அருண் கொலேட்காின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு – இரா.முருகன்

This entry is part [part not set] of 6 in the series 20000417_Issue

பூசாாி


குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல்
புட்டம் அமர்த்திப்
பூசாாி காத்திருக்கிறான்.

பஸ் இன்று தாமதமாக வருமோ,
பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ,
அவனுக்குப் புதிய கவலைகள்.

தணுத்த கல்லில் பட்ட
விரைகளை வேகமாய் விலக்கி
வெய்யில் பக்கம் தலை திருப்புகிறான்.

இறந்தவன் கையில் தனரேகை போலச்
சும்மாக் கிடந்த தெரு.

பழக்கமான கிராம நாவிதன் போலக்
கன்னம் தடவித் தலையில்
கைவைக்கும் சூாியன்.

வெற்றிலைத் துண்டொன்று
மேலும் கீழுமாய் நாவில் சுற்றும்
மந்திரம் போல.

தூரத்தில் புள்ளியாய்த் தொிந்த பஸ்
அவன் பல்லிப் பார்வையில்
மூக்கு மருவாக உருவம் பெருகும்.

பள்ளத்தில் குலுங்கி ஏறி
சத்தம் எழக் கடந்து
அவன் கண்ணில் நீலம் பூசும்.

ஒருவலம் வந்து அவன் முன்னால்
செல்ல உறுமலோடு
மெல்ல நிற்கும் பஸ்,
பூனைச் சிாிப்பும்
இந்தாபிடி என்று
உள்ளே யாத்ாீகர்களுமாக.

படம்

(மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், வயிற்றுப் பிழைப்புக்காக உடல் விற்கும் ஒரு பெண், பண்டாிபுரம் திருவிழா பார்க்கப் போகிறாள். கண்ணனும் ருக்மணியும் அங்கே வழிபடப் படும் தெய்வங்கள். திருவிழாக் கடைகளில் ஒன்று – தலைவர்கள், சினிமா நடிகர்கள் போல யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நின்று புகைப்படம் (trick photography) எடுக்கும் இடம். அங்கே நுழைகிறாள் இவள்…)

ஏனாயா நீதான் படம் பிடிக்கிற ஆளா ?
என் படம் ஒண்ணு எடுத்துக் கொடு.
கண்ணணோடும் ருக்குமணியோடும்
நான் சேர்ந்து நிற்கற மாதிாி.

ருக்குப்பொண்ணு என் பீச்சாங்கைப் பக்கம்,
கண்ணன் வலப்புறம். நடுவிலே நான்.
அப்படித்தான் வேணும் எனக்கு.

அடா ருக்கு.. நகரு..கண்ணன் பக்கத்திலே
நான் நிற்கப் போறேன்.

கண்ணா..நீ ரொம்ப மோசம்ாயா.
இப்படித்தானா விறைப்பா நிக்கறது ?
எல்லாரும் அட்டைக் கடவுள்னு
கிண்டல் செய்யப் போறாங்க.

என் பக்கத்திலே வாடா கண்ணா..
என் தோளில் கை போட்டு அணைச்சுப் பிடி.
அப்படித்தான். இது நல்லா இருக்கு.

ருக்கு..உனக்கு ஆனாலும் பொறாமை நிறைய.
கவலைப் படாதே. மும்பை திரும்பும் முன்னால்
உன் கண்ணனை உன்னிடமே விட்டுடறேன்.

படக்காரரே..படத்தில் நல்லதா
வர்ணம் வரணும்..தொியுதா ?
என் சேலை நீல நிறத்தில் இருக்கணும்.
கண்ணனின் உடுப்பும் அதே நிறந்தான் வேணும்.

நான் போய் திருவிழாக் கடையெல்லாம்
பார்த்து விட்டு, ராட்சச ராட்டினத்தில்
ஏறிச் சுற்றிவிட்டு வரேன்.
ஒரு கம்பளிப் போர்வை கூட வாங்கணும்.
நேரம் இருந்தால் மரணக் கூண்டையும்
எட்டிப் பார்த்து விட்டு வருவேன்.

ஒரு அரைமணியில் திரும்பி வந்து
படத்தை வாங்கிக்கலாம் இல்லையா ?

கதவு

சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட
தீர்க்கதாிசி போல,
ஆடியபடி தொங்கும் தியாகி போல,

இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய்
மற்றதின் பிடிமானத்தில்
பழைய கதவு நிற்கும்.

ஒருமுனை தெருப் புழுதியைத் தொட
மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும்.

நாள்பட நாள்படக் கூர்மையாகும்
பழைய நினைவுகள் போல் சிலும்புகள்
மேலெங்கும் துருத்தி இருக்கும்.

உயிாியல் புத்தகத்திற்குள்
திரும்பப் போக வழிதொியாத
தோல்சிதைந்த தசைமனிதப் படம் போல
எல்லாம் வெளித்தொிய,

பழைய வாசலில் மெல்லச் சாய்ந்து
நிதானப் படுத்திக் கொள்ளும்
உள்ளூர்க் குடிகாரன் போல,
ஒற்றை உலோகப் பட்டையில் சாய்ந்தபடி..

உலோகப் பட்டை நாசமாகப் போகட்டும்.
மேலே காயப் போட்ட
சின்ன அரைக்கால் சட்டை மட்டும்
இல்லாதிருந்தால்
கதவு எப்போதோ
கிளம்பிப் போயிருக்கும்

( கடந்த முப்பதாண்டுகளில் பல மராத்தி இளங்கவிஞர்களைப் பாதித்த மராத்திப் புதுக்கவிஞர் அருண் கொலேட்காின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு – இரா.முருகன்)

Series Navigation

பூசாாி

பூசாாி