ஆ. மணவழகன்
என் கையெழுத்தைப் பார்த்ததும்
கண்டுபிடித்து விடுவாயோ !
சிறுமூளையின் ஏதோ ஒரு அறையில்
சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச்
சிறகடிக்கச் செய்வாயோ !
பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப்
பரிச்சயம் ஆன அந்த நாள் முதல்….
படிக்கட்டில் அமர்ந்து பாடங்களையேப்
படிப்பதாய் பாவணைகள் செய்த அந்த நாள் முதல்…!
‘எனக்காக இதைச் செய்யக் கூடாதா ? ‘
என்று ஏக்கமாய்க் கேட்ட அந்த நாள் முதல்…
அந்த மழை நாளில்..
கல்லூரிப் பருவத்தின் கடைசி நேரத்தில்…
‘இன்றாவது சொல்லிவிட மாட்டாயா ?
என்ற எதிர்ப்பார்ப்புடன்…
எதார்த்தமாய்க் கைகுலுக்கி..
என்றும் போல் புன்னகைத்துப் பிரிந்த,
அந்த கடைசி நிமிடம் வரை
அத்துனையும் உன் நினைவிற்கு வருமோ !
உனக்கான விழா அழைப்பிதழை
அஞ்சல் செய்து விட்டு,
உன் இருக்கையை வெறித்தபடி நான்…!
யார் கண்டது ?
இந்நேரம் உன் இருப்பிடம் கூட
இடம் மாறி இருக்கலாம்!
********
a_manavazhahan@hotmail.com
- சொல்லுவதெல்லாம்
- என் கதை
- அழைப்பிதழ்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- புதையல்
- வாழ்வும் கலையும்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வளர்சிதை மாற்றம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- விரதம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- தன்னாட்சி.. ?
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வாழ்வும் கலையும்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- கணவன்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்