ராமலக்ஷ்மி
அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது.
இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை.
ஆனால்….
ஆனால் என்ன?
அன்றைக்கு ஒரு இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1980-ல் எழுதி ’84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த போது திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!
——————————————————————————–
மனிதா ஆசைப்படாதே!
காரு வாங்கப் போறேன்-நானு
காரு வாங்கப் போறேனய்யா!
பஸ்ஸைப் பிடிச்சு பதபதச்சு ஆபீஸ் போகப்
பிடிக்கலை யெனவே காரு வாங்கப் போறேனய்யா!
பத்து வருஷம் ஆனாலும்
பாங்காய் பணத்தைச் சேமிச்சு
புத்தம் புதிதாய்க் கார் வாங்கிப்
போகத்தான் போறேனய்யா!
நாலு வருஷம் ஓடிடுச்சு
சேமிப்பு நல்லா வளருது
காரை என்மனம் மறந்திடுத்து
‘சட்’டென ஏறும் விலை பார்த்து.
பைக்கு வாங்கப் போறேன்-நானு
பைக்கு வாங்கப் போறனய்யா!
பத்தாண்டும் கழியட்டும்-அதுக்கடுத்த
புத்தாண்டும் வருகட்டும்!
மேலும் ரெண்டு வருஷங்கள்-மழை
மேகம் போலே மறைஞ்சிடுச்சு!
பைக்கை மறந்து துடிச்ச மனம்
ஸ்கூட்டரை நினைச்சு ஏங்கிச்சு.
ஸ்கூட்டர் வாங்கப் போறேன்-நானு
ஸ்கூட்டர் வாங்கப் போறேனய்யா!
‘சர்’ரென விரைந்து சடுதியில் போகும்
ஸ்கூட்டர் வாங்கப் போறேனய்யா!
எட்டு வருஷம் ஆயிடுச்சு,
கட்டாய் பணமும் சேர்ந்திடுச்சு-ஆனா
ஸ்கூட்டர் வாங்கக் காணாதய்யா
மொபெட் வாங்கப் போறேனய்யா!
மொபெட் வாங்கப் போறேன்-நானு
மொபெட் வாங்கப் போறேனய்யா!
பத்து வருஷப் பணமும் போட்டு
மொபெட் வாங்கப் போறேனய்யா!
பத்து ஆண்டு கழிந்ததும்-என்
வீட்டு முன்னால் நின்றது
புத்தம் புதிதாய் மின்னியது
மொபெட் என்றா நினைக்கிறீர்?
பெட்ரோல் விலை ஏறிடுத்து
மொபெட் வாங்கினா கட்டுமா?
வீட்டு முன்னால் நின்றது… …
சைக்கிள்தானே தெரியுமா?
——————————————————————————–
இப்போது பாடலாமா:
“ஆசை ஆசை இப்பொழுது பேராசை… பெட்ரோல் போட்டு வண்டியில் போவதுதான்…”
***
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10
- தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !
- போலீஸ்காரன் மகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது
- வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?
- நான்கு கவிதைகள்
- எதைத்தேடி?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- வேதவனம் விருட்சம் 5
- வழியும் தெரியாத உன்னை
- ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..
- போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
- நடுநிசி
- நாளைய உலா
- புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்
- உள்ளிருந்து கேட்கும் குரல்!
- மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்
- சாகாத கருப்பு யானை
- TamFest 2008 – An Evening of Fun and Galatta
- ‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு
- பாரதி கலை மன்றம் பஹ்ரைன்
- மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
- புதுக்கவிதை அரங்கம்
- நினைவுகளின் தடத்தில் – (19)
- துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
- ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1
- உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
- ஒரு சோம்பேறியின் கடல்
- நிரந்தரம் இல்லா நின்மதியில்……
- குகைச் சித்திரங்களின் அவுலியா
- பிறர்தர வாரா
- தவிர்க்க முடியாதவைகளாய்…
- காதிலே கேட்ட இசை