அறிவிப்பு
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ – ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ – சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார். விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வழக்கம்போல வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)
- நினைவுகளின் தடத்தில் – (23)
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)
- அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது
- பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- “காட்சிகள் மாறுகின்றன…!”
- தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு
- நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி
- ஈரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
- தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !
- தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு
- கவிதைகள்
- உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
- பன்னீர்ப்பூக்கள்
- செஞ்சுடரில் பூனைக் கண்கள்
- இன்னபிறவும்….
- கவிதைகள்
- வேத வனம் விருட்சம் 17 கவிதை
- இன்றைய நாட்காட்டியின் கதை
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2
- உங்கள் பெயர் என்ன?
- “நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”
- உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்
- புல்லாங்குழல்
- மறைதல் பொருட்டு வலி
- கவிதைகள்
- பெண்ணியம்
- என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
- தேங்காய்களை தின்று அசைகிற கொடி
- வேத வனம் விருட்சம் 18
- வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்
- தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
- பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி
- அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு