பசுபதி
****
எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? — என்றன்
. எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ?
சிந்தைக் கடலைக் கடைந்தால் — எந்தச்
. சிவனார் வருவார் விடத்தைக் குடிக்க ?
காலக் கசப்புக் கணங்கள் — இன்றுமென்
. கனவைக் குலைத்திடும் எண்ணப் பிணங்கள்
வேலன் அருளால் மறப்பேன் — உள்ள
. வேதனை சொட்டும் கவிதை துறப்பேன் !
எத்தனை கோடிக் கணங்கள் — அவற்றில்
. எங்கேயோ வீசுது ரோஜா மணங்கள் !
செத்தைக்குள் சத்தைப் பிடிப்பேன் — எண்ணச்
. சேற்றில் புதைந்த மலர்கள் தொடுப்பேன்!
[வேறு]
கடமையெனும் மாதவத்தைக் காலமெல்லாம் ஆற்றிவரும்
இடமொன்றாம் மருத்துவர்கள் இல்லத்தின் அறைக்குள்ளே,
விடிகாலை, இருள்மங்கை விடைபிரியும் தருணத்தில்,
கடிகாரம் ஒலியின்றிக் கைதட்டும் லயம்நடுவே ,
வெண்ணுடையில் வைத்தியரும் வெயிலோன்போல் ஒளிபாய்ச்ச,
வண்டினமாய்ச் சீருடையில் மங்கையரும் சுற்றிவர,
பத்தினிவாய் முனகல்கள் பூபாளப் பண்ணிசைக்க,
சித்திரமாய், சிங்காரச் செவ்விதழ்கள் மூடியொரு
அழகுமலர் பிறப்பதைஎன் அகன்றகண்கள் பார்த்திருக்க,
அழுமலருள் என்னுதிரம் ஆர்த்திடுதல் கேட்டுநின்றேன்.
அழுகையெனும் பொத்தானால் ஆனந்தம் ஒளிர்ந்திடுமா ?
குழுவினரின் கண்மலர்கள் குதூகலத்தில் விரிந்தகணம் . .
அந்தக்கணம் இனித்ததடி –ஆகா!
என்றன்மனம் இசைத்ததடி !
கடமையெனும் பாற்கடலைக் கடைந்தால் கனன்றெழுமோர்
விடமும் மருந்தாகும் விதியும் சுதிமாறும் .
அழகணங்கு தந்தசவால் ஆட்டத்தில் பலருடன்நான்;
பழம்பறிக்கும் தருணத்தில் பள்ளமென்கால் உணர்ந்ததுவே!
ஆய்வெனும்அக் கல்மனத்தாள் அதிர்ச்சியிடி தரும்மின்னாள் !
ஓய்வின்றித் தாள்பணிந்தும் உன்பகையைத் தழுவிடுவாள் !
வெற்றிபகர் ஆய்வேட்டை வேறொருவன் வெளியிட்டான் !
பற்றியது பொறாமைத்தீ ; ‘படுபாவி ‘ எனச்சபித்துக்
கட்டுரைக்குள் நீச்சலிட்டேன், கசப்பாற்றில் மனம்மூழ்கி.
பட்டதென்பேர் பார்வையிலே, பத்தியொன்றின் நடுவினிலே !
என்றோநான் சொன்னேனாம்; ஏதோஒர் குறிப்பதனை;
நன்றியுடன் ஆய்வாளன் நவின்றதைநான் பருகிநின்றேன்!
நாலுபக்கக் கட்டுரைக்குள் நாலுசொற்கள் விஸ்வரூபம்
போலெழுந்தென் பொறாமையதன் தலையமுக்கி நின்றகணம் . .
அந்தக்கணம் இனித்ததடி –ஆகா!
என்றன்மனம் நிமிர்ந்ததடி !
===<><>====
[வேறு]
நெகிழ்ச்சிக் குளத்தில் அமிழ்ந்தேன் –ஆனால்
. நினைவோடை நீரில் கரிப்பை உணர்ந்தேன்!
மகிழ்ச்சிப் பழத்தின் அருந்தேன் — நடுவே
. வண்டாய்க் குடைவினா கண்டு பிடித்தேன் !
இற்றை இனிப்பேதான் வாழ்வா ? – என்பேரை
. என்நினை வொன்றுதான் சுட்டுமா ? சீ!சீ!
கற்றோரின் எண்ணத் திரையில் — என்பேரைக்
. காணும் வழிதனைச் சொல்லடி சக்தி!
அந்தக்கணம் இனிக்குமடி ! –ஆகா!
என்றன்மனம் நிறையுமடி !
~*~o0O0o~*~
====
s.pasupathy@yahoo.ca
- கவிதைகள்
- அவுரங்கசீப்…. ? !!!
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- கவிதைகள்
- ரா கு கே து ர ங் க சா மி -4
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தண்டனை