ஸுகினி சட்னி (Zucchini chutney)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பி.என். விசாலாட்சி (விசாலம்மாள்)


தேவையான பொருட்கள் (Ingredients)

ஸுகினி – 2 (நன்குகழுவி துண்டுகளாக செய்தது)

சிகப்பு மிளகாய்- 1; பச்சை மிளகாய்-1;

உளுத்தம்பருப்பு + துவரம் பருப்பு -1 + 1/2 தே. க. (tsp)

சீரகம்- 1/4 தே. க. (tsp)

பொட்டுக்கடலை- 1 தே. க. (tsp)

உப்பு – 1/2 தே. க. (tsp)

iஞ்சி(Ginger)-சின்னத்துண்டு

புளி – 3 முந்திரிப்பருப்பு அளவு

தக்காளி – 1 (துண்டுகவளாகவும்)

எண்ணை – தே. க. (tsp)

பெருங்காயத்தூள் சிறிது

பேரீச்சம் பழம் – 2(Dates) அல்லது வெல்லம் சிறுதுண்டு

செய்முறை (Method)

1. வாணலி அல்லது நான்ஸ்டிக் ஸாஸ்பானில் எண்ணையைச் சூடாகி, மிளகாய்களை ஒடித்து-

பருப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொளவும்.

2. அதே வாணலியில் ஸுகினி, தக்காளி துண்டு போட்டு நன்கு வதக்கி எடுத்தபின், சிறிது

ஆறவைக்கவும்.

3. உப்பு, புளி, பேரீச்சை, இஈஞ்சி, பொட்டு க்கடலை, மிளகாய் துண்டுகள் சேர்த்து

ஸுகினி-தக்காளியுடன், மிக்ஸி யில் (blender) அரைக்கவும். நன்கு சேர்ந்ததும், பருப்பு-சீரகம்மும்

சேர்த்து

கரகரப்பாக மீண்டும் அரைத்து கலந்து எடுத்து பாட்டில் அல்லது. கார்னிங் டிஷ்ஷில் எடுத்து

வைக்கவும். பிரிஜ்ஜில் வைத்தால் 2-3 தினங்கள் வரை உபயோகிக்கலாம்.

பி.கு. (P.S.)

-அரைக்கும் போது, சிறிது ஜலம் தேவையானால் தெளித்து அரைக்கலாம்.

– ஸுகினி காலத்தில் (சீஸனில்) நிறைய அரைத்து எடுத்து, வாணலியில் 2-3

தே. க. (tsp) எண்ணையை சூடாக்கி சிறிது கடுகு தாளித்து சட்டினியை போட்டு நன்கு வதக்கி

ஜலமில்லாம்ல் சுருண்டு வரும்போது எடுத்து ஆறியதும். பாட்டிலில் போட்டு பீரிஸரில் அல்லது

பிரிஜ்ஜில் வைத்தால் 15 தின்ங்கள் வரை உபயோகிக்கலாம்.

இiைதுப் போல் செளவ் செளவ், (Chayote squash), பீர்ககங்காய், கத்தரிக்காய், முதலியனவும்

சட்னி செய்து வைகலாம். உப்பு காரம் அவரவர் விருப்பம் போல் அதிகம் தேவையானால் சேர்த்து அரைக்கலாம்.

tpsmani@hotmail.com

Series Navigation