அவரால்…

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

நெப்போலியன்


கல்லறைக்கதவு
திறக்கப்பட்டிருந்தது.

பிரேதம்
கட்டப்பட்டிருந்த
துணிச்சீலைகள் மட்டுமிருந்தன.

அவரைக் காணாத
அதிர்ச்சியில்
உறைந்து போயிருந்தார்கள்.

சீடர்களைத்
தரிசிப்பதற்காய்
சென்றிருக்கலாம் அவர்.

தழும்புகளின்
உறுதிப்படுத்துதலுக்காய்
நடந்தேறிய காரியமெனலாம்.

இன்னும்
சிறிது நேரத்தில்
அவர் பரலோகமேறுவதை
பலர் காணக்கூடும்.

அதற்குள்
உண்டியல் பணத்தை
மூட்டை கட்டு…
ஆலய மணியை
அடகு வை…
சபையார்
தசமபாகத்தை
தைரியமாய் களவு கொள்…
கோயில் சொத்து
கும்மாளமிடு…

ஏனெனில்,
அவர்தானே
விண்ணேறும்முன்
உங்களைப்பார்த்து சொன்னது…
உலகமெங்கும் போய்
சகல ஜாதிகளையும்
சீஷர்களாக்குங்களென்று !
—- நெப்போலியன், சிங்கப்பூர்
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்

அவரால்…

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

நெப்போலியன்


கல்லறைக்கதவு
திறக்கப்பட்டிருந்தது.

பிரேதம்
கட்டப்பட்டிருந்த
துணிச்சீலைகள் மட்டுமிருந்தன.

அவரைக் காணாத
அதிர்ச்சியில்
உறைந்து போயிருந்தார்கள்.

சீடர்களைத்
தரிசிப்பதற்காய்
சென்றிருக்கலாம் அவர்.

தழும்புகளின்
உறுதிப்படுத்துதலுக்காய்
நடந்தேறிய காரியமெனலாம்.

இன்னும்
சிறிது நேரத்தில்
அவர் பரலோகமேறுவதை
பலர் காணக்கூடும்.

அதற்குள்
உண்டியல் பணத்தை
மூட்டை கட்டு…
ஆலய மணியை
அடகு வை…
சபையார்
தசமபாகத்தை
தைரியமாய் களவு கொள்…
கோயில் சொத்து
கும்மாளமிடு…

ஏனெனில்,
அவர்தானே
விண்ணேறும்முன்
உங்களைப்பார்த்து சொன்னது…
உலகமெங்கும் போய்
சகல ஜாதிகளையும்
சீஷர்களாக்குங்களென்று !
—- நெப்போலியன், சிங்கப்பூர்
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்