அவளால்…!

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பனசை நடராஜன்


அணையா விளக்காகி

விழித்தேக் கிடக்கிறது

என் கைத்தொலைபேசி..

அவளால்..

இரைச்சலாகத் தோன்றிய

அதன் அழைப்பொலி

இன்னிசையானது இப்போது..

அவளால்..

பேசத் தொடங்கினால்

போன்பில்லும்..,

பேசாவிட்டால்

இதயத்துடிப்பும் எகிறுகிறது..

அவளால்..

படுக்கையறை

நடக்கும் இடமாகவும்,

பகலும், இரவும்

ஒன்றைப் போலவும்,

இமைகள் சுமையாகி

வேண்டாத உறுப்பாகவும்,

மாறிப் போனது..

அவளால்..

என் எழுத்துக்கள் கூட

தீச்சுடரை வீசிவிட்டு

பூச்சரம் சூடிக் கொண்டு

புன்னகைக்கிறது..,

அவளால்..!!!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்-

(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்