‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

வெண் தாடி வேந்தர்.


ஆசிரியர் அவர்களே!

வணக்கம்.

மலர் மன்னன் ஆகசுட்டு 6ம் தேதி திண்ணையில் எழுதிய ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரையை இப்படி முடிக்கிறார்:

”எனவே ஆரியம் போல் வழக்கொழிந்து என்று நாகரிகமாகவும் செத்த மொழி என்று இழிவாகவும் சமஸ்க்ருதத்தை விமர்சிக்கத் தேவையில்லைதானே?”

இதற்கு முன் கட்டுரையினுள்ளே, இம்மொழி பொதுமக்களால் சீந்தப்படவில்லை என்றும், மேட்டுக்குடியினராலேயே பேணப்பட்டதுமென்றும் சொல்லிவிட்டார்.

இப்படி பொதுமக்களால் சீந்தப்படாத எம்மொழியும், வழக்கொழிந்த மொழிதானே?

மொழியியலாளர்கள், இப்படிப்பட்ட மொழியை, ஆங்கிலத்தில் Dead Langauge என்றுதான் சொல்கிறார்கள்.

அதன், தமிழாக்கம், ‘செத்த மொழி’தானே?

அது, எப்படி, ‘இழிவான விமர்சன்ம்’ ஆகும்?

சரிதானே?

இவண்

வெண் தாடி வேந்தர்.

karikkulam@gmail.com

Series Navigation

வெண் தாடி வேந்தர்.

வெண் தாடி வேந்தர்.