மால்கம் ரைட்டர்
ஆண்களே ஜாக்கிரதை. மிருகலோகத்தில் ஆண்களின் அதிகாரம் போயே போச்சு. இரண்டு அம்மா எலிகளை மட்டுமே உபயோகித்து எலியை உருவாக்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பாலூட்டி மிருகங்களில் இது தான் இப்படிப்பட்ட முதல் நிகழ்வு. பக்கத்தில் இருக்கும் கிளினிக்குக்கு ஓடவேண்டால் பெண்களே – மானிடப் பிறவிகளுக்கு இது செய்வது இப்போதைக்கு முடியாது – காரணம் தொழில் நுட்பம் பாதி , நெறிமுறைகள் பற்றிய அச்சம் பாதி.
எலி அம்மாக்களில் ஒரு அம்மா, பிறந்த உடனேயே மரபணுவைத் திருகி ஆண் போலச் செய்யப் பட்டது.
இந்தச் செயலினால், ஏன் எலிக்காகட்டும் , மனிதருக்காகட்டும் அப்பாவின் மரபணு தேவையில்லை என்று நிரூபணம் ஆகிறது. தண்டு செல்லை உபயோகித்து மருத்துவம் செய்யவும் இது பயன் படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
வியாழக்கிழமையன்று ‘நேச்சர் ‘ ஏட்டில் இ, டோக்யோ விவசாயப் பல்கலையின் டோமேஹிரோ கோனோ இது குறித்து எழுதியுள்ளார். இந்த முறையில் இவர்கள் இரண்டு எலிகளை உற்பத்தி செய்துள்ளனர். இவற்றில் ஒன்று நலமாக உள்ளது. இந்த எலிக்கு ‘ககுயா ‘ என்று ஜப்பானிய புராணக் கதையின் கதாபாத்திரம் ஒன்றின் பெயரை இட்டுள்ளனர்.
மின் அஞ்சலில் தொடர்பு கொண்டபோது, இந்தப் பரிசோதனை விவசாய, விஞ்ஞான நோக்கங்களுக்கு இந்த முறை பலன் அளிக்கலாம் என்றி தெரிவித்தார். இது மனித உற்பத்திக்கு உபயோகிக்க ஏதும் காரணம் இல்லை, கேள்வியே பொருளற்றது என்று தெரிவித்தார்.
சில பல்லிகளும், வேறு சில மிருகங்களும் வெறும் அம்மாவின் ஜீன்களையே உபயோகித்து இனப் பெருக்கம் பண்ணக் கூடியவை தான். ஆனால் பாலூட்டிகள் இந்த முறையில் இனப் பெருக்கம் அடைவதில்லை. பரிசோதனைச் சாலையில் கருக்கள் உற்பத்தியாகியுள்ளன, ஆனால் பிறப்பு வெற்றிகரமாய் இதுவரையில் அமையவில்லை.
ஆனால் கருக்கள் உற்பத்தி செய்தாலே தண்டு செல்களை உற்பத்தி பண்ணமுடியும் என்பதால் இந்த முறை தேவையற்ற ஒன்றாய் இருந்தது. சில ஆய்வாளர்கள் கருவாக உருவாகாத மனிதச் சினை முட்டைகளை உஅப்யோகித்து ‘பார்த்தினோட் ‘ என்ற தண்டுசெல் சேர்க்கையை உண்டுபண்ணி, தண்டு செல்களை அறுவடை பண்ண முடியும் என்று நம்புகிறார்கள். அதாவது கருவை அழிக்காமல் தண்டு செல்களை அடைய இது உதவும். தண்டு செல்களைப் பயன்படுத்தி பல நோய்களைக் குணப் படுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். கருவாய் உருவாகாத சினை முட்டைகளை ஆய்வு செய்யும் கெண்ட் வ்ரானா என்ற ஆய்வாளர் – பென்சில்வேனியா அரசுப் பல்கலையில் பணி புரிபவர் – இந்த ஆய்வு பயனுள்ளது என்று நம்புகிறார். அப்பாவின் மரபணு இல்லாமல் எலி ஒன்று உற்பத்தி செய்ய முடியும் என்றால் , ஆரோக்கியமான தண்டு செல்கள் உற்பத்திக்கும் இதை ஒத்த ஒரு ஆய்வு வழி இருக்கலாம் என்பது அவர்கள் அனுமானம்.
சில வகை பல்லிகளிலும் மற்றும் சில விலங்கினங்களிலும் ஆண்களே இல்லை. அவை வெறுமே தாய்வழி மரபணு மட்டுமே கொண்டு சந்ததி உற்பத்தி செய்கின்றன. ஆனால் பாலூட்டிகளில் இப்படிப்பட்ட இனங்கள் இல்லை. இதுவரை பரிசோதனைச்சாலைகளில் செய்யப்பட்ட எலி மீதான பரிசோதனைகளில் ஆரம்பக்கருக்கள் உற்பத்திசெய்யப்பட்டாலும், வெற்றிகரமான பிறப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட முன்னேற்றம், ஸ்டெம் செல்கள் என்றழைக்கப்படும் தண்டு செல்களை உற்பத்தி செய்ய வல்லது. ஆயினும், கர்ப்பம் தரிக்காத மனித முட்டைகளை தூண்டி பார்த்தினோட்டுகளாக உருவாகினால் அவற்றின் மூலம் தண்டு செல்களை உற்பத்தி செய்யலாம். (இப்போது தண்டு செல்களை அறுவடை செய்ய சாதாரண முட்டைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன) ஆராய்ச்சியாளர்கள் இந்த தண்டு செல்கள் மூலம் பல நோய்களைத் தீர்க்கலாம்.
டோக்யோ பரிசோதனை
இந்த டோக்கியோ பரிசோதனை முன்னேற்றத்தில் இருக்கும் தடையை விளக்கும் நல்ல தடயம். சில பாலூட்டி மரபணுக்கூறுகள் தந்தையிடமிருந்து பெறப்பட்டால் தாயிடமிருந்து பெறப்பட்டால் இருப்பதைவிட வித்தியாசமாக நடந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். தந்தையிடமிருந்து சில மரபணுக்களைப் பெறுவது சாதாரண வளர்ச்சிக்குத் தேவை என்று கருதுகிறார்கள்.
ஆனால் மிகக்குறைந்த அளவு மரபணுக்கூறுகளே அவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ஒரு சில வேளைகளில், இந்த மரபணுக்கூறுகள் தந்தையிடமிருந்து பெறப்பட்டால் மட்டுமே வேலை செய்கின்றன. தாயிடமிருந்து பெறப்பட்டால் வேலை செய்வதே இல்லை. ஒரு சில மரபணுக்கூறுகள் தாயிடமிருந்து பெறப்பட்டால் மட்டுமே வேலை செய்கின்றன.
நேச்சர் என்ற புகழ்பெற்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்னையை தீர்க்க, மரபணு மாற்றப்பட்ட எலியை உபயோகப்படுத்தினார்கள். இரண்டு பெண் எலிகளிடமிருந்தும் முக்கியமான டி என் ஏ கூறு காணாமல் அடிக்கபப்ட்டது. இதனால் இவைகளது மரபணுக்கூறுகள் ஒரு ஆணிடமிருந்து வந்ததுபோல நடந்துகொண்டன. அந்த மரபணுக்குழந்தை முட்டை உருவானதும், அதில் பெண் என்ற முத்திரை பதிக்கும் முன்னரே அதனை எடுத்துவிட்டனர்.
அந்த டி என் ஏ சாதாரண பெண்ணின் முட்டையுடன் கலந்து புதிய முட்டை உருவாக்கபப்ட்டது. இப்படி உருவாக்கபப்ட்ட 457 முட்டைகளில் இரண்டு மட்டுமே உயிர்வாழும் எலியாக உருவாயின.
இரண்டே இரண்டு மரபணுக்கூறுகளை காலி செய்துவிட்டால் உயிருள்ள எலியை இரண்டு பெண் எலிகளிடமிருந்து உருவாக்கிவிட முடியுமென்பது திடுக்கிட வைப்பது என்று மாரிஸ்ஸா பார்தோலமை என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
வழக்கமான இனப்பெருக்கம் போன்றே , தயாரிக்கப் பட்ட மரபணுக் கூறுகளும் சாதாரணச் செயல்பாட்டிற்குத் திரும்பியிருப்பதும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி நடந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
தண்சு செல் ஆய்வாளர் ஜெரால்ட் ஷாட்டன் (பிட்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரி) மனித இனவிருத்தியின் போது தண்டு செல்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்று ஆழ்ந்த ஆய்வு தேவை என்று கூறுகிறார். இது தெரியாமல் போனால் பார்கின்ஸன் , நீரிழிவு போன்ற நோய்களுக்கு இந்த மருத்துவத்தைப் பயன்படுத்தும் போது பிரசினை எழும் என்கிறார்.
—-
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- வசந்தம் காணா வாலிபங்கள்
- வாழ முற்ப்படுதல்….
- ரம்…ரம்மி…ரம்யா
- வெள்ளைக் குதிரை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- பெண்கள் சொத்துரிமை
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- அணிந்துரைகள்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- கவிதை உருவான கதை-3
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- ஹலீம்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- தாயே
- நீயும்…
- இரு கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 4
- எல்லை!
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- இறுதி சில நொடிகளில்
- உன் நினைவுகள்
- அறைகூவல்!
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- காடுகளால் ஆன இனம்
- விட்டில் என்றொரு பொய்
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- பிசாசின் தன் வரலாறு-2
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- எழில் எது ?
- அவரே சொல்லி விட்டார்
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- தொழில்நுட்பச் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16
- இழப்பு