அமெரிக்காவும் விழுமியங்களும்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

பாஸ்டன் பாலாஜி


தமிழகத்தில் திமுக தவிர்த்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ‘2011 -ல் அரியணைக் கட்டில் எனக்குதான்’ என்று துண்டு போடுவது போல், அமெரிக்காவில் எந்தத் தலைவர் வாயைத் திறந்தாலும்்ம் நீபர் (Reinhold Niebuhr) வந்து விழுகிறார்.

எல்லா அரசியல்வாதிகள் மெல்லும் அவலாக நீபர் பயன்படுகிறார்.

ஆக்கபூர்வமான சண்டையின் நலன்களையெல்லாம் நீபர் பிட்டு வத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஜான் மெக்கெயின் புளகாங்கிதமடைகிறார். இன்னொரு புறம் ‘உலகத்தை அச்சுறுத்தும் தீமைகள் நிறைந்திருக்கின்றன என்று வலியுறுத்தும்’ கருத்தாக்கத்துக்காக அவரைத் தன்னுடைய ஆதர்ச தத்துவறிஞராக சான்றிதழ் வழங்குகிறார் எதிரணி வேட்பாளர் பராக் ஒபாமா.

இருவரும் செல்ல நினைக்கும் வெள்ளை மாளிகையில், தற்போது கோலோச்சுபவர்களிடம் இல்லாத தன்ன்டக்கத்தை தான் நீபரிடம் காணுவதாக நியு யார்க்கின் ஆளுநர் எலியட் ஸ்பிட்சர் நடுவில் தீர்ப்பொன்றை வைக்கிறார். அனைவருக்கும் மேற்கோள் புரவலராக நீபர் மாறியிருக்கிறார்.

நீபர் மதபோதகராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். இன்றைய நிலையில் கூட அதிதீவிர கிறித்துவர்கள் ஈராக் போரை எதிர்க்கிறார்கள். ஆனால், கிறித்துவ போதகர்களுக்கான காரணம் வேறு. அமெரிக்காவில் தற்பால் விரும்பிகள் இருப்பதால்தான், கடவுள் கோபம் கொள்கிறார். அதனால்தான் கடவுளின் கிருபை இல்லாத அமெரிக்கா, ஈராக் சண்டையில் வீரர்களை இழக்கிறது என்பது இவர்கள் வாதம்.

செயல்வீரர்களாய் களத்தில் குதித்து, போர் வீரர்களின் இறுதிச்சடங்குதோறும் சென்று ‘இறந்த படைவீரர்களுக்காக கடவுளுக்கு நன்றி’ என்றும்; அதை விட கண்ணியக்குறைவான வெற்று கோஷ வாசகங்களாலும் புண்பட்ட நெஞ்சுக்கு அமிலம் ஊற்றி தற்பால் எதிர்ப்பு போராட்டத்தில்் திளைக்கிறார்கள். இதனால் வெறுப்படந்த இறந்த மகனின் தந்தையொருவர், தேவாலயத்தின் மேல் வழக்குத் தொடுக்க, பதினொன்று மில்லியன் நஷ்ட ஈடு தருமாறு தீர்ப்பாகியுள்ளது.

இந்த மாதிரி மனம் வெம்பிய தருணங்களில் கூட அமெரிக்காவில் பேச்சு சுதந்திரம் பேஷாக வேலை செய்யும். கருக்கலைப்புக்கு செல்லும் க்ளினிக் வாசலில், ‘தைரியாமாகச் சொல்… நீ மனிதன்தானா? என்பது போன்ற சூலச்சிலுவைகளைத் தாங்கி ‘சாகடிக்காதே… கொல்லாதே… ஐயோ… அணுஅணுவாக சித்திரவதை செய்யப்போகிறாயே…’ என்று குத்திவிடுவது போன்ற பயமுறுத்தலுடன் சிசுவதை, கண்ணைக் குத்தும் போன்ற சகல பில்லி சூனியங்களையும் அரங்கேற்றுவார்கள்.

அதற்குப் பெயர் பேச்சு சுதந்திரம்.

சுதந்திரம் என்பது தாடி வைத்துக் கொள்ளாத முகம் மழித்தவர்களுக்கு வழங்கப்படும். வெளிநாட்டுக்கு செல்பவர் என்றால், பெயரை பாபி, ஜோ, ஆனி என்று வைத்தவர்களுக்குத் தரப்படும், பெயரில் ஹாஸனோ, முகத்தில் முட்களோ இருந்தால் கிட்மோ அனுப்பாமல் இருப்பதுதான் சுதந்திரம்.

க்வான்டனமோ கைதிகளுக்கு எந்த மாதிரி தட்டி கொட்டி விசாரணை நடத்தலாம் என்பது அடுத்த கவலை. அது குறித்து அடுத்து வரப்போகும் ‘தலைமை வழக்கறிஞரிடம்’ (அட்டர்னி ஜெனரல்) விசாரணை நடக்கிறது.

Waterboarding எனப்படும் முகத்தைத் துணியால் கட்டி மூடிய துணி மேல் தண்ணீர் ஊற்றி குற்றஞ்சாட்டப்பட்டவரை விசாரிப்பது சரியா? என்று எதிர்க்கட்சியினர் கிடுக்கிப்பிடி போட, கலைஞர் கருணாநிதியிடம் பாடம் பெற்றவர் போல் மைக்கேல் முக்காசெ (Michael Mukasey) ‘சட்டப்படி குற்றம் என்றால் தவறுதான்; நான் சட்டத்தை இயற்றுபவன் அல்ல; சட்டத்தின்படி நடப்பவன்’ என்று நழுவிவிட்டார்.

இராக் சண்டைக்காக அனுப்பிய ஒன்பது பில்லியன் (ரூபாயில் கிட்டத்தட்ட முப்பத்தாறாயிரம் கோடி) காணோமே போன்ற கவலைகளை நீதி பரிபாலனம் செய்யப்போகிறவரிடம் கேட்க முடியாது. அது குறித்து அப்போதை தலைமை நிதித்துறை செயலராக இருந்த ஆலன் க்ரீன்ஸ்பானுக்கே விளங்கவில்லை.

எங்கே ஆரம்பித்தேன்?

இஸ்லாம் மீது போர்த்தொடுப்பு… நியாங்கள்… நீபர்…

நீபர் கடல் போல நிரைய எழுதியிருக்கிறார். தன்னுடன் தானே முரண்பட்டிருக்கிறார். ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தால் ‘ஸ்திரபுத்தி இல்லாமல் ஜான் கெர்ரி போல் லாயக்கற்றவன்’ என்று விரட்டியடித்திருப்பார். அமெரிக்க அதிபர் இப்போதும் ‘ஜனநாயகம் தழைத்தால் தீவிரவாதம் மடியும்’ என்னும் ஐடியலிசப் பேர்வழி.

அரசியலில் ரியலிசத்தை விரும்புபவர் நீபர். Under ideal conditions என்றில்லாமல், நிஜத்தில் எது சரிப்படும் என்று ஆராயச் சொன்னவர். சமூக சீர்திருத்தம் என்று சிறந்த வழிமுறைகளை சிகாகோ பல்கலை ஆராய்ச்சிக் கூடத்தில் கண்டுபிடித்து அர்ஜென்டினாவுக்கு ஏற்றுமதி செய்து பொருளாதார சீர்குலைவு வருவதை விரும்பாமல், அவரவர்களுக்கு எது வசதிப்படுமோ, நடைமுறையில் எது ஒத்துவருமோ அதை கோட்பாடாக்க விரும்பியவர்.

இந்த மாதிரி சண்டக்கோழிகள் குறித்து அவர் கருத்து என்ன? தொடர்புள்ள புத்தகம்: Moral Man and Immoral Society: A Study in Ethics and Politics By Reinhold Niebuhr

அவரின் காலத்தில் அடக்குமுறைக்குள்ளான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் குறித்து எழுதும்போது: (தொடர்புள்ள பதிவு: Partisan Review :: The Americanized Psychoanalyst

The emancipation of the Negro race in America probably waits upon the adequate development of this kind of social and political strategy. It is hopeless for the Negro to expect complete emancipation from the menial social and economic position into which the white man has forced him, merely by trusting in the moral sense of the white race. It is equally hopeless to attempt emancipation through violent rebellion.

However large the number of individual white men who do and who will identify themselves completely with the Negro cause, the white race in America will not admit the Negro to equal rights if it is not forced to do so. Upon that point one may speak with a dogmatism which all history justifies.

இதன் தொடர்ச்சியாக கறுப்பர்களின் விடுதலைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் கடிதத்தில் இருந்து:

As Reinhold Niebuhr has reminded us, groups tend to be more immoral than individuals. We know through painful experience that freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed.

இதையெல்லாம் குறித்து வோட்கா அடித்துவிட்டு வக்கணையாக வலைப்பதிவில் உரையாற்றுபவர்களை போபோ என்றழைக்கலாம். (பாபா அல்ல).


Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி