திலகபாமா
எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன. எல்லாமே செல்லிடை பேசிகளின் எண்கள் . ஓடிக் கொண்டிருந்த எண்கள் ஒரு இடத்தில் நின்று கொள்ள அந்த எண்ணின் தொடர்புக்கு ஏற்ப மணிச்சத்தம் . வெறுமனே இருந்த மணிச் சத்தங்களை மாற்றி திரைப் படப் பாடல்களை எவன் நுழைத்தது. பாடல் காதோரம் கிசு கிசுக்கத் துவங்கியது
?நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி நெருங்கி வருவேன்.?
சட்டென்று தொடர்பை துண்டித்தன விரல்கள் , நெருங்கி நெருங்கி வருவதாய் சொல்வது பொய். மிஸ்டு காலில் எண்களைப் பார்த்து விட்டு திரும்ப அழைக்கக் கூடும் என எதிர்பார்த்து விநாடிகள் நிமிடங்கள் நாட்கள் எனப் பறந்தன. அறையெங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது கண் முன்னே பெரிய ஒளி அதன் பிரமாண்டத்தின் முன் முற்றிலும் எதுவுமே பார்க்க முடியாமல் போகலாம். ஒளியையும் பார்க்க முடியவில்லை என்று சொன்னால் யார் நம்பக் கூடும்.
மூடிக் கொண்டாள் விழியை. பல உருவங்கள் வந்து போயின. கண்ணன், குமார், தீபா சுரேஷ், அத்தை, மாமா, வீடு ஊர் தெருக்கள் எல்லாம் வேக கதியில் தோன்றி நகர இறுதி உருவமாக கண்ணன் வந்து நின்று சிரித்தான்
எழுத்தை அவள் எப்பொழுது கைக்கொள்ள நேர்ந்தது என்று அவளே அறியாமல் இருந்திருந்த பொழுதில் இரவின் தனிமையொடும் இருளின் துணையோடும் எழுத்துக்களோடு இருந்திருந்தாள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் நிரம்பி வழிந்த பணக்காரச் செழுமை ஏதோ ஒன்றை நிறைவு செய்ய முடியாமல் மேலும் அதே விதத்திலேயே தன்னை அந்த வீட்டினுள் திணித்துக் கொண்டிருந்தது . ஆனால் அவள் கண் எதிரிலோ எப்பவும் ஒரு வெறுமை இருந்து கொண்டே இருக்க வீட்டுக்குள் உடன் வாழ்ந்திருந்த ஆட்களாலும் அது நிரப்ப முடியா படிக்கு இருந்திருந்தது. காலை நேர பள்ளிக் கூட அவசரங்களில் பரபரத்த பொழுதுகளில் கூட உள்ளுக்குள் ஒரு உருவம் சோம்பல் முறித்தது. தோசை வார்க்கையில் கதைக் கருவை உருப்போட்டு முடித்திருந்தது. மேசை ஒதுக்கி மதிய உணவிற்கு ரசத்திற்கு புளி கரைக்கையில் உள்ளுக்குள் ஊறிய கவிதை முளைத்து கிளைத்து கல்லாகி ஸ்திரமாகியிருந்தது கணவர் வேலைக்கு கிளம்பிச் சென்றதும் வீடு அமைதி கொள்ளும். திரும்ப மதிய சாப்பாட்டு பொழுதுகளில் உயிர்த்துக் கொள்ளும் வீடு இரண்டு மணிக்கு உறங்கச் சென்று விடும். மாலையில் வாசல் தெளித்து கோலமிட்டு முகம் துடைத்து பூவைத்த பெண்ணாய் வாசலில் என் நினைவுகள் காத்துக் கிடக்கும். ஊரடுங்கும் நேரத்தில் வீடு திரும்பும் தந்தையும் மகனும் உண்டபடி வியாபாரம் பேசி உறக்கம் வரும் வரை கணக்கு வரவு செலவு பார்த்து பொழுதை முடித்துக் கொள்ள ஊரெல்லாம் மெச்சும் நிறைவான வாழ்க்கையாய்.
ஆனால் தேடல் உள்ள அவள் மனமோ ஒன்றுமேயில்லாததாய் எப்பவும் குறை பட்டு அத்தையிடம் அநுமதி வாங்கி அம்மாவீடு போய் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்று தோற்றுத்தான் திரும்புகின்றது புக்ககம்.
புலம்பல் தாங்காது அம்மா வீட்டிலிருந்து செல்லிடைப் பேசி வாங்கித் தந்திருக்க சந்தோசமானாள்.தோழியுடன் அக்காவுடன் அம்மாவுடன் எதை எதையோ பேசிப் பேசி ஓய்ந்தாள் அந்த மாதமே வந்திருந்த அவள் பிறந்த நாளும் எல்லாரையும் கூப்பிட்டு வாழ்த்துப் பெற்றுக் கொள்ள, புகுந்த வீட்டில் நினைவு வைத்து வாங்கித் தராத புடைவைக்கு புலம்ப அம்மா வாங்கித் தந்த புடவையைக் காட்டி பெருமை பேச கணவனும் ஒரு புடவை அதை விட விலை அதிகமாய் வாங்கித் தர தோழியிடம் இரு புடவை கிடைத்ததாய் பெருமை அடித்து ஓய மாத இறுதியில் பில் தொகை தொலைபேசியை முடக்கிப் போட்டது
மீண்டும் அமைதிக்குள் சரணமாக தொலைபேசி பொம்மையாகியிருந்தது எழுத்துக்களோடு பேசிப் பேசி ஓய்ந்தாள் அவளின் ஓயாத சல சலப்பு இறுக்கமும் எரிச்சலாகிப் போக பைத்தியமாகி விடுவாளோ எனும் பயத்தில் இனி தொலைபேசிக் கட்டணத் தொகை அதிகம் வந்து விடக் கூடாது எனும் எச்சரிப்பின் பிண்ணனியில் மீண்டும் உயிரூட்டப் பட்டது . இப்பொழுது வீடு தாண்டி எழுத்தோடு அவளும் அபௌதீகமாய் பயணப் படத் துவங்கியிருந்தாள் எழுத்தோடு தொடர்புடைய எல்லாருக்கும் அவளது தொலைபேசி எண் தரப்பட்டதுடன் அவள் அழைக்க முடியா இயலாமையும் அனுப்பப் பட்டது. கழி விரக்கங்கள் அவளை மையப் படுத்துவதாய் எப்பொழுதிருந்து உணரத் துவங்கியிருந்தாள்
நானாக அழைக்க மாட்டேன் அழைத்தால் நான் பேசக் கூடும் என அனுப்பப் பட்ட தகவலில் தொடர்புகள் கொல்லைபுற உறவுகளாய் வெறும் பேச்சுக்களான தொடர்புகளாய் மாறிப் போயிருந்தன
எப்பவும் எல்லாரும் தந்ததாய் நிறைந்த தற்பெருமை கொண்டிருந்த வீடு என் குரல்களை எதிரொலித்த படியே கிடந்தது காதுகளை பொத்திக் கொள்ளத் தூண்டியது எதிரொலியின் உச்ச கட்ட இரைச்சல் மூளையெங்கும் சுவாசக் காற்றை வெளித் தள்ளி உள் நிரப்பி எல்லாம் செயலிழந்து நின்ற கணமும் நினைவுக்கு வருகின்றது ஆனால் அந்த தருணம் பிடித்திருந்தது எதுவும் கேட்கவில்லை மூளையில் சிந்தனையில்லை குடைச்சலில்லை கண்களும் எதுவும் காணவில்லை.
?ஆமாம், வீடு ஏன் எதிரொலித்தது எல்லாமாலும் நிரம்பியிருந்தும்??
என் காதுகளில் விழுந்த குரல்கள் யாருக்குமே கேட்க இயலாது ஏன் போனது யாருமே இங்கு இல்லை . மெல்லிய இன்னிசை துவங்கி பெருங்குரலெடுத்து ஆக்கிரமிக்கத் துவங்கியது. அவள் இருந்திருந்த அறையெல்லாம் நடுங்கியது அடுக்கியருந்த சமையலறைச் சாமான்களில் சின்னஞ் சிறியவை எல்லாம் சிதறி விழுந்து ஒடியது
இசை ஓசை மறந்து அதிர்வுகள் மட்டும் தான் கண்களுக்குள் சிக்கியது விசித்திரம் தான் ஓடிச் சென்று போனை எடுத்தாள் இதுவரை வந்திருந்த புது எண் யாராயிருக்கும் யோசனை.அதிர்வுகள் எதிரொலிகள் கூச்சல்கள் எல்லாம் எங்கு உறைந்து கொண்டதோ தெரியவில்லை எண்கள் மட்டும் தான் இப்பொழுது கண்ணில் தெரிந்தது
எழுந்தாள் பச்சை நிற பொத்தானை அழுத்தி
?ஹலோ யாரது?? என்று சொல்ல
?தீபா என்னப்பா செய்யுறே?
கேள்வி மிக நெருக்கமாய் உரசியது
? கண்டதையும் போட்டு மனசைக் குழப்பிக் கொள்ளாதே?
?நிறைய வேலை இருக்கு எழுது, படி இல்லாததற்கு ஏங்கத் தொடங்கினால் ஒரு நாளும் நீ நிறைவு கொள்ளப் போவதில்லை. ?
யார் நீ ? கேட்டேன் பதிலில்லை ஊமையாகியிருந்தது யாரிடமிருந்து என எண் பதிவு செய்திருக்கும் இடத்தில் தேடினாள். அவளைப் போலவே அதுவும் கிடைக்கவே இல்லை.
வேலைகள் வந்தழுத்த மெல்ல அதில் மூழ்கிப் போனாள் அவளுக்குள் சிந்தனை கொஞ்சம் இலகுவாகியிருந்தது அந்த தொலைபேசி உரையாடலுக்கப்புறம் குரல் சொன்ன அறிவுரையை விட நேசமாய் வருடிச் சென்ற குரலின் தீஞ்சுவை இன்னமும் வேண்டும் எனும் ஆசையைக் கிளப்பியிருந்தது
வாசிக்கக் கிடைத்த எழுத்துக்களுக்காய் நெருங்கி வந்தவர்கள் பின்னாளில் எதுக்காக நெருங்கி வந்தோம் என்று சொல்லிக் கொள்ளாமலேயே போனார்கள். எழுத்துக்களில் இருந்து தொடங்கிய பேச்சு சுவாரஸ்யம் கூடிப் போக , ஒரு நபர் ( நண்பர் என்று எப்படி சொல்ல முடியும்) தான் அலுவலக நேரங்களில் பேசலாம் என்று சொல்லியது முதலில் நெருடவில்லை என்றாலும், மனைவியோடு இருக்கின்ற தருணங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நான் கருதிய படியாலும், தொடர்ந்த உரையாடல்கள் உணர்த்த தொடங்கின, மனைவிக்கு மறைத்தபடி ஏதோ நிகழ்த்தப் படுவதை. உணர்ந்த அடுத்த நிமிடம் நானே ஏமாற்றப் பட்டதாய் உரைக்க கண் மூடி எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டியில் கடாசிப் போனேன்.
அடுத்த சம்பவம் இதற்கு எதிர்மறையானது. எப்பவும் அந்த நபர்( இதுவும் நபர் தான்) குடும்ப நண்பராகவே உணர்த்த தலைப்பட்டது மகிழ்வைத்தர. அதிலும் கொஞ்சம் நாளில் என் ஏமாற்றங்கள் தொடர்ந்தன. தான் கொண்டிருந்த முறையற்ற உறவுகளை மனைவியிடம் நியாயப் படுத்த என்னை பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒரு நாள் தெரிய வர.
இவ்வளவுதானா? இவ்வளவுதானா?
எல்லாம் தூர எறிந்து தூரப்போனேன்.போகின்ற வழியெங்கும் பூக்கள் ஏந்தி நின்றவர்கள் அன்பில் பேராலேயே குளிரோ நெருப்போ எது தாங்கியிருப்பினும் எனக்கு எதிரானதாகவே தெரிய , யாருடனும் பழகத் தெரியாதவள், திமிர் எனும் அடையாளங்களோடு தொடர்கின்றேன் என் பயணத்தை.
நெருங்கியிருந்த காலங்களில் என் எழுத்தை பற்றி பேசியதை, என் அறிவை புகழ்ந்து பேசியதை. மறைத்த படியே மறைந்து போனார்கள். எப்பவும் எனக்கெதிராய் கத்தி தூக்க வசதியாய்.எல்லாம் தெரிந்திருந்த போதும் தெரியாததாய் காட்டிய படிக்கே நிராகரிப்பை வீசியபடி கடந்தேகிய காலங்கள்?.
*
பத்திரிக்கை ஆசிரியனாய் அறிமுகமான கண்ணன் நினைத்தவுடன் உருவத்தை விட குரலே முதலில் வந்து நினைவில் நின்றது. அதுதானே அவளுக்கு முதலில் அறிமுகமானது
?உங்க எழுத்துக்களை படித்திருக்கின்றேன்? எனும் அறிமுக குரலப்படியே மூளையில் தேங்கிப் படுத்து இடத்தை அடைத்துக் கொண்டது வெறும் வாசகனாய் எங்கோ இருந்து பேசுபவனாய் மட்டுமே மூளையில் உரைக்கத் துவங்கிய அந்த உரையாடல் எந்த இடத்தில் தடம் மாறியது அவள் மறந்து போக முடியாத ஒன்றாக?
எழுத்தை இரசிப்பவனாக உள் நுழைந்தவன் மெல்ல என் எழுத்தை தீர்மானிப்பவனாக எப்பொழுது ஆகிப் போனான். தெரியாது அவனது உரையடல்கள் மெல்ல ஒரு தேவையை எனக்குள் எழுப்பி விட்டிருந்தது அந்த பேச்சில் குரலில் ஒரு சுகம் புலப்படத் துவங்கியிருக்க அதற்கு அடிமையாகின்றேனோ எனும் சந்தேகம் வர எனக்கு சந்தோச ம் தருபவற்றை நான் நெருக்கமாக வைத்துக் கொள்வதில் தவறென்ன கேள்வியும் எழும்பியது
இந்த கேள்வி எழும்பிய நேரமும் அந்த தொலைபேசி அழைப்பு நினைவுக்குள்ளிருந்து இழுத்து வந்தது
?தீபா என்னப்பா சேய்யுற?? எனும் அதே பெண் குரல்.
?நீ உச்சத்தில் இருக்கும் வரைதான் அதாவது அவனை விட விச்வரூபம் எடுக்காதவரை தான் உனை சந்தோசப் படுத்தும் குரல் உன் ஆணைக்கு கட்டுப் படும் அது கூட நடிப்புதான் நீ அவனுடைய தளமாக மாறி விட்ட பிறகு உன் மேல் நீ அசைய முடியா படிக்கு கட்டிடம் கட்டி சொத்தாக்கி அனுபவ பாத்யதை சொல்லிப் போவான் ஜாக்கிரதை.!
ஜாக்கிரதை எனும் உசார் படுத்தலோடு அமைதிஆகிப் போனது தொலைபேசி . குரலின் போதையில் சுகம் கண்டவளுக்கு அதை விட்டு வெளியேற முடியா சுகம் தெரிய புதையுண்டிருப்பதை, புதையுண்டு கொண்டிருப்பதை உணராத எண்ணம் எப்படி ஏற்படாமல் போனது.
சுகமான கதகதப்பென்று உணர்ந்தது தூர இருக்கும் வரைதான் நெருங்க நெருங்க எரித்து விடும் என்று உணராதவளாகவே இருந்தாள் இன்னும் இன்னும் நெருக்கமாக நேர்ந்த சந்தர்ப்பங்கள்
பத்திரிக்கையில் அவளது படைப்புகள் அடிக்கடி வர ஆரம்பித்திருந்தன அவளைப் பற்றியும் கூடுதலான செய்திகளோடு அவள் அறிவின் பால் அவனுக்கிருந்து ஈர்ப்பென்று பெருமிதம் கொண்டு அந்த நேசத்தை மறுக்காமல் இருக்க, மறுக்காததை அவனுக்கானதாய் அவன் மாற்றி வாசிக்க அதையும் மறுக்க அவளுக்கிருந்த தயக்கம் தொடர்கின்றன.
திறந்திருந்த பக்கத்து விட்டுக் கதவின் இடுக்கு வழி வழியும் ஒளியை தன்னையறியாமலேயே பார்த்து விடும் சுவாரசியம் இருக்கின்ற மனம் அவள் வாழ்வின் ஏக்கம் மெல்லக் கசிய அதன் ஒளியை சுவைத்தபடி அவன் உள் நுழைய எப்படி அனுமதித்தேன்
வேண்டியிருந்தது எனக்கு தோள் சாயும் சுகம் தேவையாயிருந்தது. அடுப்படி கனல் தாண்டி படுக்கையறை புழுக்கம் தாண்டி உறவுகளில் சலிப்பான விசாரிப்புகள். தாண்டி குழந்தைகளின் அன்புத் தொல்லை தாண்டி எனை மடி சாய்த்துக் கொண்டு முடி கோதும் நேசக் கரம் தேவை பட்டது. காற்றின் அலையில் மிதந்து வந்த கதிர் வீச்சுகள் செல்பேசியில் குரலாக அது எனக்கு சுகமானது
எப்போவாவது இடையிடை அவளின் குரலும் ஒலித்துப் போகும்
?உன் மடி சாய்தலில் அவன் குளிர் காய்ந்து விட்டுப் போய் விடப் போகின்றான். போனால் பரவாயில்லை நீ தாங்குவாயா? அவன் உன்னை மடி ஏந்தாது அவனை மடி ஏந்தும் ஒன்றாகவே உனை நினைக்கிறானப்பா?
குரல் சொல்ல பயம் வந்தது யார் அந்த எண் தேடினாள். எத்தனையோ உருட்டி பெருவிரல் வலிக்க செல்பேசியை தூர எறிந்தாள். விழுந்த வேகத்தில் அடித்தது மீண்டும், கண்னன் என காண்பித்துக் கொடுக்க எழுந்து பத்திரிக்கை சமீபத்திய கூட்டம் எழுத்தாளர்களின் பேசப் பட்ட அந்தரங்கங்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது அவள் தனியாக நீண்ட நேர தனிமையில் இருக்கக் கூடிய நேரம் என்று தெரிந்து தான் அழைத்திருக்கின்றான், நீண்ட நேரப் பெச்சில் மனம் நெகிழத் துவங்கியிருந்தாள்.
?உங்கள் உணர்வுகளைப் பற்றிச் சொல்லலையே, உங்கள் குரலில் சிரிப்பு தாண்டி ஒரு சோகம் தெரியுதே?
அவள் யோசிக்கத் துவங்குமுன் இன்னொரு அழைப்பு இடைவெட்டியது
?பொறுங்கள்? என்று சொல்லி விட்டு யாரென்று தெரியாத அந்த அழைப்பை ஏற்க
?ஒப்புவித்து விடாதேப்பா உன்னை. வெறும் புளியமரத்தடி ஜோசியன் கூட இப்படித்தான் கேள்வி கேட்டு பரிகாரம் சொல்லி சம்பாதித்து போவான்.
அதே எண் மீண்டும் இடைவெட்டி கண்ணனோடு தொடர்ந்தாள்
ஆசைகள் ஏக்கங்கள் பகிர்ந்தாள் அவளுக்கான நண்பன் என்று மனம் சொல்லியதால். அது உறுதியில்லை உறுதியானதாய் இருக்க வேண்டும் என நம்பிய மனத்தின் பிரதி பலிப்பு
?எப்போ எழுதுவீங்க இரவுகளிலா??
கேள்வியின் தூண்டில் அவளின் கண்ணுக்குத் தெரியாமல் போனது.
ஆம், எல்லாரும் உறங்கிய பிறகு எழுதுவேன். அப்போதானே எனக்கான நேரம் கிடைக்கின்றது.
?அப்போ உங்க வீட்டுக் காரர் உங்களை எதிர்பார்க்க மாட்டாரா?? கேட்டும் விட்டு ?சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் . தவறாக கேட்டு விடவில்லையே? அடுத்தடுத்து பேசியவன் தவறொன்றும் இல்லை என்று அவள் சொல்லும் முன்னமே, மேலும் கேள்விகளை நெருக்கமான குரலில் முன் வைக்க, தொடர்ந்து தன்னை அதிகம் எதிர்பார்க்காது இயந்திரமாய் உழைப்பின் கவனத்திலேயே ஆழ்ந்து போன கணவனும் அவளும் சார்ந்த வாழ்வு பேசப் பட்டது.
பேசி முடித்த போது ஏதோ கனம் குறைந்திருப்பதாய் பட்டது
அந்தரங்கங்களின் கனத்தை இதுவரை தனியாகச் சுமந்த கையிடமிருந்து பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் எண்ணியும் இந்த தருணத்தின் சுவை ஒன்றே வாழ்நாளுக்கும் போதுமென்ற எண்ணமும் உருவாகியிருக்க , எதிர் முனையில் ஒலித்த குரலுக்கு அது போதுமானதாக இருந்ததா?
இல்லை அந்த குரலுக்கு இன்னமும் வேறேதோ தேவையாயிருந்தது, தொடர்ந்த சந்தர்ப்பங்களிலும் கூட்டங்களிலும் கூட்டங்கள் துவங்குவதற்கு முன்னரும் துவங்கிய பின்னரும் இடைத்த தன்னந் தனியாக சந்தர்ப்பங்களிலும் வேறேதோ எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது அவளும் உணர்ந்த படியே இருந்தாள். அவன் பேசுகையில் நெருக்கத்தில் அவளைச் சூழ்ந்த அவனது உடல் வெப்பத்திலும் , நேர்பார்வை பார்க்கத் தயங்கி பார்வை தவழவிட்டு மேயவிடும் தனமும் அவளுக்கு கேட்கும் மூச்சின் ஓசையுமென அவன் தன்னை எதிர்பார்க்கின்றான் என்ற நிறைவு தந்த சந்தோசம் கணவனோடு அவளை ஒப்பிட வைத்தது. எத்தனை நாள் காத்திருப்பை அலட்சியப் படுத்தி உண்டு தொலைக்காட்சி பார்த்து ஆர்வமாய் பகிர்ந்து கொள்ள நெருங்கிய தருணமெல்லாம் தூர இருந்தவனை நினைக்க
?பார் பார் என்னையும் எதிர்பார்க்கும் நெஞ்சமிருக்கு? என்று கர்வம் சூடினாள், மனது கனத்தது மகிழ்ச்சியில் அதையும் கை தாங்கிக் கொள்ளத் தேடிய போது தொலைபேசி அடித்தது. அடித்த இசையில் ஓசையில் அழைப்பது யாரென்று
மூளையில் உரைக்க ஓடிப் பொய் எடுத்து அழுத்த
?கண்ணன்னு நினைச்சியா நான் தாண்டா தீபா நீ அருகிருந்த நெருக்கங்களை யாருமறியாது வெறும் இலக்கியப் பேச்சாய் தனிமையில் பகிர்ந்து கொண்ட தருணங்களை பார் வேறெதுவாகவோ மாற்றி அவன் நண்பர்கள் வட்டாரத்தில் பெருமை பேசிப் போகின்றான். தீபா சிக்கிக் கொள்ளாதேடா!?
சொல்லி எப்பவும் போல ஓய்ந்து போனது.அடிக்கடி காண நேருகையில் அதன் மதிப்பை தொலைத்து விடுகிறோமோ தொலைபேசி எச்சரிக்கைகள் தூரப் போட்டு கண்ணன் பேசிய பேச்சின் சுகங்களை நினைத்து எடுத்து முகர்ந்து சுவைத்து அணைத்து எல்லா வேலைகளுக்கும் நடுவில் இதையே உற்சாகமாய் எடுத்துக் கொண்டு கடந்து விடுகின்றாள்
பழனி மலைத தொடரில் தன் தந்தை வழி காடுகளுக்கு ஒரு நாள் சென்றிருந்த தருணத்தில் வேலியில் யாரும் பறிக்காது அழகழகாய் வண்ண வண்ணமாய் செடிகள் பார்க்க ஒரே மாதிரியாய் இருந்த போதும் மஞ்சள் வெள்ளை வாடாமல்லி என பல்வேறு நிறங்கள் நாதஸ்வரக் குழலாய் பூத்து விரிந்திருந்த அதுவும் மாலை 5 மணிக்கு சரியாக விரிந்து சிரிக்கும் ? அந்தி மந்தாரை? செடியிலிருந்து எடுத்து வந்த கருப்பு நிற விதைகள் வீட்டு தொட்டியில் போட்டு வைக்க ஒரு மாதம் இருமாதம் ஆகியும் முளைக்காது போய் ஒட்டு மொத்த நினைவெல்லாம் மறந்திருந்த தருணத்தில் மழைத்துளி சன்னல் வழி வீழ்ந்து வைக்க முளைத்துக் கிடந்தது இறந்த காலம் இரு இலைகளாய் . வருடங்கள் கடந்து விடுகின்றன. தொட்டிக்குள் பூக்கச் சாத்தியப் படாது பசுமை மாறாதிருந்தபடி பூக்க மறந்த செடியின் கோபம் புரிந்து மண் தரையோடு வேர் விட தொட்டி அடி மட்டும் உடைத்து வைத்திருக்க தினமும் நீர் ஊற்றுகையில் எல்லாம் மொட்டரும்பு தேடிப் பார்க்கிறேன் வாழ்வில் தேடிக் கிடைக்காத சந்தோசத்தையுப் போல
ஆச்சு இரு வருடங்கள் கண்ணனோடு பழகத் துவங்கி தினம் தோறும் பேசிய காலங்களுக்கு பின் தீர்ந்து போகக் கூடுமோ என்று நினைப்பு இவளுக்குள் தோன்றத் துவங்க நட்பு தீருமா கேள்விகளோடு தொலைபேசி எடுக்கின்றாள்
கண்ணன் பெயர் திரையில் உயிர்க்க அவள் அழைத்த மணிச்சத்தம் கண்ணனுக்கு எட்டாமலேயே போய் முடிகின்றது, நினைப்பதை சொல்லுங்கள் நட்பு துக்கத்தையும் பகிர்வதற்காக என்று பேசிய அதே தொலைபேசி இன்று வேலையிருப்பதாய், தான் யாரோடு என்ன வேலையாக இருக்கின்றோம் என்பதை மறைக்க, வேலையாயிருப்பதாய் சொல்லி மௌனம் காக்கின்றது. அவனது சமீப கால நெருக்கங்கள் , அந்தரங்கள் உணரத் துவங்கியிருந்தாள். பக்கத்தில் வந்துவிட எல்லா பக்க பார்வைகளும் சாத்தியமாகின. பல கூட்டங்களுக்கு தன்னோடு வரச் சொல்லி அழைத்தான் கண்ணன்
ஒரு முறை அவனோடு சென்றிருக்க நிகழ்வு நடக்கின்ற இடம் நெருங்க ஆட்டோவிலிருந்து இணைந்து இருவரும் இறங்க தன் புத்தகங்களோடு சேர்ந்து கண்ணனதையும் அவள் துக்கிக் கொள்ள நேரம் செல்லச் செல்ல அந்த சுமை பாரமாகத் தோன்றியது. புத்தகங்கள் சுமையினாலா இல்லை., நிச்சயமாக இல்லை இதை விட அதிக சுமைகளையும் அலட்சியமாய் தூக்குபவள் தான் ஆனால் சந்திப்புகளிடையே எதிர் பட்ட இலக்கிய நண்பர்களிடையே அவளை அறிமுகப் படுத்திய விதமும் அவன் நினைக்கின்ற ஒன்றை இவள் செய்யக் கூடியவளாக எல்லாரிடமும் நடைமுறைப் படுத்தின விதமும்
புத்தகங்களை எப்பொழுது போட்டு ஓடுவோம் எனத் தோன்றியது
? நல்லா காபி போடுவாங்க? இது கண்ணனது அறிமுகம் என்னைப் பற்றி. ?இவ்வளவு தானா? இவ்வளவுதானா , வாயிருந்த எச்சிலை துப்பி விட அதே வேகம் கண்ணன் மனதிலிருந்து தூரப் போய் விழுந்தான்.
என் புத்தகத்தை தாங்களேன்,
பேனா தாங்க தீபா
இப்படியாக அவன் உத்தரவுகள் தொடர உச்சகட்டமாக என்னருகில் வந்து நிற்பதற்கும் கண்ணன் அருகில் இல்லாத நேரங்களில் என்னோடு பேச தயங்குவதுமாய் சுற்றியிருந்தவர்கள் இருப்பதாய் உனர்க்கின்றேன்,
ஆம் எல்லாமே உணருதல்கள் தான்
கூப்பிட்டு, ஏன் இப்படி நடந்தது? நடந்து கொண்டாய் என்று கேட்டாள் அப்படி நடந்ததாய் நான் சொன்னதற்கு சாட்சியம் கேட்பான். ஆம் ஒட்டுமொத்தமாய் அவனுக்கானவளாய் நிறுவப் பார்க்கின்றானென்றும் அதேநேரம் புதிதாய் அறிமுகம் செய்து வைக்கின்றான் தேவியை, எல்லார்க்கும் .அதிலும் முக்கியமாய் அவன் பத்திரிக்கை தொடர்ந்து நடத்த தேவைப்படும் பண ஆதரவும் பதவி ஆதரவும் உடைய நபர்களிடம் நெருக்கமாக அவளைப் பழக விடுகின்றான்.பார்வையில் வெற்றுப் பார்வையில் வெகு சுதந்திரமாய் உரிமையோடு பழகுவதாய் தோன்றினாலும் நுண்ணரசியல் நோக்கோடு உள்ளுணர்வின் விழிப்பில் தேவியை பயண்படுத்திக் கொண்டிருப்பது உறுத்த நான் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிலிருந்தும் வெளியேறத் துவங்க நினைத்த கணத்தில், மெல்ல வெளியேறத் துவங்குகிறார்கள் தேவியும் இன்னும் சிலரும், பதவிகளின் பல்லக்கில் மாலை மயங்கும் வேலையில் காணாமல் போகின்றார்கள்.
அந்த நிகழ்வின் நாளை என் கண்ணிலிருந்து மறையவிடப் பார்த்து தோற்றுப் போய் கண்ணனிடம் தொலைபேசிக் கேட்கின்றேன். தேவி பற்றி எனது சந்தேகத் தீயின் நெருப்பின் நிஜத்தில் கனல் அடித்திருக்க வேண்டும் தொலைபேசி எடுக்க மறுக்கின்றான்
செத்த பின் தான் தாஜ்மஹால்கள் .தாஜ்மகால்கள் கட்டப் போவதாய் சொல்லுகிறவர்களையெல்லாம் உயிர் பறிக்க திட்டமிடுபவர்களாய் சந்தேகப் படுவதில் என்ன ஆச்சரியம். கொஞ்சம் விட்டால் உயிரோடும் சமாதியாக்கும் வேலை நடக்கும். விலகல் சாத்தியமானதை உணரத் துவங்கிய போது தான் தீபாவுக்குள் தான் பகிர்ந்து கொண்ட அந்தரங்கங்கள் அடகுப் பொருளாய் மாறியிருப்பதன் வலி உணர்ந்தாள். அவள் உணர்வுகளை பொருளாக்கி பூட்டி விட்டாலும் அதன் பேரால் உரிமை கோரவும் அவனுக்கு தான் துணை போய் விட்டதை எண்ணி எண்ணித் தூக்கம் போக, மன அழுத்தம் அவளை பீடிக்கத் துவங்கவும் தான் முதன் முதலாய் குடும்பம் அதிரத் துவங்கியது.
மிகச் சாதாரணமாய் வேலைகளோடு இருப்பாள் சில நேரம் எல்லாம் தொலைத்தபடி வெறித்த பார்வையில் செல்பேசியோடு பேசிக் கொண்டிருப்பாள் ஆம் ! செல்பேசியோடுதான் அந்தப் பக்கம் வேறு யாரும் பேசவோ கேட்கவோ இருந்திருக்க மாட்டார்கள் வீடு அவளது தனிமையை உணர்ந்த நேரம் காலம் கடந்திருந்தது. இதோ மருத்துவமனையில் மருத்துவரின் அறையில்
*
என் முன்னே ஒரே ஒளி வெள்ளம் ஒளியின் முன்னால் ? முன்னாலா அல்லது பின்னாலா எதோ ஒன்று ஒளியைத் தவிர அனைத்தும் இருளாகத் தெரிய ஒளி என்னை விழுங்கப் பார்க்க இடையே எண்கள் தோன்றித் தோன்றி மினுங்கிப் போனது . எண்களால் காப்பாற்றப் பட்டேனா அல்லது எண்கள் சுழலுக்குள் இழுத்ததா?
கேள்விகளுக்குள் தேடியபடி அவள் விழிகள் அலைபாய குரல் கேட்டது மருத்துவராக இருக்கலாம் பேச்சு வருடிக் கொடுத்தது கண்ணனது போலவா?. குரல் ஆசுவாசப் படுத்தியது தூங்கச் செய்தது. உள்ளுக்குள் குரல் தந்த மகிழ்வு இருக்க , மனசு கணத்து கண்ணீர் வரும் போல் இருந்தது.யார் என்னுடன் பேசுகின்றார்கள் சரியாகத் தெரியவில்லை ,சுகமாக இருக்க சுமந்திருந்த பாரம் இறக்கப் பட்டிருப்பதாய் உணர தூங்கிப் போயிருந்தேன். எவ்வளவு நேரம் அல்லது வருடங்கள் அல்லது சென்மங்கள் தூங்கியிருப்பேனோ தெரியாது. மணியடிக்க கைகள் தலைக்கு அடியில் துழாவின. செல்பேசி மினுங்கிய படி அடிக்க, கண்ணனாயிருக்க கூடாது மனம் நினைக்க,
ஆம் இது அவளது தொடர்பேதான் ஆவலோடு அழுத்தினேன்
?என்னப்பா செய்யுறே தீபா??
உடைபட்ட மனமிருந்து கசடுகளாய் உள்ளுக்குள் கட்டியிருந்த நினைவுகள் ஓடத் துவங்கியது
கண்ணன் ஒதுக்கத் துவங்கிய ஆரம்பத்தில் மனம் அழுது புரண்டதையும் பின்னால் முறுக்கேறி நிம்மதியாய் அவனையும் இருக்க விடுவதில்லையெ ன தொலைபேசியில் கேட்டு விட்ட கேள்விகள் .
தீர்மானித்து விட்டாள்
அவள், இனி அவன் வழி நகருவான் , இவளை தனது நட்பை பத்திரப் படுத்த தெரியாதவள் என்று பிரகடனப் படுத்திய படியும் நகருவான் என மனது உரக்க அலறிய போது தீர்மானித்து விட்டாள்.
அவனை அப்படி பிரகனடப் படுத்த விடுவதில்லையென. .பல்வேறு நபர்கள் பற்றிய அந்தரங்கங்கள் என்று அவன் பகிர்ந்து கொண்ட விடயங்களில் ஒன்றாக இனி தன் விசயமும் மாறிப் போகும் என்று உணர்ந்த போது அதை அவனுக்கும் ஏன் தனக்கும் கூட இல்லாது உடைத்துப் போட்டு விட தீர்மானித்து விட்டாள்.
அவன் வெளியே பெருமை அடித்து விட முடியாத படிக்கு அவளது தொலைபேசி தொந்தரவுகள் தொடர அவளை ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட இன்னும் சிலரின் தொடர்போடு காய் நகர்த்திய கண்ணன், மூக்குடைபட்டு இரத்தம் வந்ததையும் அவளை மூக்கால் அடித்து அதனால் வந்த புண்ணென்று ,விழுப்புண்ணாக மாற்றித் திரிய, வெளியே சொல்ல முடியாது அவன் மனம் அறுத்துக் கிடந்த அந்த நிகழ்வே தண்டனையாக இருக்கும் என்று இப்போது ஒதுங்கி தனித்து நிற்க முயலுவதாய் பேசிக் கொண்டிருக்க
குரல் தோளில் தட்டியது. பாராட்டாக
?அப்படித்தாண்டா செய்யனும் இந்த நாய்களை உனது நட்பை பத்திரப் படுத்த தெரியாதவனாய் பிரகடனப் படுத்து அதில் இன்னும் தூள் தூளாகி நொறுங்கி போவான் நீ மூழ்கி முத்தெடுத்து மீண்டு வந்தவள் உன்னை வீழ்ந்த நினைத்த போது உயரத் தாண்டியும் மூழ்கடிக்க நினைத்த போது முத்தெடுத்தும் மீண்டு வந்தவள் இனி என் குரல் தேவையில்லை வாழ்த்துக்கள்!?
அணைந்து போன தொலைபேசியை உயிர்பித்து இதுவரை பேசிய எண்ணைத் தேடினாள் அது அங்கு இல்லாது போயிருந்தது . கட்டிலிலிருந்து இறங்கி அறை விட்டு வெளிவந்து இன்றைக்கு வாங்க வேண்டியதை மனது பட்டியலிட்டது.
*
தான் தனித்துவமானவள் யாராலும் தன் வேகத்தை மிஞ்சி கூட வந்து விட முடியாததன் நிதர்சனம் உரைக்க , உண்மைகளின் அடிப்படையில் மன அழுத்ததிலிருந்து மீண்டு முன்னேறத் துவங்கியிருந்தாள். வேகமாக வர முடியாதவர்களுக்கு கொஞ்ச நேரம் நின்று , நின்ற நேரத்தில் அன்பைத் தந்து அவள் தரக் கூடியவள் யாரிடமிருந்தும் பெறக் கூடியவள் அல்ல என்பதில் மமதை சூடினாள்
கண்ணன் நின்று போனவனாகி , புள்ளியாகி பின்னாளில் இல்லாதவனாய் மாறிப் போயிருந்தான். எல்லாம் மறந்து மகிழ்ந்து , நிறைவாய் வாழ்ந்த பொழுதொன்றின் மாலை வேளை யாரும் வீட்டிலில்லாப் பொழுதில் தொலைபேசி அடித்தது.எழுதிக் கொண்டிருந்த வரியை முடித்து விட்டு இடது கையால் செல்பேசியை பார்க்காமலேயே அழுத்தினாள். தொலைபேசியில் சுகம் தேடும் மனது அற்றுப் போயிருந்ததால் அதை தொலைபேசியாக ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்ற மனநிலை. உள்ளிருந்தது எப்போவாவது பள்ளம் விழுந்து கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ பிடிமானமாய் ஒலித்த குரலின் மேல் மட்டும் நன்றி கசிய நினைவு நின்று போகும்
?வணக்கம், நான் தீபா பேசுறேன் . சொல்ல எதிர்முனையிலிருந்து
? தேவி பேசுகின்றேன் எப்படி இருக்கீங்க?
குரல் கெட்டு சுதாரித்தாள். ஏதேதோ நண்பர்கள் பிரசுரமாகிய கவிதைகள் பத்திரிக்கைகள் என்று தேவி பெசிக் கொண்டே போக திடீரென தனக்கு ஏன் போன் செய்கின்றாள் . தான் முன்பு பட்ட கஷ்டங்களை இன்று இவளும் கண்ணனோடு இணைந்த பழக்கத்தில் அநுபவிக்கிறாளோ அவளது சந்தேகம் உறுதியானது
?நாய்க்கு வேலையில்லை நிக்கவும் நேரமில்லை? தேவி சொன்ன இந்த வசனத்துக்கப்புறம் ஒன்றுமே கேட்கவில்லை காதுகளில் . இது இது கண்ணனின் ஆஸ்தான வசனம். கண்ணனுடன் நெருக்கமாகப் பழகிய காலங்களில் தனக்குள்ளும் கண்ணனிடமிருந்து ஒட்டிக் கொண்ட வசனமிது. நெருக்கமாக பழகுகிறவர்களுக்கு அவர்களே அறியாது ஒட்டிக் கொள்ளுகின்ற தொற்றுவியாதியும் கூட. தனது சந்தேகம் ஊர்ஜிதமாக, பேச்சில் கவனம் செலுத்தினால். வைத்தியம் செய்ய வேண்டிய தேவை உணர மனது கிடந்து அடித்தது,
?தேவி உன்னை வித்துப் பிழைப்பான் கண்ணன். பின்னாளில் உணர்வாய் மனம் உரத்துச் சொன்ன போதும் வாய் சொல்ல முடியாது மௌனம் சூடியது ? எவ்வளவு சாணக்கியத்தனம் இந்த ஆண்களிடம் இரு பெண்களின் ஏன் பல பெண்களிடம் ஒரே நேரத்தில் பழகிக் கொண்டு ஒருவர் இன்னொருவருடன் நெருக்கத்தை வெளிப்படுத்தி விடாமல் இருக்க அவர்களுடைய பொசசிவ்னெஸ்சை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைப்பு தோன்ற பெண்கள் மனம் விட்டுப் பகிர்ந்தால் கண்ணன்களின் சுவடு காணாமல் போகும் , மனம் வன்மம் சூட வார்த்தைகளில் விசம் தோய்த்தாள் ஆம்! விசம் முறிக்க விசம் தானே மருந்து ?கண்ணன் வசனம் உன் வாயில் வருதே நெருக்கமான பழக்கமோ? பார்த்து சிரிப்புக்குள் சோகம் தெரியுதேன்னு சொல்லியிருப்பானே? உன் எழுத்து யாரிடமும் இல்லைன்னு சொல்லியிருப்பானே? உடல் மேல் ஆசைப்படாதவனாய் தொடநேர்ந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி வெறும் முடி கோதி அன்பாய் தந்தாய் சொல்லிப் போனானா? அதை விட நேரடியா படுக்க வர்றியானு கேட்கிறவன் யோக்கியன்.?
கவனமாயிரு நான் சொன்னதையெல்லாம் உனக்கும் நடந்திருக்கும் எனக்குத் தெரியும் இதே வசனம் பலபேர் அவன் சொன்னதா சொல்லியிருக்காங்க அவன் பிழைப்புக்கு நம்மை ஆட்டுவிச்சு பார்ப்பான். வேண்டாம்கிற போது அத்து விடவும் ஆள் தேடுவான் ?
எதிர் முனை மௌனமாய் இருந்தது. யோசிக்கத் துவங்கியிருந்தது ஒத்துக் கொள்ளவும் பயம் இருக்கும் தானே
இருக்கக் கூடாது என தான் தீர்மானிச்சதை நினைச்சு பெருமையா எனக்கே இருக்கு
?அடுப்பில பால் வைச்சிருக்கேன் . பிறகு பார்க்கலாம்?
வேணும்னே தொடர்பைத் துண்டித்தாள்
தொலைக் காட்சியில் மாய்ந்து மாய்ந்து காதலனுக்காய் உருகி உருகி பாடிக் கொண்டிருந்தாள் ?வசீகரா? என்று கதாநாயகி. இல்லை யார் சுகத்துக்காகவோ யார் பிழைப்புகாகவோ , யாரோ பாட வைத்துக் கொண்டிருந்தார்கள் கை கொண்டே கண் குத்தும் வேலைகள் தொடர்கின்றன.
மனது நிறைந்து கிடந்தது , பசி எடுத்தது. சோத்தை வட்டிலில் போட்டுக் கொண்டு அள்ளி அள்ளி சாப்பிட்டாள்
அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

(புதிய பார்வையில் வெளி வந்த சிறுகதை)
- காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!
- 7 th FILCA International Film Festival
- தமிழரைத் தேடி – 2
- தங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்
- அற்றைத் திங்கள்
- சுழல்
- கோடை விடுமுறை (சிறுவர் பாடல் )
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.
- தனியறை: 1
- கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்
- கவிதைகள்
- சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
- தமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்
- அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!
- சிவாஜி – சிறப்புப் பார்வை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16
- கடிதம்
- ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு
- இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு
- பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்
- அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்
- அலைகளின் விளிம்பில்
- ஹைக்கூ
- அருள்வாக்கு
- இரவில் காணமுடியாத காகம்
- பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்
- கவிதைகள்
- மலையாளக் குடிவார மசோதா – பெரியார்
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 7
- மடியில் நெருப்பு – 35