியாதிக்கிருமிகளை அழிக்கவும், ஏன் கான்ஸர் போன்ற வியாதிகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படும் எனக்கூறுகிறார்கள்.

இந்த பாக்டாரியம் Streptomyces coelicolor எனப்படுவது. இது சாதாரண மண்ணில் காணப்படும் பாக்டாரியம்.

இந்த பாக்டாரியம், இயற்கையான ஆண்டிபயாடிக் உருவாக்கும் தொழிற்சாலை.

இந்த பாக்டாரியம், இதனைப் போன்ற மற்ற பாக்டாரியக் குடும்பங்களோடு இணைந்து உலகத்தில் உருவாக்கப்படும் இயற்கை ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு உருவாக்கித் தருகின்றன

இந்த பாக்டாரியத்தின் மரபணு தெரிவதால், பயோடெக் நிறுவனங்கள் புதிய மருந்துகளை உருவாக்குவது எளியதாகும் எனக்கருதுகின்றன.

ஒரு பூச்சி எப்படி ஆண்டிபயாடிக்கை உற்பத்தி செய்கிறது என்றும் இப்போது தெரியவந்துள்ளது.

ஒரு பூச்சியின் எண்பது லட்சம் மரபணுக் குழுமம் இருபது ஜீன் குழுக்களைச் சார்ந்தவை.

ஈகோலி ‘பூச்சி ‘ 4000 ஜீன்களைக் கொண்டது. யீஸ்ட் 6000 ஜீன்களைக் கொண்டது. பழத்தின் வண்டு 13,000 ஜீன்களைக் கொண்டது.மனித உயிருக்கு 30,00 ஜீன்கள் உள்ளன.

பிரிட்டன்ம் நார்விச்-சில் உள்ள ஜான் இன்ஸ் மையத்தில் இந்த ஆய்வினைத் தலைமைப் பொறுப்பில் நடத்திய டேவிட் ஹாப்வுட் சொல்கிறார் : ‘ எமக்கு இந்தச் சரட்டினால் உருவான நான்கு ஆண்டிபயாடிக்ஸ் தெரியும். ஆனால் இதனுடன் கூடவே 17 அல்லது 18 குழுக்களும் உருவாயின. மிகத் தனிப்பட்ட மண்வளம் தான் இவற்றை உருவாக்கியிருக்க முடியும். ‘

‘வழக்கமான பாக்டாரியாக்களை விட இருமடங்கு ஜீன்களைக் கொண்டவை இந்த பாக்டாரியாக்கள். தன் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு அளிக்கவல்லதாய், தயாராய் உள்ளது என்று சொல்லலாம். ‘

ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் தப்பித்து, அவற்றினால் பாதிக்கப் படாவண்ணம் வளர்ச்சி பெற்று – பல பாக்டாரியாக்கள் உருவாகியுள்ளன.

இப்படிப்பட்ட பாக்டாரியாக்களில் மிகத் தொந்தரவு செய்யும்படிப் பரவியுள்ளது ‘ஸ்டாஃபைலோகக்கஸ் ஆரியஸ் ‘ என்ற பாக்டாரியாவாகும். மருத்துவமனைகளில் காயங்களில் உருவாகிப் பரவியுள்ளது.

ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த பாக்டாரியத்தின் முழுமையான ஜீன் வரைபடத்தினை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ட்ரெப்டோமைசின் பற்றிய விவரம் ‘நேச்சர் ‘ என்ற விஞ்ஞான ஏட்டிலிருந்து.

Series Navigation

செய்தி

செய்தி